அடுத்த தலைமுறையை சேர்ந்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர் முன்னதாகவே அறிமுகம் செய்யப்படுகிறது
published on டிசம்பர் 29, 2015 01:14 pm by manish for மாருதி டிசையர் 2017-2020
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுடெல்லி:
அடுத்த தலைமுறையை சேர்ந்த கச்சிதமான சேடன் மாருதி டிசையர், ஒரு ஆண்டு முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, லைவ்மிண்ட் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 2018 ஆம் ஆண்டு இக்காரின் அறிமுகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் அறிமுகம் வரும் 2017 ஆம் ஆண்டே நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக்கான பெலினோவின் அறிமுகம், ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் சிறப்பான விற்பனையை தடுப்பதாக அமைந்ததால், அதை ஈடு செய்யும் வகையில் மாருதி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக், வரும் 2016 ஆம் ஆண்டு இந்திய சாலைகளை அடையும். மேலும் இந்த காரின் சேடன் பதிப்பின் அறிமுகத்தை இன்னும் தாமதம் செய்ய, இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளருக்கு விருப்பம் இல்லை.
தற்போதைய மாடலை விட, அடுத்த தலைமுறையை சேர்ந்த டிசையர் ஏறக்குறைய 50-80 கிலோ எடைக் குறைவாக காணப்படும். குளோபல் NCAP கிரஸ் டெஸ்ட்களில் ஸ்விஃப்ட் காரின் சராசரிக்கும் குறைவான செயல்பாட்டை தொடர்ந்து, அசாமில் விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இனி வரவுள்ள சேடனில் பாதுகாப்பு அம்சங்களின் மீதும் இந்த வாகனத் தயாரிப்பாளர் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய இரண்டு ஹேட்ச்பேக்குகளும், பெலினோவின் புதிய தலைமுறையின் பிளாட்பாமை தங்களின் அடித்தளமாக கொண்டு செயல்படும். ஆற்றலகத்தை பொறுத்த வரை, இதுவரை எதுவும் தெளிவில்லாத நிலையில், அதிக சக்திவாய்ந்த அமைப்பை அளிக்க மாருதி நிறுவனம் முடிவு செய்யும்பட்சத்தில், ஃபியட்டின் DDiS டீசல் மில்லை தேர்ந்தெடுக்கப்படலாம். ‘100PS’ கச்சிதமான சேடன் கிளாப் (ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர்) மூலம் போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்திய சந்தையில் டிசையருக்கு ஒரு சக்திவாய்ந்த யூனிட் அரணாக அமைய உதவலாம்.
இதையும் படியுங்கள்