2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள்
published on அக்டோபர் 25, 2024 06:19 pm by dipan for ஜீப் meridian
- 86 Views
- ஒரு கருத்தை எழுதுக
2024 மெரிடியன் லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
லேட்டஸ்ட் அப்டேட் மூலமாக ரூ.24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் ஜீப் மெரிடியன் முதல் இரண்டு புதிய பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் இந்த அப்டேட் உடன், ஜீப் 5-சீட்டர் பதிப்பு மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளை மெரிடியன் எஸ்யூவி -க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஜீப் மெரிடியனின் வேரியன்ட்களில் வசதிகள் எவ்வாறு உள்ளன என்பதை இங்கே பார்ப்போம்:
லாங்கிடியூட்
என்ட்ரி-லெவல் லாங்கிட்யூட் வேரியன்ட்டின் வசதிகளின் விவரங்கள் இங்கே:
வெளிப்புறம் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
ஜீப் மெரிடியன் வரிசையில் என்ட்ரி லெவல் வேரியன்ட்டிற்கு பிறகு லாங்கிட்யூட் வேரியன்ட் கிட்டத்தட்ட அனைத்தையும் பெறுகிறது. இது LED லைட்டிங் செட்டப் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. ஆனால் முன்பக்க ஃபாக் லைட்ஸ் இல்லை. 5 சீட்களை கொண்ட ஒரே மெரிடியன் வேரியன்ட் இதுவாகும். 10.1 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, 6 ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ் மற்றும் சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளின் இந்த காரில் உள்ளன.
மேலும் படிக்க: 2024 ஜீப் மெரிடியன் லாங்கிட்யூட் மற்றும் ஜீப் காம்பஸ் லாங்கிட்யூட் (ஓ): எந்த வேரியன்ட்டை வாங்கலாம் ?
லாங்கிடியூட் பிளஸ்
ஒன்-ஓவர்-பேஸ் லாங்கிட்யூட் பிளஸ் வேரியன்ட் ஆனது லாங்கிட்யூட் வேரியன்ட்டை விட கூடுதலாக கீழே உள்ள வசதிகளை வழங்குகிறது:
வெளிப்புறம் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
இந்த வேரியன்ட் மெரிடியனில் பெறக்கூடிய 7 இருக்கைகளில் மிகவும் மலிவானது. பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் போன்ற பிரீமியம் வசதிகள். இது முன் எல்இடி பனி விளக்குகளையும் பெறுகிறது.
லிமிடெட் (O)
மெரிடியனின் மிட்-ஸ்பெக் லிமிடெட் (O) வேரியன்ட், லாங்கிட்யூட் பிளஸ் வேரியண்டில் பின்வரும் வசதிகளைப் பெறுகிறது:
வெளிப்புறம் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
பவர்டு மற்றும் வென்டிலேஷன் வசதியைக் கொண்ட முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் அதிக பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட நல்ல வசதிகள் இந்த வேரியன்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இது கான்ட்ராஸ்ட் கலரில் கேபின் தீம் பெறுகிறது.
மேலும் படிக்க: 2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
ஓவர்லேண்ட்
மெரிடியனின் ஃபுல்லி-லோடட் ஓவர்லேண்ட் வேரியன்ட் ஆனது லிமிடெட் (O) வேரியன்ட்டை விட பின்வரும் வசதிகளைப் பெறுகிறது:
வெளிப்புறம் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதிகள் |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
மெரிடியனின் ஃபுல்லி லோடட் வேரியன்ட் 18-இன்ச் அலாய் வீல்கள், லெதரெட் சீட்கள் மற்றும் டெர்ரெயின் மோட்களில் வேரியன்ட்டை குறிப்பிட்டு காட்டும் வகையில் பிராண்டிங் ஆகியவற்றைப் பெறுகிறது. இருப்பினும் AWD செட்டப் மற்றும் ADAS வசதிகளைக் கொண்ட ஒரே வேரியன்ட் இது மட்டுமே.
பவர்டிரெய்ன்
ஜீப் மெரிடியன் 2-லிட்டர் டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
170 PS |
டார்க் |
350 என்எம் |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT, 9-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன்^ |
FWD, AWD |
*எம்டி = மேனுவல் டிரான்ஸ்மிஷன்; AT = ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்; AWD = ஆல்-வீல் டிரைவ்
விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஜீப் மெரிடியன் விலை ரூ. 24.99 லட்சம் முதல் ரூ. 38.49 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மெரிடியன் டீசல்