• English
  • Login / Register

அறிமுகமானது Kia EV3 காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, இது 600 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

published on மே 23, 2024 07:32 pm by rohit for க்யா ev3

  • 98 Views
  • ஒரு கருத்தை எழுதுக

EV3 ஆனது காரானது செல்டோஸ் அளவில் இருக்கும் ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். மேலும் இது 81.4 kWh வரை அளவிலான பேட்டரியுடன் வரும்.

Kia EV3 revealed

  • EV3 என்பது கியாவின் செல்டோஸ் அளவிலான சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும்.

  • இரண்டு எடிஷன்களில் இது கிடைக்கும்: ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச்.

  • வெளிப்புற வடிவமைப்பில் L-வடிவ LED DRL -கள், குளோஸ்டு-ஆஃப் கிரில் மற்றும் எரோடைனமிக் ரீதியாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன.

  • கேபின் மினிமலிஸ்டு டாஷ்போர்டை கொண்டுள்ளது; இன்ஃபோடெயின்மென்ட்டிற்கான இண்டெகிரேட்டட் டூயல் ஸ்கிரீன் செட்டப் மற்றும் டச்-பேஸ்டு கன்ட்ரோல்களை பெறுகிறது.

  • இன்ஸ்ட்ரூமென்ட் பட்டியலில் டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஒரு சன்ரூஃப் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை உள்ளன.

  • 2025 -ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ. 30 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

2023 அக்டோபரில் கொரியாவில் நடந்த பிராண்டின் EV தினத்தன்று கியா செல்டோஸ் அளவிலான EV3 பற்றிய விவரங்கள் முதலில் வெளியாகின. இப்போது கியா EV3  புரடெக்‌ஷன்-ஸ்பெக் பதிப்பு இப்போது உலகளவில் அறிமுகமாகியுள்ளது. EVகளுக்கான E-GMP இயங்குதளத்தின் அடிப்படையில் இதுவரை வழங்கப்படாத மிகச்சிறிய காராக இது உள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு விவரங்கள்

Kia EV3 front

உற்பத்திக்கு தயாராக இருக்கும் EV3 ஆனது 2023 -ல் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் பதிப்பானது சமீபத்திய கியா EV வரிசை காரான EV9 போலவே உள்ளது. இது குளோஸ்டு-ஆஃப் கிரில்லை தக்க வைத்துள்ளது. மற்றும் அதன் ஃபேசியாவில் ஏர் டேம் -க்கான ஒரு சிறிய ஸ்பிளிட் மற்றும் உற்பத்தி-தயாரான LED ஹெட்லைட்களை கொண்டுள்ளது. கான்செப்ட் மாடலில் காணப்படும் அதே L-வடிவ LED DRL மற்றும் அதேபோன்ற சங்கியான பம்பரில் இது கொடுக்கப்பட்டுள்ளது. இது இப்போது மாற்றியமைக்கப்பட்ட சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் பம்பரில் கொடுக்கப்பட்டுள்ள ஏர் டேமை பெறுகிறது.

Kia EV3 side

பக்கங்களில் தயாரிப்புக்கு தயாராக உள்ள ஸ்பெக் மாடலுக்கான வழக்கமான ORVM -கள் (வெளிப்புற பின்புறக் கண்ணாடிகள்) சேர்க்கப்பட்டுள்ளதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அதனுடன் சுற்றிலும் தடிமனான பாடி கிளாடிங் ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச்கள் மற்றும் அதன் எஸ்யூவி தன்மைக்கு ஏற்றவாறு சாய்வான ரூஃப் உள்ளது. கியா அதை ஏரோடைனமிக் ரீதியாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களுடன் பொருத்தியுள்ளது. இது கான்செப்டிலிருந்து நேரடியாக கடன் வாங்கப்பட்டது. இது முன் கதவுகளுக்கான ஃப்ளஷ்-ஃபிட்டட் டோர் ஹேண்டில்களுடன் வருகிறது (பின்புற டோர் ஹேண்டில்கள் சி-பில்லரில் அமைந்துள்ளது) மேலும் சி-பில்லரை சுற்றியுள்ள ரூஃப் பகுதிக்கு அருகில் ஒரு பிளாக் இன்செர்ட் ஃபுளோட்டிங் ரூஃப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

பின்புறத்தில் இன்வெர்ட்டட் L-வடிவ LED டெயில் லைட்ஸ் மற்றும் மையத்தில் ஒரு பிளாஸ்டிக் எலமென்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் உள்ள மற்ற வடிவமைப்பு விவரங்களில் ரேக் செய்யப்பட்ட விண்ட் ஷீல்ட் மற்றும் மாடல் மற்றும் 'GT' பேட்ஜ்கள் (பிந்தையது GT டிரிம்களில் மட்டுமே கிடைக்கும்) ஆகியவை அடங்கும். வெளிப்புற வடிவமைப்பில் உள்ள மாற்றங்களில் ஆஃப் பம்பர் சுற்றுகளில் ஒரு பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் EV3 ஆனது EV9 -ன் சுருக்கப்பட்ட பதிப்பு போலவே தோன்றலாம். இது கியாவின் தற்போதைய ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும்.

Kia EV3 GT

மேலே குறிப்பிட்டுள்ளபடி EV3 -யின் GT பதிப்பும் உள்ளது. இது ஆல் சில்வர் வெளிப்புற எலமென்ட்களுக்கும் பிளாக் ட்ரீட்மென்ட்டை பெறுகிறது. அதே நேரத்தில் சற்று மாற்றியமைக்கப்பட்ட முன் பம்பரையும் கொண்டுள்ளது. இதை மேலும் தனித்துவமாக காட்டுவதற்காக கியா அதற்கு ஸ்போர்டியர் அலாய் வீல்களை வழங்க தேர்வு செய்துள்ளது.

ஒரு மினிமலிஸ்ட் கேபின்

Kia EV3 cabin

இது EV3 -யின் உட்புறம் கான்செப்ட் நிலையிலிருந்து ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது இது உற்பத்தியை எளிமைப்படுத்துவதற்காக மாற்றப்பட்டுள்ளது. இது மினிமலிஸ்ட் ஆக இருந்தாலும் கியா அதன் டேஷ்போர்டிற்கு மிகவும் நடைமுறை அமைப்பைக் கொடுத்துள்ளது. இதில் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான டச்-பேஸ்டு கன்ட்ரோல்கள் ஏசி -க்கான பாடி கன்ட்ரோல்கள் மற்றும் நேர்த்தியான சென்ட்ரல் வென்ட்கள் உள்ளிட்ட இண்டெகிரேட்டட் டூயல் டிஸ்பிளேக்கள் ஆகியவை உள்ளன. 

Kia EV3 centre console

EV3 ஆனது  ஃபேஸ்லிஃப்ட் EV6 உள்ள அதே புதிய ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது ஸ்லைடிங் சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டோரேஜ் ஏரியாவும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் GT பதிப்பு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட 3-ஸ்போக் யூனிட்டுடன் வருகிறது.

EV3 ஆனது டேஷ்போர்டு மற்றும் டோர் டிரிம்களில் ரீசைக்கிள் செய்யப்பட்டுள்ள ஃபேப்ரிக் மற்றும் பாலி எதிலீன் டெரெப்தாலேட் (PET) போன்ற பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உள்ளடக்கியது. கியா பல்வேறு கேபின் தீம் ஆப்ஷன்களுடன் EV3 -யை வழங்கும். இது 'காற்று, நீர் மற்றும் பூமி' ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: Facelifted Kia Carens காரின் ஸ்பை ஷாட்கள் முதன்முறையாக ஆன்லைனில் வெளிவந்துள்ளன

காரில் ஏராளமான தொழில்நுட்பம் உள்ளது

Kia EV3 GT dual 12.3-inch screens

டூயல் 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷனுக்காகவும்) EV3 -யில் வேறு டிஸ்ப்ளே மற்றும் டச்-கண்ட்ரோல் பேனலுடன் வடிவமைப்பை இண்டெகிரேட் செய்துள்ளது. EV3 ஆனது 12-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே சன்ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் உடன் வருகிறது. EV3 -யில் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் மற்றும் கியாவின் புதிய AI அசிஸ்டென்ட்டை பெறுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பயனுள்ள பரிந்துரைகளையும் வழங்குகிறது.

இதன் பாதுகாப்புக்காக ஏராளமான ஏர்பேக்குகள் ஸ்டெபிலிட்டி புரோகிராம்கள் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களான ஃபார்வர்ட் கொலிஷன் அவாய்டன்ஸ், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும்.

பெரிய பேட்டரி மற்றும் ஓரளவுக்கு நல்ல செயல்திறன்

கியா EV3 -யை உலகளவில் இரண்டு வெர்ஷன்களில் வழங்குகிறது: ஸ்டண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச். அந்தந்த எலக்ட்ரிக் பவர் ட்ரெய்ன்களை பாருங்கள்:

விவரங்கள்

EV3 ஸ்டாண்டர்டு

EV3 லாங் ரேஞ்ச்

பேட்டரி பேக்

58.3 kWh

81.4 kWh

எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை

1

1

பவர்

204 PS

டார்க்

283 Nm

WLTP- கிளைம்டு ரேஞ்ச் 

விவரம் கிடைக்கவில்லை

600 கி.மீ

EV3 ஆனது 0-100 கிமீ/மணி வேகத்தை 7.5 வினாடிகளில் எட்ட முடியும். சரியான சார்ஜிங் விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றாலும் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி EV3 -யின் பேட்டரியை 31 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை டாப் அப் செய்ய முடியும் என்று கியா தெரிவித்துள்ளது.

இது மற்ற எலக்ட்ரிக் கருவிகளை இயக்குவதற்காக வெஹிகிள் டூ வெஹிகிள் (V2L) வசதியையும் பெறுகிறது. கியா பல நவீன EV -களில் பரவலாக உள்ள சிங்கிள்-பெடல் டிரைவ் மோடை இதில் கொடுத்துள்ளது.

மேலும் பார்க்க: வரவிருக்கும் கியா கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது

எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு மற்றும் விலை

Kia EV3 rear

கியா EV3 முதலில் அதன் சொந்த நாடான தென் கொரியாவில் ஜூலை 2024 க்குள் விற்பனைக்கு வர உள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகளில் வெளியாகும். இதன் இந்திய வெளியீடு 2025 -ஆம் ஆண்டில் இருக்காலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மயமாக்கப்பட்ட தயாரிப்பாக இதன் விலை ரூ. 30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும். இந்தியாவில் EV3 -யானது BYD அட்டோ 3  காருக்கு போட்டியாக இருக்கும். மற்றும் மாருதி eVX, MG ZS EV, ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

was this article helpful ?

Write your Comment on Kia ev3

explore மேலும் on க்யா ev3

  • க்யா ev3

    Rs.30 Lakh* Estimated Price
    ஆகஸ்ட் 15, 2036 Expected Launch
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
space Image

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience