சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

கார்களில் உள்ள பிளக்-இன் ஹைப்ரிட் டெக்னாலஜி எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள்

பிஎன்டபில்யூ எக்ஸ்எம் க்காக மே 27, 2024 07:01 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியவை, இவை பெரிய பேட்டரி பேக்கையும் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.

இந்திய வாகன சந்தையில் சமீபத்திய ஆண்டுகளில் பல புதிய ஹைப்ரிட் கார்களை பார்க்க முடிகின்றது. அவற்றில் பெரும்பாலானவை மாருதி, டொயோட்டா, மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களின் கார்கள் ஆகும். அடிப்படையில் இவை இரண்டு வகைகளில் கிடைக்கின்றன : மைல்ட் ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட்.

ஆனால் ஹைப்ரிட் கார்களில் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் (PHEVs) என்று அழைக்கப்படும் மற்றொரு வகை உள்ளது, அவை பிரீமியம் பிரிவில் உள்ளன. இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

CarDekho India (@cardekhoindia) ஆல் ஷேர் செய்யப்பட்ட போஸ்ட்

பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் அடிப்படை

இன்ஜின் மூலம் மட்டுமே சார்ஜ் செய்யப்படும் பேட்டரி பேக் மைல்டு மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் செட்டப் போல இல்லாமல் இவை சற்று வித்தியாசமானவை. பிளக்-இன் ஹைப்ரிட் கார்களில் அவற்றின் பெயர் குறிப்பிடுவது போல அவற்றின் பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய சார்ஜரில் இன்சர்ட் செய்ய வேண்டும்.

இதன் செயல்பாடு மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் போன்ற ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை போலவே உள்ளது. பெரிய பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஆகியவை சிறந்த மைலேஜை வழங்குவதில் இன்ஜினுக்கு உதவுகின்றன. மேலும் அவர்கள் ஒரு பெரிய பேட்டரி பேக்கை கொண்டிருப்பதால் நகரத்தில் அதிக பியூர்-EV ரேஞ்சையும் கொடுக்கின்றது.

மேலும் படிக்க: டாடா பன்ச் EV லாங் ரேஞ்ச் மற்றும் சிட்ரோன் eC3: எது அதிக ரியல் வேர்ல்டு ரேஞ்சை வழங்குகிறது?

பிளக்-இன் ஹைப்ரிட் கார்கள் பொதுவாக இன்ஜினின் லோடை குறைப்பதற்கும் அதிக மைலேஜை வழங்குவதற்கும் அதிக சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கும்.எடுத்துக்காட்டாக BMW XM 61.9 கிமீ/லி மைலேஜ் மற்றும் 88 கிமீ வரை பியூர் EV ரேஞ்சை கொண்டுள்ளது.

இருப்பினும் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் வழக்கமான ஸ்ட்ராங் ஹைபிரிட் செட்டப்களுக்கு இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களில் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் ஜெனரேட்டராக இன்ஜின் செயல்படுகிறது. ஆனால் பேட்டரியின் பெரிய அளவு காரணமாக பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களில் அதற்காக சாத்தியமில்லை. இந்த வாகனங்களில் இன்ஜின் பேட்டரி பேக்கிற்கு குறைவான சார்ஜை வழங்கும். ஆனால் கார் தொடர்ந்து செல்ல இது போதுமானதாக இருக்காது. பேட்டரி பேக்கை ரீசார்ஜ் செய்ய பவர் சோர்ஸில் இன்செர்ட் செய்ய வேண்டும்.

மைலேஜில் உள்ள வித்தியாசம்

ஸ்ட்ராங் ஹைபிரிட் செட்டப்களில் நீங்கள் 20 கிமீ/லி மைலேஜை பெறலாம் (மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகியவை முதன்மையான எடுத்துக்காட்டுகள்). ஆனால் BMW XM காரில் மைலேஜ் அதன் பிளக்-இன் ஹைப்ரிட் செட்டப்பால் 61.9 கிமீ/லி வரை செல்கிறது. இப்போது இது பேப்பரில் பெரிய வித்தியாசமாகத் தோன்றலாம் ஆனால் உண்மையில் இடைவெளி அவ்வளவு பெரியதாக இல்லை.

பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களை இன்ஜின் மூலம் சார்ஜ் செய்ய முடியாது என்பதால் பேட்டரி பேக் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மைலேஜ் வெகுவாகக் குறைகிறது. மாறாக, ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களில் இன்ஜின் மூலம் பேட்டரி பேக் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யப்படுவதால் மைலேஜ் பெரிய அளவில் மாறாமல் இருக்கும்.

மேலும் பார்க்க: உயரமான Mercedes-Maybach GLS 600ஐ எளிதாக உள்ளே நுழைவது எப்படி என்பதை பாருங்கள்

நீண்ட தூர பயணத்தின் போது ​​ஸ்ட்ராங் ஹைப்ரிட் காரின் மைலேஜ் மாறாமல் இருக்கும். அதே சமயம் பிளக்-இன் ஹைப்ரிட் காரின் மைலேஜ் பேட்டரி பேக்கின் சார்ஜ் நிலையைப் பொறுத்து வேறுபடும்.

அதிக விலை

பெரிய பேட்டரி பேக் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ஒட்டுமொத்த பிளக்-இன் ஹைப்ரிட் செட்டப் காரணமாக இந்த வாகனங்களின் விலையும் அதிகமாகவே உள்ளது. உதாரணமாக BMW XM விலை ரூ.2.60 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. அதே சமயம் அதன் ஆன்-ரோடு விலை ரூ.3 கோடியை தாண்டுகிறது. XM மற்றும் இதற்கு முன் இந்தியாவில் விற்கப்பட்ட பிற PHEV -கள் பிரீமியம் அல்லது ஆடம்பரப் பிரிவில் விற்பனை செய்யப்பட்டவை என்பதால் அதற்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டன. அதன் காரணமாகவே அவற்றை எளிதில் அணுக முடியவில்லை.

மேலும் படிக்க: அறிமுகமானது Kia EV3 காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, இது 600 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஸ்ட்ராங் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களின் நல்ல கலவை உள்ளது. அவை அதிக மைலேஜை வழங்கும் திறன் கொண்டவை. இந்தியாவில் அவற்றின் அதிக விலை காரணமாக ப்ளக்-இன் ஹைபிரிட் கார்கள் குறைவாகவே விற்பனையாகின்றன. அவற்றை சாலைகளில் அதிகம் பார்க்க விரும்புகிறீர்களா? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: XM ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on BMW எக்ஸ்எம்

M
maruti nandan
Aug 22, 2024, 10:41:58 AM

Strong Hybrid should have plug in capability so that city commuter can charge and move around without fule. And once someone needs long ride he can use engine for the drive along with stong hybrid.

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை