• English
    • Login / Register

    6-சீட்டர் வேரியன்ட்ஸ் மற்றும் பல அம்சங்களை பெறும் 2024 Mahindra XUV700 கார்… விலை இப்போது ரூ.13.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

    மஹிந்திரா எக்ஸ்யூவி700 க்காக ஜனவரி 16, 2024 05:15 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 189 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    XUV700 இறுதியாக வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7L வேரியன்ட்களுக்கு புதிய பிளாக்டு-அவுட் லுக்கை பெறுகிறது.

    2024 Mahindra XUV700

    • மஹிந்திரா XUV700 சீரிஸ் 2024 -ல் விலை மாற்றத்தை பெற்றது மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டது.

    • எஸ்யூவி இப்போது வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் டாப்-ஸ்பெக் டிரிமில் (AX7L) ORVM -களுக்கான மெமரி பங்ஷனை பெறுகிறது.

    • இது இப்போது ஒரு புதிய நாபோலி பிளாக் பெயிண்டிலும் கிடைக்கும்; டூயல்-டோன் ஆப்ஷனிலும் அதிக வேரியன்ட்கள் கிடைக்கின்றன.

    • மஹிந்திரா 13 புதிய செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி எஸ்யூவி -யின் கனெக்டட் கார் டெக்னாலஜி தொகுப்பையும் மேம்படுத்தியுள்ளது.

    • பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மாறவில்லை; பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் ஆப்ஷனல் AWD உடன் பிந்தையவற்றுடன் இன்னும் கிடைக்கிறது.

    • 2024 XUV700 -க்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன மற்றும் கார் யூனிட்கள் ஜனவரி 25 முதல் டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கும்.

    கார் தயாரிப்பாளர்கள் அவர்களின் சில கார்களுக்கு ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்த காத்திருக்காமல் மாடல் இயர் (MY) புதுப்பிப்புகளை வெளியிடுவதை புதிய ஆண்டின் தொடக்கத்தில் நாம் வழக்கமாகப் பார்க்க முடியும். அதே போல இப்போது, மஹிந்திரா XUV700 சில புதிய வேரியன்ட்கள், அம்சங்கள் மற்றும் ஒரு புதிய பெயின்ட் ஆப்ஷனை பெற்றுள்ளது.

    விலை

    2024 XUV700 -க்கான விரிவான விலை விவரங்களை மஹிந்திரா வெளியிடவில்லை. ஒவ்வொரு வேரியன்டிற்கான ஆரம்ப விலை விவரங்கள் இங்கே:

    புதிய வேரியன்ட்

    எக்ஸ்-ஷோரூம் விலை

    MX

    ரூ.13.99 லட்சம்

    AX3

    ரூ.16.39 லட்சம்

    AX5

    ரூ.17.69 லட்சம்

    AX7

    ரூ.21.29 லட்சம்

    AX7L

    ரூ.23.99 லட்சம்

    புதுப்பிக்கப்பட்ட வரிசையின் அறிமுகத்துடன், எஸ்யூவி -யின் ஆரம்ப விலை ரூ.4,000. வரை குறைந்துள்ளது. MY2024 XUV700 -க்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன, இது ஜனவரி 25 முதல் டீலர்களை அடையத் தொடங்கும்.

    2024 XUV 700 -யில் உள்ள மாற்றங்கள்

    2024 Mahindra XUV700 6-seater variant

    முக்கியமாக, XUV700 நடுத்தர அளவிலான எஸ்யூவி இறுதியாக 6-சீட்டர் ஆப்ஷனை பெறுகிறது, அதன் நடுவரிசையில் கேப்டன் சீட்கள் உள்ளன. இது ஃபுல்லி லோடட் AX7 மற்றும் AX7L வேரியன்ட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த கேபின் அமைப்புக்கான ஆப்ஷன் XUV700 இன் போட்டியாளர்களால் வழங்கப்படுகிறது, மேலும் இது மஹிந்திராவிடமிருந்து நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

    மஹிந்திரா எஸ்யூவி -யின் ரேஞ்ச்-டாப்பிங் AX7L வேரியன்டில் வென்டிலேட்டட் முன் சீட்களை வழங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். கூடுதலாக, XUV700 -யின் கனெக்டட் கார் டெக்னாலஜி சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் கூடுதல் அம்சங்களுடன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக, டாப்-ஸ்பெக் வேரியன்டில் உள்ள ஓட்டுநர் இருக்கையின் மெமரி ஃபங்ஷன், ORVM களின் நிலையை சேமிக்க உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் காரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது பயனுள்ளதாக இருக்கும்.

    2024 Mahindra XUV700 Napoli Black paint option

    XUV700 இப்போது புதிய நபோலி பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. இந்த பெயிண்ட் கலரை அனைத்து வேரியன்ட்களிலும் தேர்வு செய்ய முடியும். மேலும், டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7L வேரியன்ட்களுக்கு இந்த ஷேடை தேர்ந்தெடுப்பதன் மூலமாக கிரில் மற்றும் அலாய் வீல்களுக்கு பிளாக் அவுட் ஃபினிஷிப்பை பெற முடியும், இதன் மூலமாக எஸ்யூவி -க்கு மிரட்டலான தோற்றம் கிடைக்கின்றது. மேலும், இந்த வேரியன்ட்களில் ஏசி வென்ட்கள் மற்றும் சென்ட்ரல் கன்சோலை சுற்றி டார்க் குரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. பிளாக் ஷேடு உங்கள் விருப்பம் இல்லை என்றால், ஒரு மாற்று உள்ளது - ஹையர் வேரியன்ட்கள் இப்போது டூயல்-டோன் கலர் ஆப்ஷனை பிளாக்ட்-அவுட் ரூஃப் உடன் கிடைக்கும், இது ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தை காருக்கு கொடுக்கின்றது.

    ஹூட்டின் கீழ் மாற்றங்கள் இல்லை

    மஹிந்திரா எஸ்யூவி -யின் பானட்டின் கீழ் எந்த மாற்றமும் செய்யவில்லை. XUV700 முன்பை போலவே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதோ ஒரு பார்வை:

    விவரம்

    2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    2.2 லிட்டர் டீசல்

    பவர்

    200 PS

    185 PS வரை

    டார்க்

    380 Nm

    450 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

    டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7L வேரியன்ட்களும் ஆப்ஷனல் ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்புடன் கிடைக்கின்றன, ஆனால் டீசல்-ஆட்டோமெட்டிக் யூனிட் உடன் மட்டுமே கிடைக்கும்.

    இதையும் பார்க்கவும்: 2024 -ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 5 மஹிந்திரா எஸ்யூவிகள்

    போட்டியாளர்களைப் பற்றிய ஒரு பார்வை

    மஹிந்திரா XUV700 காரின் 6- மற்றும் 7-சீட்டர் வேரியன்ட்கள் டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் ஹூண்டாய் அல்காஸர் உடன் போட்டியிடுகின்றன. இதன் 5-சீட்டர் பதிப்பு கியா செல்டோஸ், மற்றும் டாடா ஹாரியர் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்றவற்றின் உயர்-ஸ்பெக் டிரிம்களுடன் போட்டியிடும். 

    அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

    மேலும் படிக்க: மஹிந்திரா XUV700 ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Mahindra எக்ஸ்யூவி700

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience