மாருதி வர்த்தக வரலாற்றில் பலீனோவின் பங்களிப்பு
published on அக்டோபர் 09, 2015 01:53 pm by manish for மாருதி பாலினோ 2015-2022
- 14 Views
- 4 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது என்பதை அறிந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள், தங்கள் புதிய கார் கோட்பாடுகளை மெய்ப்படுத்தி, சாலைகளில் அவற்றை ஓடச் செய்யும் சாமர்த்தியம் பெற்றவர்கள். இதில், முக்கியமாக சுசுகி நிறுவனத்தை குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டு எடுத்துரைக்க வேண்டும் என்றால், சுசுகியின் கிசாஷி கார், புது விதமான கான்செப்ட்டில் உருவானதாகும். இதற்கு முந்தைய A ஸ்டார் காரும், சுசுகி வெளியிட்ட கான்செப்ட்டில் இருந்து சிற்சில மாறுதல்களைப் பெற்று சந்தைக்கு வந்தது. மீண்டும் இப்போது, மாருதி நிறுவனத்தின் கான்செப்ட் வடிவமைப்பு குழுவில் உற்பத்தியான ஒரு புதிய கான்செப்ட், நவீன உயர்ரக காராக உருவெடுத்து வாகன சந்தையில் அடியெடுத்து வைக்க உள்ளது. அதன் பெயர், புதிய 2015 மாருதி சுசுகி பலீனோ கார்.
புதிய 2015 பலீனோ காரின் வெளிப்புற அமைப்பில், முன்புற கிரில் V வடிவத்தில் உள்ளது; இதன் மேல் விதானம் மிதப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது; மேற்கூரை நளினமாக வளைந்து சறுக்கி வருகிறது; பின்புறத்தில் ஸ்பாய்லர் மற்றும் புதிய சுசுகி அலாய் சக்கரங்களைப் பெற்று நவீனமாக தோற்றம் அளிக்கிறது. 2015 மாருதி சுசுகி பலீனோ கார் அறிமுகத்தின் மூலம், இந்த நிறுவனம் உயர்தர ஹாட்ச் பேக் ரகத்திற்குள் முறையாக நுழைய இருக்கிறது. ஹுண்டாய் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுடன் 2015 பலீனோ போட்டியிடும்.
மாருதி பலீனோவிற்கான முன்பதிவு தற்போது கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. மாருதி நிறுவனத்தின் பிரிமியம் NEXA வியோகிஸ்தர்கள் வழியே, இந்த கார் விற்பனை செய்யப்படும். இந்த காரில், மாருதியின் பிரத்தியேக SHVS ஹைபிரிட் தொழில்நுட்பத்தை சிறிய அளவில் கையாண்டுள்ளனர். எனவே, இந்த கார் ஒரு குறைந்த விலை ஹைபிரிட் ரகமாக இருக்கும். ஆனால், புதிய கலப்பின தொழில்நுட்பம், பலீனோவின் டீசல் வகை கார்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இருக்கும். இதன் மூலம், புதிய பலீனோ இந்தியாவின் முதல் உயர்தர ஹைபிரிட் ஹாட்ச் பாக் காராக இருக்கும். இந்த காரை வாங்குபவர்களுக்கும் நன்மை உள்ளது, ஏனெனில், அவர்கள் இந்தியா அரசாங்கத்தின் FAME திட்டத்தின் மூலம் கிடைக்கும் கலப்பின மற்றும் மின்சார வாகனங்களுக்கான மானியங்களின் நன்மைகளைப் பெற முடியும்.
இஞ்ஜின்களின் அம்சங்களைப் பார்க்கும் போது, இந்த கார் 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும். இந்த இஞ்ஜின், லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரக்கூடியதாகும். எனவே, இதன் வாடிக்கையாளர்கள், சிறந்த எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கலாம். 2015 பலீனோவில், பெட்ரோல் ரகமும் கிடைக்கும். பெட்ரோல் ரகத்தில் மட்டும் தானியங்கி ட்ரான்ஸ்மிஷன் ஒரு விருப்பத் தெரிவாக வழங்கப்படும், தானியங்கி ட்ரான்ஸ்மிஷன் தவிர மற்றொரு வகை 5 வேக தானியங்கி ட்ரான்ஸ்மிஷன் ஆகும். ஆனால், டீசல் மாடலுக்கு இந்த சலுகை பொருந்தாது.
புதிய பலீனோவின் உள்ளே சென்றதும், மேன்மையான உணர்வு மேலோங்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும், கருமையான வண்ணத்தில் உள்ளது. உபகரணங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் மற்றும் ஸ்டியரிங் வீல் போன்றவை மெல்லிய வெள்ளி வேலைப்பாடுகளும் குரோமிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டு மேர்த்தட்டு மக்களை ஈர்க்கும்படி உள்ளது. இதற்கு முந்தைய மாடல்களான சியாஸ் மற்றும் S க்ராஸ் கார்களில் உள்ளதைப் போலவே, பயணத்தை இனிமையாக்க, கூடுதலாக 7 அங்குல ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.