• English
  • Login / Register

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய இலக்கு

published on ஜனவரி 04, 2016 02:00 pm by raunak

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மக்களின் மனதில், ‘மாருதி சுசுகி நிறுவனம் எப்போதும் மலிவான கார்களையே உற்பத்தி செய்யும்’ என்று வேரூன்றிவிட்ட கருத்தை மாற்ற இந்நிறுவனம் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. தனது சீரிய முயற்சியில், ஒவ்வொரு முறையும் சாதுர்யமான முடிவுகளை எடுத்து, வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது,

புது ரத்தம் பாய்ச்சி, வெற்றி மேடையை நோக்கி இந்நிறுவனம் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதால், புதுப் பொலிவுடன் கூடிய மாருதி சுசுகியை நாம் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது என்றே கூறவேண்டும். என்ட்ரி லெவல் ஹாட்ச் பேக் பிரிவு கார்களைத் தயாரிப்பதிலேயே கவனமாக இருந்த மாருதி சுசுகி நிறுவனம், தற்போது பிரிமியம் பிரிவு கார்களை உருவாக்குவத்திலேயே தனது பெரும்பான்மையான கவனத்தைச் செலுத்துகிறது. முதல் முறையாக தனது பிரிமியம் ரக கார்களுக்காக நெக்ஸா டீலர்ஷிப்களை உருவாக்கி, Sக்ராஸ் காரை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்தியது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு Sக்ராஸ் விற்பனை ஆகவில்லை. எனினும், அடுத்து வந்த பலீனோ, அறிமுகமான முதல் நாளில் இருந்து இன்றுவரை விற்பனையில் அமோகமாக உள்ளது. Sக்ராஸ் முதலில் வெளிவந்து, அதுத்தடுத்து நெக்ஸா பிரிவில் வெளிவரும் மாடல்களை வெற்றி பெறத் தயார் படுத்தியத்தைப் போல இந்த நிலை உள்ளது. அதனால் தான், வெற்றிச் சிகரத்தில் பலீனோ எளிதாக ஏறிவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. இது தவிர, ஜப்பானிய-இந்திய கூட்டுமுயற்சியில் உருவான இந்த நிறுவனம், விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் முயற்சியில் ஏராளமான கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது.

இன்று வரை, இக்னிஸ் இந்திய சந்தையில் அறிமுகமாவதற்கான எந்த வித அறிவிப்பும், உறுதிப்பாடும் வரவில்லை என்றாலும், அடுத்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்த காரை காட்சிப் படுத்திய பின்பு, அடுத்த வருடத்தில் இந்தியாவில் இக்னிஸ் காரை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று யூகிக்கப்படுகிறது. ஏனெனில், 2016 ஜனவரியில் மஹிந்த்ரா நிறுவனம், புதிய மைக்ரோ SUV பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள தனது KUV 100 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விடும். எனவே, இந்த காருடன் போட்டிப் போட, மாருதி நிறுவனம் இதே பிரிவில் தயாரான தனது இக்னிஸ் காரை நிச்சயமாக போட்டிக் களத்தில் இறக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், க்ராஸ்ஓவர் அல்லது SUV போன்ற தோற்றத்தில் வரும் அனைத்து வாகனங்களும் மக்களின் மனதில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்து, பிரமிப்பூட்டும் விதத்தில் அதீத செல்வாக்கைப் பெற்றுள்ளன. எனவே, இந்த புதிய மைக்ரோ SUV வகை கார்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

இக்னிஸ் காரின் இஞ்ஜின்கள் இதற்கு முன் வெளியான பலீனோ காரின் இஞ்ஜின்களைப் போலவே இருக்கும் என்று தெரிகிறது. பலீனோவின் அதே கட்டுமான சேசிஸ் இருந்தாலும், அதன் அளவுகள் குறைவாகவே காணப்படும். எனவே, பலீனோவை விட எடை குறைவாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புகளுடன் இந்த கார் வெளிவந்தால், பலீனோவை விட சிறந்த எரிபொருள் சிக்கனம் மிகுந்த வாகனமாக இக்னிஸ் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது, மாருதி சுசுகி நிறுவனம் ஹுண்டாய் கிரேட்டா காருடன் போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, இந்நிறுவனம் ஒரு ஜோடி புதிய விட்டாரா மாடல் கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்துள்ளது. அடுத்து வரும் எக்ஸ்போ கண்காட்சியில் இக்னிஸின் அறிமுகத்தைத் தவிர, இவற்றையும் கட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடத்தில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று யூகிக்கப்படுகிறது. அறிமுகமானதும், மேம்படுத்தப்பட்ட டஸ்டர், அடுத்து வரவிருக்கும் Sசாங்யோங்க் டிவோலி போன்ற பல கார்களுடன் போட்டியிட்டாலும், இதன் முக்கிய போட்டியாளர் ஹுண்டாய் கிரேட்டா காராகத்தான் இருக்கும். விட்டாரா மாடலில், சுசுகியின் ஆல்கிரிப் AWD தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு வந்தால், அதுவே இந்த மாடலின் மிகச் சிறந்த சிறப்பம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கிரேட்டா காருடன் போட்டி போட இது ஒரு சிறந்த USP-யாக செயல்படும்.  

இதையும் படிக்கவும்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience