Maruti Fronx பேஸ்டு கிராஸ்ஓவரான Toyota Taisor இந்தியாவில் வெளியிடப்படும் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள்
published on மார்ச் 18, 2024 07:05 pm by ansh
- 24 Views
- ஒரு கருத் தை எழுதுக
மாருதி ஃப்ரான்க்ஸ்-பேஸ்டு டொயோட்டா எஸ்யூவி -யில் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.
எடுத்துக்காட்டுக்காக மாருதி ஃபிரான்க்ஸ் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
-
இந்த காரின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஃபிரான்க்ஸ் -லிருந்து இதை வேறுபடுத்தி காட்டுவதற்காக முன்பக்கம் வடிவமைப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
-
9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம்.
-
இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள டொயோட்டா மற்றும் மாருதி சுஸூகி இடையே பகிர்ந்து கொள்ளப்படும் 6 -வது கார் ஆகும்.
-
விலை 8 லட்சம் முதல் 13 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா -வின் மாருதி ஃப்ரான்க்ஸ் அடிப்படையிலான கிராஸ்ஓவர் எஸ்யூவி டொயோட்டா டெய்சர் இந்தியாவில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஃபிரான்க்ஸ் இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பான இந்த கார் அதே இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளுடன் வரும். ஆனால் ஃபிரான்க்ஸ் -லிருந்து இதை வேறுபடுத்திக் காட்டும் வகையில் சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் வரலாம்.
பவர்டிரெயின்கள்
எடுத்துக்காட்டுக்காக மாருதி ஃபிரான்க்ஸ் இன்ஜின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
மாருதி-டொயோட்டா இரண்டுக்கும் இடையே இதற்கு முன்பு பகிரப்பட்ட மற்ற கார்களை போலவே இதிலும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் ஃபிரான்க்ஸ் காரில் உள்ளதை போலவே இருக்கும். டெய்சர் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை (90 PS/113 Nm) பெறும். இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கனெக்ட் செய்யப்பட்டு கிடைக்கலாம். இது 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (100 PS/148 Nm) வரும் இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனை பெறும். இது இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் டொயோட்டா-பேட்ஜ் செய்யப்பட்ட டர்போ-பெட்ரோல் காராகவும் இருக்கலாம்.
மேலும் படிக்க:Tata Curvv: காத்திருக்கும் அளவுக்கு தகுதியானதா? இல்லை அதன் போட்டியாளர்களில் ஒன்றை இப்போது வாங்கலாமா ?
ஃபிரான்க்ஸ் ஆனது அதன் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் வருகிறது. மேலும் டொயோட்டாவும் அதையே வழங்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் CNG பவர்டிரெய்ன் இப்போதைக்கு கிடைக்கும் என்பது சாத்தியமில்லை; மற்றும் டொயோட்டா இந்த பவர்டிரெய்னை எதிர்காலத்தில் சேர்க்கலாம்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
எடுத்துக்காட்டுக்காக மாருதி ஃபிரான்க்ஸ் கேபினின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
இங்கேயும் ஃபிராங்க்ஸில் உள்ளதை போலவே வசதிகலை அனைத்தையும் டெய்சர் பெறும். 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: ஃபோர்டு எண்டெவர் vs டொயோட்டா ஃபார்ச்சூனர்: விவரக்குறிப்புகள் ஒப்பிடப்படுகின்றன
பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள் ABSவித் EBD எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றுடன் வரலாம். இந்த கார் கேபின் பேட்ஜ்களால் மட்டுமல்ல கலர் ஸ்கீம்களின் அடிப்படையிலும் வேறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி மாடலில் காணப்படும் பிளாக் மற்றும் பர்கண்டியுடன் போன்றவை இல்லாமல் டொயோட்டா பதிப்பில் எளிமையான இன்ட்டீரியர் இடம்பெற வாய்ப்புள்ளது.
விலை & போட்டியாளர்கள்
எடுத்துக்காட்டுக்காக மாருதி ஃப்ரான்க்ஸின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
மாருதி ஃபிராங்க்ஸின் விலையை பொறுத்தவரை டொயோட்டா டெய்சர் ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் வேரியன்ட்கள் மாருதி-பேட்ஜ் செய்யப்பட்ட கார்களை விட சற்று கூடுதல் விலையில் வரலாம். டொயோட்டா தற்போது சப்-4m எஸ்யூவி பிரிவில் போட்டியிடவில்லை என்பதால் இந்த கிராஸ் ஓவர் கியா சோனெட் ஹூண்டாய் வென்யூ டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா XUV300 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: மாருதி ஃபிரான்க்ஸ் AMT