சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Toyota Urban Cruiser Taisor கார் எத்தனை கலர்களில் கிடைக்கும் தெரியுமா? முழுமையான விவரங்கள் இங்கே

modified on ஏப்ரல் 04, 2024 04:57 pm by rohit for டொயோட்டா டெய்சர்

இது மூன்று டூயல்-டோன் ஷேடுகள் உட்பட மொத்தம் 8 நிறங்களில் கிடைக்கிறது

  • இந்தியாவில் மாருதி-டொயோட்டா இடையே பகிர்ந்து கொள்ளப்படும் ஆறாவது மாடலான டெய்சர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • இது E, S, S+, G, மற்றும் V ஆகிய 5 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.

  • ஆரஞ்சு, ரெட், வொயிட், கிரே மற்றும் சில்வர் ஆகிய மோனோடோன் வண்ணங்களில் இது கிடைக்கும்.

  • டூயல்-டோன் ஆப்ஷன்கள் ரெட், வொயிட் மற்றும் சில்வர், அனைத்தும் பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்.

  • ஃபிரான்க்ஸ் காரை போன்றே பெட்ரோல், டர்போ-பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன்கள் இதில் கிடைக்கும்.

  • விலை ரூ.7.74 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.

மாருதி ஃப்ரான்க்ஸ் அடிப்படையிலான டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் 5 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. டொயோட்டா மாருதி கிராஸ்ஓவரில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்ட வெளிப்புற வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்துள்ளது. மேலும் புதிய நிறத்தையும் கொண்டுள்ளது. மோனோடோன் ஷேட்களில் தொடங்கி, டொயோட்டா டெய்ஸர் கிடைக்கும் 8 கலர் ஆப்ஷன்களையும் பார்க்கலாம்:

மோனோடோன் ஆப்ஷன்கள்

  • லூசண்ட் ஆரஞ்சு

  • ஸ்போர்ட்டின் ரெட்

  • கஃபே ஒயிட்

  • என்டைஸிங் சில்வர்

  • கேமிங் கிரே

டூயல் டோன் ஆப்ஷன்கள்

  • ஸ்போர்ட்டின் ரெட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

  • என்டைஸிங் சில்வர் வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

  • கஃபே வொயிட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

மாருதி ஃப்ரான்க்ஸ் உடன் ஒப்பிடும் போது புளூ, பிளாக் மற்றும் பிரெளவுன் நிற எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்கள் டெய்சரில் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இது இந்தியா-ஸ்பெக் ஃபிராங்க்ஸில் இல்லாத புதிய ஆரஞ்சு நிறத்தைப் பெறுகிறது. இரண்டுமே சம எண்ணிக்கையிலான டூயல்-டோன் ஷேட்களை பெறுகின்றன. ஆனால் டெய்சரில் ரூ.16,000 கூடுதலாக உள்ளது.

மேலும் படிக்க: டாப்-ஸ்பெக் Toyota Innova Hycross காரின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மீண்டும் தொடக்கம்

பவர்டிரெயின்களை அறிந்து கொள்ளுங்கள்

டொயோட்டா கிராஸ்ஓவர் ஃபிரான்க்ஸ் அதே இன்ஜின் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது, அவை பின்வருமாறு:

விவரங்கள்

1.2-லிட்டர் N/A பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.2-லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி

பவர்

90 PS

100 PS

77.5 PS

டார்க்

113 Nm

148 Nm

98.5 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

5-ஸ்பீடு MT

ஒரே மாதிரியான வசதிகள்

ஃபிரான்க்ஸ் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இருப்பதால் டெய்சரிலும் 9-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC) உள்ளிட்ட அதே பாதுகாப்பு வசதிகளையும் டொயோட்டா வழங்கியுள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சரின் விலை ரூ.7.74 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது. இது மாருதி ஃபிரான்க்ஸ் -க்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும் மாருதி பிரெஸ்ஸா,கியா சோனெட், மஹிந்திரா XUV300, டாடா நெக்ஸான், மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுக்கு கிராஸ்ஓவர் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: அர்பன் க்ரூஸர் டெய்சர் AMT

r
வெளியிட்டவர்

rohit

  • 67 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Toyota டெய்சர்

Read Full News

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை