சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Renault Duster அறிமுகமானது: என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

published on பிப்ரவரி 13, 2024 05:57 pm by rohit for ரெனால்ட் டஸ்டர் 2025

மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.

  • புதிய டஸ்டர் CMF-B இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது.

  • பெரிய முன்பக்கம் , பிக்ஸ்டர் கான்செப்ட் போன்ற சிறிய ஹெட்லைட்கள் மற்றும் Y-வடிவ LED DRL கள் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது.

  • கேபினில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஏசி வென்ட்களை சுற்றி Y-வடிவ இன்செர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • மூன்றாம் தலைமுறை டஸ்டர் இரண்டு டர்போ-பெட்ரோல் மற்றும் ஒரு ஹைப்ரிட் உட்பட 3 பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரலாம்.

டேசியா-பேட்ஜ் கொண்ட காராக ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட டஸ்டர் கார் இப்போது ரெனால்ட் தயாரிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி -யில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இங்கே:

ஒரு புதிய வெளிப்புற தோற்றம்

மூன்றாம் தலைமுறை டஸ்டர், டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட்டில் இருந்து டிசைன் இன்ஸ்பிரேஷன் எடுக்கின்றது, ​​அதன் பாக்ஸி போன்ற அமைப்பை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது ஒரு புதிய கிரில் வடிவமைப்பு இருப்பதை காட்டுகிறது, இது Y- வடிவ LED DRL -களை கொண்ட நேர்த்தியான ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இது வட்டமான ஃபாக் லைட்ஸ்கள் இருக்கும் ஒரு பெரிய ஏர் டேமை கொண்டுள்ளது. வடிவமைப்பில் தனித்துவமாக தெரிவது கிரில் பகுதியில் உள்ள 'ரெனால்ட்' சின்னம் ஆகும்.

பக்கவாட்டில், புதிய டஸ்டர் ஸ்கொயர் வீல் ஆர்ச்சுகள் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்களுடன், மஸ்குலர் தோற்றத்துடன் உள்ளது. பக்கவாட்டில் கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் மூலம் முரட்டுத்தனமாகவும் தோற்றமளிக்கின்றது. குறிப்பிடத்தக்க வகையில், மூன்றாம் தலைமுறை டஸ்ட்டரின் பின்புற கதவு கைப்பிடிகள் இப்போது சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில், இது Y- வடிவ LED டெயில் லைட்ஸ் மற்றும் ஒரு பெரிய ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கேபின் மற்றும் வசதிகளிலும் அப்டேட் உள்ளது

2024 ரெனால்ட் டஸ்டர் காரின் உட்புறம் முழுவதுமாக மாற்றையமைக்கப்பட்டுள்ளது, ஆனால், பழைய மாடலை போலவே, கேபின் உபயோகிக்க இன்னும் நன்றாகவே உள்ளது. தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிரைவருக்கான 7 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் 3டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் புதிய டஸ்டரை ரெனால்ட் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: ஜனவரி 2024 இல் அதிகம் விற்பனையான முதல் 10 கார்கள் இவை

டிரான்ஸ்மிஷன் விவரங்கள்

மூன்றாம் தலைமுறை டஸ்டர், ஹைப்ரிட் மற்றும் எல்பிஜி ஆப்ஷன் உட்பட, உலகளாவிய அளவில் பவர் ட்ரெய்ன்களின் வரம்பில் கிடைக்கிறது. இதில் 130 PS, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 48 V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம், 140 PS 1.6 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 kWh பேட்டரி பேக்குடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த ஹைப்ரிட் செட்டப் ஆகியவை அடங்கும். கூடுதலாக, 1 லிட்டர் பெட்ரோல்-எல்பிஜி மிக்சிங்கும் உள்ளது. 1.2-லிட்டர் யூனிட் நான்கு சக்கரங்களுக்கும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் சக்தியை விநியோகிக்கிறது.

வரவிருக்கும் இந்தியா-ஸ்பெக் டஸ்டருக்கான சரியான இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்திய வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்

மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை ரூ.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். இது மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

r
வெளியிட்டவர்

rohit

  • 45 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ரெனால்ட் டஸ்டர் 2025

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை