• English
    • Login / Register

    2020 டாடா டியாகோ மற்றும் டைகர் பி‌எஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22இல் அறிமுகமாகப் போகிறது

    டாடா டைகர் 2017-2020 க்காக ஜனவரி 22, 2020 10:41 am அன்று sonny ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 43 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இரண்டு மாதிரியிலும் பெட்ரோல் வகை மட்டுமே வழங்கப்படுகிறது

    • முகப்பு மாற்றப்பட்ட டியாகோ மற்றும் டைகரில் பி‌எஸ்6 1.2-லிட்டர் பெட்ரோல் கைமுறை மற்றும் ஏ‌எம்‌டி முறை என இரண்டு விருப்பங்களிலும் இடம்பெறுகிறது.  

    • இரண்டுமே டைகருக்கான எல்‌இ‌டி டி‌ஆர்‌எல்களின் இணைப்புடனான புதிய முன்புற முனையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மோதுகைத் தாங்கி மற்றும் பாதுகாப்பு சட்டகத்தைப் பெறுகின்றது

    • இரண்டுமே முகப்பு மாற்றத்துடன் தனிச்சிறப்புகளில் புதுப்பிப்புகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரண்டிற்கும் தற்போதைய பெட்ரோல் வகை விலையைக் காட்டிலும் ரூபாய் 10,000 அதிகமாக விலையானது நிர்ணயம் செய்யப்படலாம்.

    2020 Tata Tiago And Tigor BS6 Facelift Launch On January 22

    நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டுடன் தனிவிதமான தரத்துடன் செய்யப்பட்டுள்ளது, இப்போது அவைகளின் அறிமுகமானது ஜனவரி 22 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    முகப்பு மாற்றப்பட்ட இரண்டு மாதிரிகளிலும் 1.05-லிட்டர் டீசல் இயந்திரம் நீக்கப்பட்டிருக்கும், அதே சமயம் 1.2-லிட்டர், 3-உருளை பெட்ரோல் இயந்திரம் பிஎஸ்6-இணக்கமாக புதுப்பிக்கப்பட்டிருக்கும். அவை 85பி‌எஸ் ஆற்றல் மற்றும் 114என்‌எம் முறுக்குத்திறன் என்ற அதே செயல்திறன் அளவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அதே 5-வேக கை முறை மற்றும் ஏஎம்டி விருப்பத் தேர்வுகளுடன் பெட்ரோல் இயந்திரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2020 Tata Tiago And Tigor BS6 Facelift Launch On January 22

    2020 டியாகோ மற்றும் டைகர் ஒரு புதிய முன்புற மோதுகைத் தாங்கியில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பிரகாசமான விளக்கு முகப்புகளை கொண்டுள்ளது, அதே சமயத்தில் புதிய முன் பாதுகாப்பு சட்டகத்தின் வடிவமைப்பு ஒய் வடிவங்களுக்கு பதிலாக அறுகோண வடிவமைப்பை பெறுகிறது. புதிய முன் மோதுகைத் தாங்கியில் சப்-4 எம் செடான் மட்டுமே எல்ஈடி டிஆர்எல்எஸ்யைப் பெறுகின்றது. பின்பகுதி புதுப்பிப்புகளை இதுவரையிலும் பார்க்க முடியாத நிலையில் இரண்டு மாதிரியின் பக்கவாட்டு தோற்றமும் ஒரே மாதிரியாக இருப்பதாகத் தெரிகிறது. முகப்பு மாற்றியமைக்கப்பட்ட ஒரே விதமான சில அம்சங்களில் புதுப்பிப்புகளைப் பெறக்கூடும் என்று டாடா கூறுகிறது, அவை இன்னும் குறிப்பிடப்படவில்லை.

    2020 Tata Tiago And Tigor BS6 Facelift Launch On January 22

    முகப்பு மாற்றப்பட்ட டியாகோ மற்றும் டைகருக்கான முன்பதிவுகளை டாடா முன்பே ஏற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கின்ற பெட்ரோல் வகையைக் காட்டிலும் இவற்றின் விலை சுமார் 10,000 ரூபாய் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, டியாகோவின் விலை ரூபாய் 4.55 லட்சத்திலிருந்து ரூபாய் 6.47 லட்சம் வரையிலும், டைகரின்  விலை ரூபாய் 5.65 லட்சத்திலிருந்து ரூபாய் 7.50 லட்சம் வரையிலும் இருக்கும் (தற்போதைய-டெல்லி விற்பனை கடை).

    மேலும் படிக்க: இறுதி விலையில் டாடா டைகர்

    was this article helpful ?

    Write your Comment on Tata டைகர் 2017-2020

    explore மேலும் on டாடா டைகர் 2017-2020

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் சேடன் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience