2வது வாலியோ கண்டுபிடிப்பு சவால்: வெற்றியாளர்களை வாலியோ அறிவித்தது
published on அக்டோபர் 16, 2015 04:22 pm by nabeel for மாருதி பாலினோ 2015-2022
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
பிரான்ஸ் நாட்டை அடிப்படையாக கொண்ட பன்னாட்டு வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான வாலியோ, சர்வதேச அளவிலான கண்டுபிடிப்பு போட்டியின் (இன்டர்நேஷனல் இன்னோவேஷன் கான்டெஸ்ட்) முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த போட்டிக்காக, உலகமெங்கும் உள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 2030 ஆம் ஆண்டிற்கான அதிக உள்ளுணர்வு கொண்ட காருக்கு ஏற்ற சிறந்த உருவாக்கம் உள்ள அமைப்பு அல்லது தயாரிப்பை வடிவமைக்க வேண்டும் என்ற சவாலை முன்வைத்தது. இப்போட்டியின் இரண்டாம் பதிப்பான இதில், 89 நாடுகளை சேர்ந்த 1,324 அணிகள் பங்கேற்று, கடந்த முறையை விட 40% அதிக போட்டியாளர்களை கொண்டிருந்தது. ஓட்டுநர் துறைக்கு உதவும் அமைப்புகள், தன்னிச்சையாக ஓட்டுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அதிக எண்ணிக்கையில் வந்த செயல்திட்டங்களை, வாலியோ நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
கடந்த (அக்டோபர்) 14 ஆம் தேதி, வாலியோ நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஜாக்யூஸ் ஆஸ்சன்ப்ரோனிச் தலைமையிலான தேர்வாளர் குழு, வெற்றிப் பெற்ற மூன்று குழுவினரை தேர்வு செய்தனர். மற்ற போட்டியாளர்களில் இருந்து மீதமுள்ள வெற்றியாளர்களை, வாலியோ குழுவின் உறுப்பினர்களாக உள்ள அறிவியல் உலகை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
முதல் பரிசு
பீக்கிங் (பெய்ஜிங்) பல்கலைக் கழகத்தை சேர்ந்த சீன அணி “ஃபால்கன் வ்யூ”
மாடல்: தனது சுற்றுப்புறத்தை கண்டறியும் ஒரு புதுவிதமான தன்னிச்சையான காரை, இவர்கள் வடிவமைத்து இருந்தனர். இதற்கு லேசர் பயன்பாட்டை தவிர்த்து, ஒரு விலைக் குறைந்த வீல் அடிப்படையிலான ஒரு கேமராவை பயன்படுத்தி, இந்த அணியினர் இதை வடிவமைத்து இருந்தனர்.
இரண்டாம் இடத்தை இரு அணிகள் பகிர்ந்து கொண்டன:
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி மையத்தை (அயூரோபிந்தோ இன்டர்நேஷ்னல் சென்டர் ஆப் எஜூகேஷன்) சேர்ந்த இந்திய அணியான “M.A.D”
மாடல்: சாலை நெரிசலில் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் ஒரு இணைப்பு அமைப்பை இவர்கள் வடிவமைத்தனர். செயற்கைக் கோள் நேவிகேஷனை அடிப்படையாக கொண்டு இயங்கும், மேம்பட்ட மோதல் எச்சரிக்கை சாதனமான இது, அபாயகரமான சூழ்நிலையை குறித்து சரியான நேரத்தில் எச்சரிக்கை அளிக்கிறது.
சார்லாண்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஜெர்மன் அணி “ஆட்டோ ஜென் Z”
மாடல்: சாலை நெரிசலில் பாதுகாப்பிற்கு வலுவூட்டும் ஒரு இணைப்பு அமைப்பை இவர்கள் வடிவமைத்தனர். இந்த மாற்று அமைப்பு, காரில் உள்ள மூன்று மிரர்களையும் இணைத்து, திறம்பட ஒரு ஒற்றை விரிந்த திரையை கொண்ட டிஸ்ப்ளேயில் காட்டுகிறது.
வெற்றி பெற்ற அணிக்கு € 100,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பிடித்த இரு அணிகளுக்கும் தலா € 10,000 வீதம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவின் முடிவில், 3வது ஆண்டு கண்டுபிடிப்பு சவாலை வாலியோ நிறுவனம் அறிவித்தது. இதில் தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளுக்கான முக்கியத்துவம் மட்டுமின்றி, புது முறையிலான கார்களின் பயன்பாடுகளையும் உள்ளடக்கி இருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பிரிவில் வெற்றிப் பெறும் வெற்றியாளருக்கும் €100,000 பரிசுத் தொகை வழங்கப்படும். எல்லா பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களும், இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வெப்சைட் இதோ.
இதையும் படியுங்கள்: இந்த பண்டிகை சீசனுக்காக, பியட் இந்தியாவின் டபுள் டமாக்கா சலுகைகள் அறிவிப்பு
‘தேசிய விற்பனை திறன் போட்டி’யின் 2வது பதிப்பு: டொயோட்டா இந்தியா ஏற்பாடு