ரெனால்ட் நிறுவனத்தின் இந்திய கார்களில் க்விட் எவ்வளவு ம ுக்கியத்துவம் வாய்ந்தது
ரெனால்ட் க்விட் 2015-2019 க்காக செப் 22, 2015 02:58 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: ரெனால்ட் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்விட் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆயத்தமாக உள்ளது. 800cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் 54bhp அளவு சக்தியையும் 74Nm அளவிலான முடுக்கு விசையையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் இந்த பிரிவு கார்களிலேயே முதல் முறையாக பல சிறப்பம்சங்கள் க்விட் கார்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பிரிவு கார்களிலேயே முதல் முறையாக தொடுதிரை இந்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் குளிர்சாதன கண்ட்ரோல்போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளைத் தவிர ஸ்போர்ட்டியான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய இன்னும் பல ஆக்சசரீஸ் இணைப்புகளும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
"ரெனால்ட் க்விட்"என்ற செயலியை (ஆப்) உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் வாடிக்கையாளர்கள் ரெனால்ட் க்விட் கார்களை புக் (முன்பதிவு) செய்து கொள்ளலாம். ரெனால்ட் நிறுவனத்தின் இரண்டாவது இந்திய அறிமுகம் இந்த க்விட் கார். இதற்கு முந்தைய இந்நிறுவனத்தின் பிரபலமான டஸ்டர் கார்கள் கச்சிதமான SUVபிரிவில் தன்னுடைய அசாத்தியமான தொழில்நுட்ப சிறப்பாலும் கவர்ந்திழுக்கக் கூடிய தோற்றத்தாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஹயுண்டாய் நிறுவனத்தின் சேன்ட்ரோ கார்கள் எப்படி மாபெரும் வெற்றி பெற்று கொரிய நாட்டு கார் தயாரிப்பாளர்களான ஹயுண்டாய் நிறுவனம் இந்திய வாகன சந்தையில் காலூன்ற வழிவகை செய்ததோ அதே போல் இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பாளர்களான ரெனால்ட் நிறுவனமும் க்விட் கார்கள் மூலம் இந்த சிறிய ரக கார் சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறது. அதிலும் குறிப்பாக விலையைப் பொறுத்தவரை இதே வகை கார்களான ஹயுண்டாய் நிறுவனத்தின் இயான், டாட்சன் கோ மற்றும் மாருதி ஆல்டோ 800 கார்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே விலை நிர்ணயம் செய்யப்பட்டு அடிப்படை மாடல் வெறும் 3.0 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த ஒரு விஷயமே போட்டியில் உள்ள இதே பிரிவை சேர்ந்த மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிவிடும் என்று தோன்றுகிறது.