Toyota Urban Cruiser Taisor லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
published on அக்டோபர் 16, 2024 07:39 pm by shreyash for டொயோட்டா டெய்சர்
- 49 Views
- ஒரு கருத்தை எழுதுக
லிமிடெட் எடிஷனான டெய்சர் ஆனது மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கிற்கான வெளிப்புற மற்றும் உட்புற பாகங்கள் தொகுப்புடன் வருகிறது. ஆனால் இதற்காக கூடுதலாக பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
-
வெளிப்புறத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள், கிரில் மற்றும் ஹெட்லைட்டுகளுக்கான குரோம் கார்னிஷ், பக்கவாட்டு பாடி கிளாடிங் மற்றும் டோர் வைஸர்கள் ஆகியவை உள்ளன.
-
இது 3D மேட்ஸ் மற்றும் படில் லேம்ப் -களும் உள்ளன.
-
டெய்சர் லிமிடெட் எடிஷனுடன் வழங்கப்படும் ஆக்சஸரீஸ்கள் ரூ. 20,160 -க்கு மேல் மதிப்பு கொண்டவை.
-
டெய்சரின் இந்த லிமிடெட் எடிஷன் அக்டோபர் 2024 இறுதி வரை மட்டுமே கிடைக்கும்.
டொயோட்டா டெய்சர் அடிப்படையில் ஃபிரான்க்ஸ் -ன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எடிஷன் ஆகும். இது இப்போது 2024 பண்டிகைக் காலத்திற்கான லிமிடெட் எடிஷனை பெற்றுள்ளது. டெய்சர் -ன் இந்த லிமிடெட் பதிப்பு ரூ. 20,160 -க்கு மேல் மதிப்புள்ள வெளிப்புற மற்றும் உட்புற பாகங்களுடன் வழங்கப்படுகிறது. இது இந்த சப்காம்பாக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவி -யின் ஒட்டுமொத்த ஸ்டைலை மேம்படுத்துகிறது. டெய்சர் லிமிடெட் எடிஷன் அக்டோபர் 2024 இறுதி வரை மட்டுமே கிடைக்கும். மேலும் இது டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.
டெய்சர் லிமிடெட் பதிப்பில் உள்ள மாற்றங்கள்
வெளிப்புற பாகங்கள் கிரே மற்றும் ரெட் ஆப்ஷன்களில் ஃபினிஷ் செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்ஸ் மற்றும் கிரில் மற்றும் ஹெட்லைட்டுகளுக்கான குரோம் கார்னிஷ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது டோர் வைசர்கள், சைடு பாடி கிளாடிங், டோர் சில் கார்டுகள் மற்றும் 3D பாய்கள் மற்றும் உள்ளே டோர்களில் வெல்கம் லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்ஸசரீஸ்கள் அனைத்தும் டெலிவரி நேரத்தில் டீலர்ஷிப்களில் பொருத்தப்படும்.
காரில் உள்ள வசதிகள்
9 இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் ஆட்டோ ஏசி போன்ற வசதிகளுடன் டோயோட்டா டெய்சரை கொடுக்கிறது. இது பேடில் ஷிஃப்டர்கள் (ஏடியில் மட்டும்) மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றையும் பெறுகிறது. டெய்சரில் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: Maruti Fronx மற்றும் Toyota Taisor காத்திருப்பு கால ஒப்பீடு: 2024 அக்டோபர் எந்த சப்-4m கிராஸ்ஓவரை விரைவில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்?
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டொயோட்டா டெய்சர் காரை நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களின் தேர்வுடன் வழங்குகிறது. விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
90 PS |
100 PS |
டார்க் |
113 Nm |
148 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
டெய்சர் 77 PS மற்றும் 98.5 Nm ஐ உருவாக்கும் 1.2-லிட்டர் இயற்கையான சிஎன்ஜி-பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் பெறுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
விலை போட்டியாளர்கள்
டொயோட்டா டெய்சர் காரின் விலை ரூ.7.74 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இது ஒரு மாருதி ஃபிரான்க்ஸ் உடன் நேரடியாக போட்டியிடும். மேலும் ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி போன்றவற்றுக்கு மட்டுமல்ல சப்காம்பாக்ட் எஸ்யூவி -களான டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டொயோட்டா டெய்சர் ஏஎம்டி
0 out of 0 found this helpful