சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2025 Honda City ஃபேஸ்லிஃப்ட் உலகளவில் வெளியிடப்பட்டது

honda city க்காக பிப்ரவரி 11, 2025 02:05 pm அன்று dipan ஆல் திருத்தம் செய்யப்பட்டது

2025 ஹோண்டா சிட்டியில் டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பழைய மாடலை போலவே உள்ளன.

  • 2025 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் பிரேசிலில் வெளியிடப்பட்டுள்ளது.

  • இது கிடைமட்டமான டிஸைன் எலமென்ட்களுடன் எலமென்ட்களுடனான கிரில்லை கொண்டுள்ளது.

  • 2025 சிட்டியில் வொயிட் மற்றும் பிளாக் இன்ட்டீரியர் தீம் உள்ளது.

  • இது டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற புதிய வசதிகளை கொண்டுள்ளது.

  • பவர்டிரெய்ன் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி கடந்த 2023 -ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது ஹோண்டா சிட்டியின் அப்டேட்டட் எடிஷன் பிரேசிலில் வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் 2025 ஹோண்டா சிட்டியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய கிரில் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற கூடுதல் வசதிகள் உட்பட சிறிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. 2025 ஹோண்டா சிட்டி மற்றும் இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மாடலுக்கும் உள்ள வேறுபாடுகள் இங்கே.

புதிய கிரில்லுடன் வழக்கமான வடிவமைப்பு

பிரேசிலில் புதுப்பிக்கப்பட்ட ஹோண்டா சிட்டி இந்திய பதிப்பைப் போலவே உள்ளது. ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன. பிரேசிலிய மாடலில் கிடைமட்ட லைன்களுடனான கிரில் உள்ளது. அதே நேரத்தில் இந்திய மாடல் டைமண்ட் டிஸைன் எலமென்ட்களை கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் முன்பக்க பம்பர் மற்றும் ஃபாக் லேம்ப் ஹவுசிங் ஆகியவற்றை இணைக்கும் ஒரே குரோம் ஸ்ட்ரிப்பை ஷேர் செய்து கொள்கின்றன. அவை 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் நேர்த்தியான பின்புற பம்பர் போன்ற ஒரே மாதிரியான வசதிகளையும் கொண்டுள்ளன.

ஒரு வித்தியாசமான இன்ட்டீரியர் தீம்

இந்தியாவில் தற்போதுள்ள ஹோண்டா சிட்டி பெய்ஜ் மற்றும் பிளாக் கலர் இன்ட்டீரியரை கொண்டுள்ளது. அதே நேரத்தில் பிரேசிலிய மாடல் வொயிட் மற்றும் பிளாக் கேபின் தீம் கொண்டுள்ளது. கூடுதலாக இந்திய மாடலில் உள்ள பெய்ஜ் லெதரெட் இருக்கைகளுடன் ஒப்பிடும்போது ​பிரேசிலியன் பதிப்பில் சீட்களுக்கு வொயிட் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது.

மேலும் படிக்க: 90,000 க்கும் மேற்பட்ட கார்களை ஹோண்டா ரீகால் செய்கிறது

புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு டெக்னாலஜி

பிரேசில்-ஸ்பெக் சிட்டி டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்ட் அம்சத்துடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் வருகிறது. வயர்லெஸ் சார்ஜிங் பேட் இப்போது கியர் லீவருக்குப் பின்னால் அமைந்துள்ளது. மேலும் இது 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொண்டுள்ளது. இருப்பினும் வால்யூம் கண்ட்ரோல் டயல் மற்றும் டச்-சென்சிட்டிவ் பட்டன்கள் இந்திய பதிப்பிலிருந்து வேறுபடுகின்றன. செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரியர் ஏசி வென்ட்கள், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற மற்ற வசதிகள் அப்படியே இருக்கின்றன.

அதே பவர்டிரெய்ன்

பவர்டிரெய்ன் ஆப்ஷனில் எந்த வித்தியாசமும் இல்லை. மற்றும் 2025 ஹோண்டா சிட்டி 1.5 லிட்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் அப்படியே தொடர்கிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

பவர்

121 PS

டார்க்

145 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு மேனுவல் / CVT*

*CVT = கன்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

இந்தியா-ஸ்பெக் ஹோண்டா சிட்டி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் டூயல் எலக்ட்ரிக் மோட்டார்களுடன் சேர்ந்து மொத்தம் 127 PS மற்றும் 253 Nm அவுட்புட் வழங்கும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷனை கொண்டுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரேசிலியன் ஹோண்டா சிட்டியில் இந்த ஹைப்ரிட் ஆப்ஷன் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்தியாவில் உள்ள 2025 சிட்டி ஹைப்ரிட் பவர்டிரெய்னைத் தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

பிரேசிலியன்-ஸ்பெக் ஹோண்டா சிட்டி 2025 ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய இந்திய மாடலை விட சற்று அதிக விலையில் இருக்கலாம். அதே நேரம் இப்போது இந்தியாவில் ஹோண்டா சிட்டி -யின் விலை ரூ.11.82 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. 2025 மாடல் ஆனது ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், மற்றும் மாருதி சியாஸ் உடன் தொடர்ந்து போட்டியிடும்

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: சிட்டி ஆன்ரோடு விலை

Share via

Write your Comment on Honda சிட்டி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.6 - 9.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.07 - 17.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை