சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகமாகிறது 2025 Kia Carens

shreyash ஆல் மார்ச் 12, 2025 08:44 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
106 Views

2025 கியா கேரன்ஸ் -க்கான விலை விவரங்கள் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • புதிய வடிவிலான ஹெட்லைட்கள், புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.

  • சென்டர் கன்சோல் மற்றும் டாஷ்போர்டு செட்டப் ஆகியவை புதிதாக இருக்கலாம்.

  • டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ADAS போன்ற வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தற்போதுள்ள கேரன்ஸில் இருக்கும் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் போன்ற அதே இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

  • விலை ரூ.11 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கியா கேரன்ஸ் இப்போது மிட்லைஃப் அப்டேட்டை பெற தயாராகியுள்ளது. இது வரும் ஏப்ரல் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 கேரன்ஸ் காரின் வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்கும். மேலும் புதிய வசதிகளும் சேர்க்கப்படலாம். இருப்பினும் இது ஏற்கனவே இருக்கும் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் தொடரும். 2025 கியா கேரன்ஸ் -க்கான விலை விவரங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட கேரன்ஸ் -ல் இருந்து எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.

வெளிப்புறத்தில் உள்ள அப்டேட்கள்

முந்தைய ஸ்பை ஷாட்களில் பார்த்தது போல் 2025 கியா கேரன்ஸின் ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் பம்பர் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும். ஒட்டுமொத்த வடிவம் பெரிதும் மாறாமல் இருக்கும். புதிய வடிவிலான அலாய் வீல்கள் மற்றும் ஆல் LED டெயில்லைட்களையும் கொண்டிருக்கும்.

கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்

புதுப்பிக்கப்பட்ட கேரன்ஸின் இன்ட்டீரியரில் நிறைய விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கலாம். புதிய ஏசி வென்ட்கள், புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோல் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் இருக்கும். இது கான்ட்ராஸ்ட் கலர் சீட் அப்ஹோல்ஸ்டரியையும் பெறலாம். வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகள் அப்படியே இருக்கும். புதிய கியா சிரோஸில் காணப்படுவது போல் டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் இது வரலாம்.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும். முந்தைய ஸ்பை ஷாட்டில் பார்த்தது போல இது 360 டிகிரி கேமராவைப் பெறலாம். மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழுமையான தொகுப்புடன் வரலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கியா கார்கள் அனைத்திலும் இது கிடைக்கிறது.

இயந்திர ரீதியாக எந்த மாற்றங்ளும் இருக்க வாய்ப்பில்லை

கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் இப்போது விற்பனையில் உள்ள மாடலை போலவே அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைப் பயன்படுத்தும். விரிவான விவரங்கள் இங்கே:

இன்ஜின்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

115 PS

160 PS

116 PS

டார்க்

144 Nm

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

N/A - நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்

iMT - இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்)

DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா 2025 கேரன்ஸ் விலை ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் மாருதி எர்டிகா, மாருதி XL6 மற்றும் டொயோட்டா ரூமியான் ஆகியவற்றுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும். மேலும் இது மாருதி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஆகியவற்றுக்கு ஒரு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Kia கேர்ஸ் clavis

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.8.25 - 13.99 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை