சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Volkswagen Taigun டிரெயில் எடிஷன் டீஸர் இங்கே

published on நவ 02, 2023 06:32 pm by ansh for வோல்க்ஸ்வேகன் டைய்கன்

ஸ்பெஷல் எடிஷன் முழுவதும் காஸ்மெடிக் அப்டேட்களை பெறுகிறது மற்றும் GT வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது.

  • இது 150PS, 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ன் மூலம் இயக்கப்படும்.

  • காஸ்மெட்டிக் மேம்பாடுகளில் பாடி கிராபிக்ஸ், பிளாக் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரேக் ஆகியவை அடங்கும்.

  • இது கேபினுக்குள் குறிப்பிட்ட தோலினால் ஆன இருக்கையையும் பெறும்.

  • வழக்கமான GT வேரியன்டுகளைவிட கூடுதல் ப்ரீமியத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோல்க்ஸ்வேகன் டைகுன் டிரெயில் எடிஷனை பெற தயாராகி வருகிறது, இதன் விலை நாளை அறிவிக்கப்படும். இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கான்செப்டாக காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் ஒரு புதிய டீஸர் ஸ்டான்டர்டு டைகுனின் பல காஸ்மெடிக் மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. டைகுன் டிரெயில் என்பது காம்பாக்ட் SUVயின் “GT எட்ஜ் கலெக்ஷனின்” ஒரு பகுதியாகும். ஃபோல்க்ஸ்வேகன் டைகுன் டிரெயில் எடிஷன் இதுவரை அறியப்பட்டபற்றிய அனைத்து விவரங்களும் இதோ உங்களுக்காக.

வெளிப்புற மேம்படுத்தல்கள்

முன்பக்கத்தில் தொடங்கி, டைகுன் டிரெயில் எடிஷன் முழுவதும் பிளாக் நிற கிரில் மற்றும் மேலே மற்றும் கீழே குரோம் ஸ்ட்ரிப்புடன் உள்ளது. தோற்றத்தில், 16-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள், ORVMகளின் கீழ் "டிரெயில்" பேட்ஜிங், பின்புற கதவில் உள்ள பாடி கிராபிக்ஸ் மற்றும் C-பில்லர் ஆகியவற்றைக் காணலாம்.

இது படில் லேம்புகள், ஒரு ரூஃப் ரேக் மற்றும் பின்புறத்தில் "டிரெயில் எடிஷன்" பேட்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது.

உள்ளே புதிதாக ஏதாவது உள்ளதா?

"GT எட்ஜ் கலெக்ஷன்" பிற ஸ்பெஷல் எடிஷனை போலவே ஃபோல்க்ஸ்வேகன் டைகுன் டிரெயில் பதிப்பும் அதே கேபினை பெறும். வேரியன்டுக்கு-குறிப்பிட்ட எழுத்துக்களுடன் இது உட்புறத்தில் வேறுபட்ட கலர் ஸ்கீமை பெறலாம், ஆனால் அம்சங்கள் மற்றும் வசதிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

மேலும் படிக்க: இந்த 7 கார்கள் தொழிற்சாலையில் இருந்து மேட் கலர் ஆப்ஷன்களை பெறுகின்றன!

GT வேரியன்ட்களின் அடிப்படையில், இது 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், EBD யுடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவற்றை பெறலாம்.

பவர்டிரெயின் விவரங்கள்

ஃபோல்க்ஸ்வேகன் டைகுன் GT வேரியன்டுகள் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்னுடன் வருகின்றன. இந்த யூனிட் 150PS மற்றும் 250Nm அவுட்புட்டை கொடுக்கிறது, மேலும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலை

ஃபோல்க்ஸ்வேகன் டைகுன் -ன் GT வேரியன்டுகளின் விலை ரூ.16.30 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது, மற்றும் டைகுன்-இன் மற்ற சிறப்பு பதிப்புகளின் விலையை வைத்துப் பார்த்தால், டிரெயில் எடிஷன் ரூ. 50,000க்கு மேல் விலை கூடுதாலாக இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள: டைகுன் ஆட்டோமெட்டிக்

a
வெளியிட்டவர்

ansh

  • 48 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது வோல்க்ஸ்வேகன் டைய்கன்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை