S கிராஸில், மாருதி எங்கே தவறவிட்டது?
published on டிசம்பர் 17, 2015 09:24 am by nabeel for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: கடந்த 2015 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட S கிராஸ், க்ரேடாவிற்கு சவாலாக அமைய வேண்டியதாக இருந்தது. மாருதியின் முதல் பிரிமியம் தயாரிப்பான இதன் அறிமுகம் நடைபெறும் வரை, அது பல சிக்கல்களை சந்தித்தது. மேலும், புதிய நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் மட்டுமே இந்த காரின் விற்பனை நடைபெற்றதால், அதற்கான விளம்பரங்களையும் கடந்து கூடுதல் பிரபலமடைந்தது. இதனால் எல்லா மாருதி விரும்பிகளும் இந்த காரின் வெளியீட்டிற்காக அதிக ஆவலுடன் காத்திருந்தனர். மேலும் வாழ்க்கையை சலிப்படைய செய்யும் வகையிலான கரடுமுரடான பாதைகளில் அவ்வப்போது பயணித்து வந்த எல்லா கிராஸ்ஓவர் ஆர்வலர்களை கொண்ட ஒரு ரசிகர் பட்டாளமே இதற்காக உருவானது. இப்படி ஒரு சக்தி வாய்ந்த வாடிக்கையாளர் அடித்தளத்தை பெற்று, இந்தியன் ஆட்டோமோட்டிவ் சந்தையின் இதயப் பகுதியில் இடம்பிடிக்கும் வகையில், காரை இயக்க தேவையான போதுமான அளவு என்ஜின் ஆற்றலையும் கொண்டு, சிறப்பான வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையை அளித்தது. இந்நிலையில் மாருதியின் ‘பிரிமியம்’ என்ற இந்த ஓவியப் படைப்பில் நிகழ்ந்த தவறு என்ன? என்பதை கண்டறிவோம்.
1. போட்டி
ஹூண்டாய் க்ரேடாவை எதிர்கொள்ள இருந்த S கிராஸ், அதன்பிறகு ஈகோஸ்போர்ட் மற்றும் டஸ்டர் ஆகியவற்றை வீழ்த்த வேண்டியிருந்தது. ஆனால் S கிராஸ் வெளி வருவதற்கு முன்பே, ஹூண்டாய் நிறுவனம் புத்திசாலித்தனமாக க்ரேடாவை அறிமுகம் செய்து, ரூ.8 லட்சம் முதல் 12 லட்சம் வரை இடைப்பட்ட பிரிவில் அமைந்து, அவ்வப்போது கரடுமுரடான பாதைகளில் பயணிக்க ஏற்ற வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோரின் முன்பதிவுகளை பெற்றுக் கொண்டது. அம்சங்களை வைத்து பார்க்கும் போது, S கிராஸில் ஒரு சிறப்பான அம்சங்களின் பட்டியலை கொண்டிருந்தாலும், அதன் போட்டியாளர்களை மேற்கொள்ளும் வகையிலான எந்த தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சமும் பெற்றிருக்கவில்லை.
2 அளவு
கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்றது என்ற வகையில், இந்த கார் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலும் இது நகரங்களில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதால், காரின் அளவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பிரிவில் உள்ள டஸ்டருக்கு அடுத்தப்படியாக, 2வது நீளமான கார் S கிராஸ் ஆகும். அதேபோல க்ரேடாவுடன் ஒப்பிட்டால், இந்த கார் 30 mm அதிக நீளம் கொண்டதாக உள்ளது. உண்மையில் இது ஒரு பெரிய வேறுபாடாக தெரிவதில்லை. ஆனால் காரின் அளவில் அதிக கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக தெரியலாம்.
3. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இல்லை
இந்திய சந்தையில் சமீபகால நாகரீகமான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை, தங்கள் மாடல்களில் 2 பெடல் வகைகளாக அறிமுகம் செய்ய வேண்டிய நிர்பந்தமான நிலையில் வாகன தயாரிப்பாளர்கள் உள்ளனர். க்ரேடாவில் ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ள நிலையில், S கிராஸில் இது இல்லாததால், சில வாடிக்கையாளர்களை இழக்க நேரிட்டது. சமீபத்தில் S கிராஸின் மூன்றாவது வகையை நீக்கிவிட்டு, ஒரு ஆட்டோமேட்டிக் வகையை விரைவில் அறிமுகம் செய்யப் போவதாக, மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
4. DDiS 200 மற்றும் DDiS 320 இடையிலான விலை வேறுபாடு
டெல்டா DDiS 200-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.4 லட்சம் மற்றும் டெல்டா DDiS 320-வின் விலை ரூ.12.3 லட்சம் ஆகும். ஒரு சக்திவாய்ந்த என்ஜினுக்காக மட்டும் அதிகபடியான ரூ.3 லட்சம் (ஏறக்குறைய) விலை. இந்த DDiS 200 வகை கார்களின் மூலம் பெறப்படும் ஆற்றலில் சற்று குறைவு ஏற்படும் என்று உணர்ந்தாலும், அதிக செலவீனத்தை கண்டு பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அதிக சக்திவாய்ந்த என்ஜினை பெறுவது சாத்தியப்படவில்லை. அதே நேரத்தில் க்ரேடாவில் ஒரு 1.4 லிட்டர் CRDI அதே அளவிலான ஆற்றலை வெளியிட்டாலும், 220 Nm முடுக்குவிசையை அளித்து, மாருதி தயாரிப்பு அளிக்கும் 200 Nm-யை பின்னுக்கு தள்ளியது. அதிலும் ஒரு குறைந்த rpm-யை அளிக்கும் இந்த கார், நகர பகுதியில் ஓட்டும் போது அதிக வேகமாகவும், பொறுப்பாகவும் செயல்படுவதை உணர முடிகிறது.
5. SUV-யின் பண்பு
இந்தியாவில் SUV-களுக்கென ஒரு மகத்தான ரசிகர் கூட்டம் உள்ளது. ஏனெனில் இதன் கடினமான தோற்றத்தை கண்டு, தங்களின் முழு குடும்பத்திற்காகவும் இதை வாங்கும் மக்கள், ஒரு சேடன் அல்லது ஒரு ஹேட்ச்சை விட பாதுகாப்பு விஷயத்தில் மன திருப்தியை அடைகின்றனர். மேலும் இதை கொண்டு விடுமுறை காலங்களில் அவ்வப்போது, கரடுமுரடான பாதைகளில் பயணிக்கவும் பயன்படுத்தி கொள்கின்றனர். இந்திய சாலைகளின் சூழ்நிலைகளுக்கு கச்சிதமாக பொருந்தும் இவை, கடினமாக மற்றும் தடித்ததாக காட்சியளித்து, மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. இதன் விளைவாக, மற்ற கார்களை விட, SUV-களே வாடிக்கையாளர்களால் அதிகளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு SUV-யா அல்லது ஒரு கிராஸா? என்ற தேர்விற்கான கேள்வி எழும் போது, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் க்ரேடாவை தான் தேர்ந்தெடுக்கின்றனர்.
மேலும் வாசிக்க
ஹூண்டாய் க்ரேடா Vs மாருதி எஸ் கிராஸ் Vs ஹோண்டா ஜாஸ்: ஆமாம் உங்களுக்கு சரியாக தான் கேட்டது!