2024 Nissan X-Trail கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ 49.92 லட்சமாக நிர்ணயம்
published on ஆகஸ்ட் 01, 2024 06:27 pm by rohit for நிசான் எக்ஸ்-டிரையல்
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
X-டிரெயில் எஸ்யூவி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இது முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்கப்படுகிறது.
-
நிஸான் நிறுவனம் புதிய X-டிரெயிலை ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் மட்டுமே இதை விற்பனை செய்யவுள்ளது.
-
இது ஸ்பிளிட்-LED ஹெட்லைட்ஸ், 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
X-டிரெயிலில் ஆல் கேபின் பிளாக் தீம் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
-
8 இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 7 ஏர்பேக்குகளுடன் வருகிறது.
-
இது 163 PS 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 12V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு நிஸான் X-டிரெயில் கார் அதன் நான்காவது தலைமுறை வடிவில் இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ளது. நிஸான் நிறுவனம் இதை முற்றிலும் பில்ட்-அப் யூனிட் (CBU) வழியாக வழங்குகிறது. இதன் விலை ரூ.49.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். நிஸானின் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யூவி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
ஒரு மிரட்டலான வெளிப்புற தோற்றம்
முன்பக்கத்தில் புதிய X-டிரெயிலில் நீண்ட L-வடிவ LED DRL -களுடன் ஸ்பிளிட்டட்-டிஸைன் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இது குரோம் அலங்காரங்கள் மற்றும் சரவுண்ட்ஸை கொண்ட V- வடிவ கிரில் உடன் வருகிறது.
பக்கவாட்டில் இது 20-இன்ச் அலாய் வீல்களுடன் காணப்படுகிறது மற்றும் சுற்றிலும் தடிமனான பாடி கிளாடிங்கை பெறுகிறது. இந்த கோணத்தில் இருந்து அதன் பெரிய தோற்றத்தை நீங்கள் கவனிக்க முடியும். இது கிட்டத்தட்ட 4.7 மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் புதிய X-டிரெயில் LED டெயில் லைட்ஸ், 'நிஸான்' மற்றும் 'X-டிரெயில்' பேட்ஜ்கள் மற்றும் ஒரு பெரிய ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
நிஸான் இந்தியா-ஸ்பெக் X-டிரெயிலை ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் வழங்கியுள்ளது. இது 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளுடன் வருகிறது. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ஸ்லைடிங் மற்றும் சாய்க்கக்கூடிய 2 -வது வரிசை இருக்கைகள் ஆகியவை போர்டில் உள்ள மற்ற வசதிகளாகும். எஸ்யூவியின் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட விலையில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு ஓட்டுநர் இருக்கை மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற இன்னும் சில பிரீமியம் வசதிகளை நிஸான் வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தொடர்புடையது: Nissan X-Trail ரிவ்யூ: மிகவும் தாமதமாக வந்துள்ளதா ?
பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்
நிஸானின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி இந்தியாவில் ஒரு டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் வழங்கப்படுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
163 PS |
டார்க் |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
CVT |
X-டிரெயில் ஒரு ஃப்ரண்ட் வீல் டிரைவ் (FWD) தோற்றத்தில் லிமிடெட் ஸ்லிப் டிஃபரென்ஷியல் உடன் மட்டுமே கிடைக்கிறது. டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் 12V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.
போட்டியாளர்கள்
இந்தியாவில் நான்காவது தலைமுறை நிஸான் X-டிரெயில் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், ஜீப் மெரிடியன், மற்றும் ஸ்கோடா கோடியாக் உடன் போட்டியிடுகிறது.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
0 out of 0 found this helpful