• English
    • Login / Register

    2023 ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காரை வெளியிட்டது டாடா நிறுவனம்… விலை ரூ. 15.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

    டாடா ஹெரியர் க்காக அக்டோபர் 17, 2023 03:09 pm அன்று ansh ஆல் திருத்தம் செய்யப்பட்டது

    • 185 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    முற்றிலும் புதிய வெளிப்புறம், பெரிய டிஸ்பிளேக்கள், கூடுதல் அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் இன்னும் டீசல் ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

    Tata Harrier facelift

    • 2023 ஹாரியர் ரூ. 15.49 லட்சம் முதல் ரூ. xx லட்சம் வரை (அறிமுக, எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • டாடா இதை 4 வேரியன்ட்களில் வழங்குகிறது: ஸ்மார்ட், ப்யூர், ஃபியர்லெஸ் மற்றும் அட்வென்ச்சர்.

    • 2-லிட்டர் டீசல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

    • ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட டிரைவிங் டைனமிக்ஸ் இந்த காரில் இருக்கும்.

    • பெரிய டச் ஸ்க்ரீன், அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கேபின் ஆகியவற்றை பெறுகிறது.

    இந்த கார் சோதனை செய்யப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு, அதன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 2023 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நடுத்தர அளவிலான எஸ்யூவி -க்கான மிகப் பெரிய அப்டேட் இதுவாகும். இது ஸ்மார்ட், ப்யூர், ஃபியர்லெஸ் மற்றும் அட்வென்ச்சர் ஆகிய 4 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது, மேலும் இதன் விலை ரூ. 15.49 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கிறது. ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் புதிதாக என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய அனைத்து விவரங்களும் இங்கே:

    விலை

    2023 டாடா ஹாரியர் வேரியன்ட்கள்

    அறிமுக விலை (எக்ஸ்-ஷோரூம்)

    ஸ்மார்ட்

    ரூ.15.49 லட்சம்

    பியூர்

    ரூ.16.99 லட்சம்

    பியூர்+

    ரூ.18.69 லட்சம்

    அட்வென்ச்சர்

    ரூ.20.19 லட்சம்

    அட்வென்ச்சர்

    ரூ.21.69 லட்சம்

    ஃபியர்லெஸ்

    ரூ.22.99 லட்சம்

    ஃபியர்லெஸ் +

    ரூ.24.49 லட்சம்

    ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள்

     

    பியூர்+, அட்வென்ச்சர்+, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+

    19.99 லட்சத்தில் இருந்து

    #டார்க் வேரியன்ட்கள்

     

    பியூர்+, அட்வென்ச்சர்+, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+

    19.99 லட்சத்தில் இருந்து

    ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்டின் அனைத்து வெவ்வேறு வேரியன்ட்களுக்கான தொடக்க விலைகளை மட்டுமே டாடா தற்போது பகிர்ந்துள்ளது. முழு விலை பட்டியல் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுப்பிக்கப்பட்ட தோற்றம்

    டாடா ஹாரியரின் வடிவமைப்பை முழுமையாக மாற்றியமைத்துள்ளது, அதே நேரத்தில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இது இப்போது கனெக்டட் DRL செட்டப், ஒரு புதிய ஸ்லீக்கர் கிரில், செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்கள் மற்றும் முன்பக்கத்தில் புதிய வடிவிலான பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றுடன் வருகிறது.

    2023 Tata Harrier Facelift Side

    பக்கவாட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை, ஆனால் டாடா புதிய 18-இன்ச் அலாய் வீல்கள் (டார்க் மாறுபாட்டிற்கு 19-இன்ச்) மற்றும் முன் கதவுகளில் "ஹாரியர்" பேட்ஜிங்கை சேர்த்துள்ளது.

    முன்புறம் போலவே, பின்புறமும் இசட் வடிவ LED டெயில் விளக்குகளுடன் கனெக்டட் லைட் செட்டப்பை கொண்டுள்ளது. பின்புற தோற்றயத்தை பொறுத்தவரையில் பக்கங்களிலும் நேர்த்தியான ரிப்ளெக்டர் பேனல்கள் மற்றும் புதிய வடிவிலான பம்பர் ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், நீங்கள் மூன்று புதிய வண்ண விருப்பங்களையும் பெறுவீர்கள்: சீவீட் கிரீன், ஆஷ் கிரே மற்றும் சன்லைட் யெல்லோ.

    2023 Tata Harrier Facelift Cabin

    டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்டின் கேபினும் புதிய வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளது. இது ஒரு லேயர்டு டேஷ்போர்டைக் கொண்டுள்ளது, கீழே கர்வ்டு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. டேஷ்போர்டில் பெரிய டச் ஸ்க்ரீன், புதிய 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் பேக்லிட் டாடா லோகோ மற்றும் சென்டர் கன்சோலில் டச் பேஸ்டு ஏசி பேனல் உள்ளது. வேரியன்ட்டை பொறுத்து, வெளிப்புறத்திற்கு வண்ணம் பொருந்தக்கூடிய கேபின் இன்செர்ட்களும் உங்களுக்கு கிடைக்கும்.

    இன்ஜினில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை

    புதிய டாடா ஹாரியர் முன்பு இருந்த அதே 2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இது 170PS/350Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (பேடில் ஷிஃப்டர்களுடன்) ஆப்ஷனை பெறுகிறது. புதிய ஹாரியர், டாடாவின் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும், 2024 ஆம் ஆண்டில் விரைவில் பெறக்கூடும்.

    கூடுதலான அம்சங்கள்

    Tata Harrier facelift touchscreen

    வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டச் அடிப்படையிலான ஏசி பேனலுடன் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியரில் டாடா நிறைய புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பவர்டு டெயில் கேட் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவை.

    வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் மெமரி செயல்பாடுகளுடன் இயங்கும் டிரைவர் இருக்கை போன்ற அம்சங்கள் ஏற்கெனவே விற்பனையில் காரில் இருந்த வசதிகளும் இருந்தவையாகும். இது ஏற்கனவே டிரைவ் மோட்கள் மற்றும் பல்வேறு  நிலப்பரப்புகளுக்கான மோட் -களுடன் வந்துள்ளது, ஆனால் இப்போது இந்த காரில் உள்ள டயல் அதிக பிரீமியம் பயனர் அனுபவத்திற்கான டிஸ்பிளேவை பெறுகிறது.

    Tata Harrier facelift airbags

    ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) தொகுப்பில் 7 ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சேர்த்து ஹாரியரின் பாதுகாப்பையும் டாடா மேம்படுத்தியுள்ளது. EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா, லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற மற்ற பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கெனவே இருந்தவையாகும்.

    மேலும் படிக்க: புதிய டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டுடன் டாடா காரில் அறிமுகமாகும் 5 அம்சங்கள்

    போட்டியாளர்கள்

    2023 Tata Harrier Facelift Rear

    மேம்படுத்தப்பட்ட டாடா ஹாரியர், மஹிந்திரா XUV700, எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுடன் தொடர்ந்து அதன் போட்டியை தொடர்கிறது.

    மேலும் படிக்க: டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் 2023 டீசல்

    was this article helpful ?

    Write your Comment on Tata ஹெரியர்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience