Facelifted Kia Carens காரின் ஸ்பை ஷாட்கள் முதன்முறையாக ஆன்லைனில் வெளிவந்துள்ளன
published on மே 16, 2024 07:59 pm by rohit for க்யா கேர்ஸ்
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் கேரன்ஸில் உள்ளதைப் போன்றே பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் MPV-ஐ கியா தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கியா 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேரன்ஸ் MPV-யை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.
-
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் புதிய லைட்டிங் செட்அப், அலாய் வீல்கள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் போன்ற அப்டேட்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது டூயல்-டோன் தீமை அப்படியே வைத்துக் கொள்ளும் மற்றும் தற்போதைய மாடலின் அதே டேஷ்போர்டு அமைப்பைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதிய அம்சங்களில் டூயல்-ஜோன் ஏர் கண்டிஷனிங், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை அடங்கும்.
-
வரவிருக்கும் மாடலில் தற்போதுள்ள டிரான்ஸ்மிஷன்களுடன், தற்போதைய வெர்ஷனில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
-
இந்தியாவில் 2025-இல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஆண்டின் பிற்பகுதியில் எலெக்ட்ரிக் காரும் (EV) அறிமுகப்படுத்தப்படலாம்.
கியா கேரன்ஸ் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது மாருதி எர்டிகாவிற்கு பிரீமியம் மற்றும் பெரிய மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய சந்தையில் புதிய வேரியன்ட்கள் மற்றும் அம்ச மேம்பாடுகளின் வடிவத்தில் அப்டேட்களை பெற்றிருந்தாலும், சர்வதேச ஸ்பை ஷாட்கள் இப்போது வெளிநாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பெற தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன.
கவனிக்கப்பட்ட மாற்றங்கள்
புதிய ஹெட்லைட் அமைப்பு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கேரன்களின் மாற்றங்களின் பெரும் பகுதிகள் டெஸ்ட் டிரைவின் போது மறைக்கப்பட்டிருந்தாலும், இவை அனைத்தும் வெளிப்புற வடிவமைப்பிற்கான எதிர்பார்க்கப்படும் அப்டேட்டுகளாக உள்ளன. கூடுதலாக கனெக்டட் LED டெயில் லைட்டுகள் புதிய சோனெட்டில் இருப்பதைப் போல புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் கேபின் மற்றும் புதிய வசதிகள்
இந்த ஸ்பை ஷாட்களின் தொகுப்பில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கேரன்ஸின் கேபினை பற்றிய விவரங்கள் கேமராவில் பதிவாகவில்லை. கியா டூயல்-டோன் கேபின் தீம் மற்றும் அதே 6- மற்றும் 7- சீட்டர் உள்ளமைவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதில் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கிளைமேட் கண்ட்ரோல் பேனல் மட்டுமே முக்கிய அப்டேட்களாக வரக்கூடும்.
கேரன்ஸ் ஏற்கனவே நன்கு மேம்படுத்தப்பட்ட MPV ஆகும், அதன் பிரீமியம் கேபின் அனுபவத்தை மேம்படுத்த டூயல்-ஜோன் ஏர் கண்டிஷனிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அப்டேட்களை பெறலாம். இது தற்போது டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளே (ஒன்று இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் மற்றோன்று இன்ஃபோடெயின்மென்ட்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு மேம்பாடுகளுக்காக, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட MPV-யின் உபகரண வரிசையில் 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை (ADAS) கியா சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் விற்கப்படும் தற்போதைய கேரன்ஸ் ஆனது ஏற்கனவே அனைத்து வேரியன்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ஃப்ரன்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.
பல்வேறு வகையான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
தற்போதைய மாடலில் உள்ள அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் கியா இந்தியா-ஸ்பெக் ஃபேஸ்லிஃப்ட் கேரன்ஸை தொடர்ந்து வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, இது பின்வரும் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது, அவற்றின் விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
விவரங்கள் |
1.5 லிட்டர் N/A பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் MT |
6-ஸ்பீட் iMT*, 7-ஸ்பீட் DCT^ |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் iMT, 6-ஸ்பீட் AT |
*iMT- கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல்
^DCT- டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
கியா 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் கேரன்ஸ் EV-ஐ அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ தூரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அறிமுகம் மற்றும் விலை
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா கேரன்ஸ் இந்தியாவில் 2025-இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் இதன் விலை தற்போதைய மாடலை விட அதிகமாக இருக்கலாம். தற்போது, கேரன்ஸ் காரின் விலை ரூ.10.52 லட்சம் முதல் ரூ.19.67 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது. மாருதி எர்டிகாவுடன் போட்டியிடுவதோடு, மேம்படுத்தப்பட்ட MPV ஆனது டொயோட்டா ரூமியான், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மாருதி XL6 ஆகியவற்றுக்கு போட்டியாக தொடரும். இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இது பட்ஜெட்டுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க: கியா கேரன்ஸ் டீசல்