• English
  • Login / Register

Toyota Urban Cruiser Taisor கார் எத்தனை கலர்களில் கிடைக்கும் தெரியுமா? முழுமையான விவரங்கள் இங்கே

modified on ஏப்ரல் 04, 2024 04:57 pm by rohit for டொயோட்டா டெய்சர்

  • 67 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது மூன்று டூயல்-டோன் ஷேடுகள் உட்பட மொத்தம் 8 நிறங்களில் கிடைக்கிறது

Toyota Urban Cruiser Taisor colour options revealed

  • இந்தியாவில் மாருதி-டொயோட்டா இடையே பகிர்ந்து கொள்ளப்படும் ஆறாவது மாடலான டெய்சர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • இது E, S, S+, G, மற்றும் V ஆகிய 5 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.

  • ஆரஞ்சு, ரெட், வொயிட், கிரே மற்றும் சில்வர் ஆகிய மோனோடோன் வண்ணங்களில் இது கிடைக்கும்.

  • டூயல்-டோன் ஆப்ஷன்கள் ரெட், வொயிட் மற்றும் சில்வர், அனைத்தும் பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்.

  • ஃபிரான்க்ஸ் காரை போன்றே பெட்ரோல், டர்போ-பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன்கள் இதில் கிடைக்கும்.

  • விலை ரூ.7.74 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.

மாருதி ஃப்ரான்க்ஸ் அடிப்படையிலான  டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் 5 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. டொயோட்டா மாருதி கிராஸ்ஓவரில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்ட வெளிப்புற வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்துள்ளது. மேலும் புதிய நிறத்தையும் கொண்டுள்ளது. மோனோடோன் ஷேட்களில் தொடங்கி, டொயோட்டா டெய்ஸர் கிடைக்கும் 8 கலர் ஆப்ஷன்களையும் பார்க்கலாம்:

மோனோடோன் ஆப்ஷன்கள்

Toyota Urban Cruiser Taisor Lucent Orange

  • லூசண்ட் ஆரஞ்சு

Toyota Urban Cruiser Taisor Sportin Red

  • ஸ்போர்ட்டின் ரெட்

Toyota Urban Cruiser Taisor Cafe White

  • கஃபே ஒயிட்

Toyota Urban Cruiser Taisor Enticing Silver

  • என்டைஸிங் சில்வர்

Toyota Urban Cruiser Taisor Gaming Grey

  • கேமிங் கிரே

டூயல் டோன் ஆப்ஷன்கள்

Toyota Urban Cruiser Taisor Sportin Red with Midnight Black roof

  • ஸ்போர்ட்டின் ரெட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

Toyota Urban Cruiser Taisor Enticing Silver with Midnight Black roof

  • என்டைஸிங் சில்வர் வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

Toyota Urban Cruiser Taisor Cafe White with Midnight Black roof

  • கஃபே வொயிட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

மாருதி ஃப்ரான்க்ஸ் உடன் ஒப்பிடும் போது புளூ, பிளாக் மற்றும் பிரெளவுன் நிற எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்கள் டெய்சரில் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இது இந்தியா-ஸ்பெக் ஃபிராங்க்ஸில் இல்லாத புதிய ஆரஞ்சு நிறத்தைப் பெறுகிறது. இரண்டுமே சம எண்ணிக்கையிலான டூயல்-டோன் ஷேட்களை பெறுகின்றன. ஆனால் டெய்சரில் ரூ.16,000 கூடுதலாக உள்ளது.

மேலும் படிக்க: டாப்-ஸ்பெக் Toyota Innova Hycross காரின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மீண்டும் தொடக்கம்

பவர்டிரெயின்களை அறிந்து கொள்ளுங்கள்

டொயோட்டா கிராஸ்ஓவர் ஃபிரான்க்ஸ் அதே இன்ஜின் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன்  வழங்கப்படுகிறது, அவை பின்வருமாறு:

விவரங்கள்

1.2-லிட்டர் N/A பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.2-லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி

பவர்

90 PS

100 PS

77.5 PS

டார்க்

113 Nm

148 Nm

98.5 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

5-ஸ்பீடு MT

ஒரே மாதிரியான வசதிகள்

Toyota Urban Cruiser Taisor cabin

ஃபிரான்க்ஸ் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இருப்பதால் டெய்சரிலும் 9-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC) உள்ளிட்ட அதே பாதுகாப்பு வசதிகளையும் டொயோட்டா வழங்கியுள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Toyota Urban Cruiser Taisor rear

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சரின் விலை ரூ.7.74 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது. இது மாருதி ஃபிரான்க்ஸ் -க்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும் மாருதி பிரெஸ்ஸா,கியா சோனெட், மஹிந்திரா XUV300, டாடா நெக்ஸான், மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுக்கு கிராஸ்ஓவர் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: அர்பன் க்ரூஸர் டெய்சர் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Toyota டெய்சர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience