சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஒரே மாதத்தில் குவிந்த ஆர்டர்கள், மீண்டும் நிறுத்தப்பட்ட Toyota Innova Hycross காரின் ZX மற்றும் ZX (O) ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கான முன்பதிவு

modified on மே 20, 2024 06:15 pm by shreyash for டொயோட்டா இனோவா hycross

இன்னோவா ஹைகிராஸின் டாப்-ஸ்பெக் ZX மற்றும் ZX (O) ஹைப்ரிட் ஆகிய வேரியன்ட்களை வாங்க ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும்.

  • இன்னோவா ஹைகிராஸ் -காரின் ZX மற்றும் ZX (O) ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கான ஆர்டர்களை 2024 ஏப்ரலில் டொயோட்டா மீண்டும் ஏற்கத் தொடங்கியிருந்தது.

  • ஒரு மாதத்திற்குப் பிறகு ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கான காத்திருப்பு காலம் 14 மாதங்கள் வரை நீடிக்கிறது.

  • இருப்பினும் VX மற்றும் VX (O) ஹைப்ரிட் வேரியன்ட்கள் மற்றும் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை வழக்கம் போல முன்பதிவு செய்யலாம்.

  • Hycross ஆனது 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெட்ரோல்-ஒன்லி மற்றும் ஹைபிரிட் வேரியன்ட்களில் பயன்படுத்துகிறது. இரண்டும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.

  • ZX மற்றும் ZX (O) விலை ரூ. 30.34 லட்சம் முதல் ரூ. 30.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

  • எம்பிவி -யின் மற்ற வேரியன்ட்களின் விலை ரூ. 19.77 லட்சம் மற்றும் 27.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் வேரியன்ட்டில் டாப்-ஸ்பெக் ZX மற்றும் ZX (O) ஹைபிரிட் வேரியன்ட்களுக்கான முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேரியன்ட்களுக்கான காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளதுதான் டொயோட்டாவின் இந்த முடிவுக்கு காரணம் ஆகும். ஹைப்ரிட் MPV வேரியன்ட்களுக்கான காத்திருப்பு காலம் 14 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கின்றது. இந்த வேரியன்ட்களுக்கான காத்திருப்பு நேரம் குறைந்தவுடன் முன்பதிவுகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வாடிக்கையாளர்கள் VX மற்றும் VX (O) ஹைபிரிட் உட்பட MPV -யின் பிற வேரியன்ட்களை முன்பதிவு செய்யலாம்.

இதற்கு முன்பும் ஒருமுறை டொயோட்டா முன்பு இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கான ஆர்டர்களை 2023 -ம் ஆண்டு ஏப்ரலில் நிறுத்தியிருந்தது. பின்னர் ஒரு வருடம் கழித்து 2024 ஏப்ரல் மீண்டும் முன்பதிவை தொடங்கியது. இப்போது ​​இந்த டாப்-ஸ்பெக் ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கான முன்பதிவுகளை மீண்டும் திறந்த. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நாள்களிலேயே ஆர்டர்கள் குவிந்ததால் காத்திருப்பு காலம் ஒரு வருடத்திற்கு மேல் உள்ளது.

மேலும் பார்க்க: 2024 மே மாதத்துக்கான Toyota India Hybrid Lineup கார்களுக்கான காத்திருப்பு காலம்: Hyryder Hycross Camry மற்றும் Vellfire

டாப்-ஸ்பெக் இன்னோவா ஹைகிராஸ் காரில் உள்ள வசதிகள் ?

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் டாப்-ஸ்பெக் ஹைப்ரிட் வேரியன்ட் 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வருகிறது.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் 360 டிகிரி கேமரா டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லேன்-கீப் மற்றும் டிபார்ச்சர் அசிஸ்ட் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ற்றும் ஆட்டோ எமர்ஜென்ஸி பிரேக்கிங் கொண்ட (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளான.

மேலும் பார்க்க: இந்தியாவில் டீசல் மைல்ட்-ஹைப்ரிட் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் அறிமுகத்துக்கு தயாராகுங்கள்

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் மற்றும் பெட்ரோல்-ஒன்லி பவர் ட்ரெயின்களுடன் வருகிறது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இன்ஜின்

2-லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட்

2 லிட்டர் பெட்ரோல்

பவர்

186 PS

175 PS

டார்க்

188 Nm (இன்ஜின்) / 206 Nm (மோட்டார்)

209 Nm

டிரான்ஸ்மிஷன்

e-CVT

CVT

விலை போட்டியாளர்கள்

டாப்-ஸ்பெக் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் Zx மற்றும் ZX (O) ஹைப்ரிட் வேரியன்ட்களின் விலைகள் ரூ.30.34 லட்சம் முதல் ரூ.30.98 லட்சம் வரை இருக்கும். பிரீமியம் MPV -யின் மற்ற வேரியன்ட்களின் விலை ரூ.19.77 லட்சம் மற்றும் 27.99 லட்சம் வரை உள்ளது. இது அதன் உடன்பிறப்பான மாருதி இன்விக்டோ (ஹைகிராஸ் அடிப்படையிலானது) மற்றும் டீசல் ஒன்லி காரான டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஆகிய கார்களுடன் போட்டியியிடுகின்றது. தவிர கியா கேரன்ஸ் காருக்கு பிரீமியம் மாற்றாகவும் இருக்கின்றது.

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

மேலும் படிக்க: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆட்டோமேட்டிக்

s
வெளியிட்டவர்

shreyash

  • 23 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டொயோட்டா இனோவா Hycross

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை