• English
  • Login / Register

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டாப்-எண்ட் கார் வேரியன்ட்யின் விலை விபரம்!

published on மே 03, 2023 11:28 am by tarun for டொயோட்டா இனோவா கிரிஸ்டா

  • 23 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது ஹைக்ராஸின் என்ட்ரி-லெவல் ஹைபிரிட் கார் வேரியன்ட்க்கு மிக நெருக்கமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Toyota Innova Crysta

  • இன்னோவா கிரிஸ்டா VX மற்றும் ZX காரின்  விலை விபரம் வெளியிடப்பட்டது; MPV ரூ.19.13 லட்சம் முதல் ரூ.25.43 லட்சம் வரையிலான (எக்ஸ்ஷோரூம் ) விலையில் கிடைக்கிறது.

  • இந்த MPV கார் G, GX, VX, மற்றும் ZX என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  • 8 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், பவர்டு  டிரைவர் சீட், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஏழு ஏர்பேக்குகள் உள்ளன.

  • 5-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 150PS, 2.4-லிட்டர், டீசல் இன்ஜினைப் பெறுகிறது

டாப் எண்ட் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் வேரியன்ட்களான VX மற்றும் ZX  மாடல்களின் விலை இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. MPV -யின் பழைய தலைமுறை, லேசான புதுப்பிக்கப்பட்ட முன் புறத்தோற்றத்துடன் , G, GX, VX, மற்றும் ZX ஆகிய நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும். ஒட்டுமொத்த விலை பட்டியல் இங்கே:


கார்களின் வேரியன்ட்கள்


விலைகள்


G 7 சீட்டர்


ரூ. 19.13 லட்சம்


G 8 சீட்டர்


ரூ. 19.18 லட்சம்


GX 7 மற்றும் 8 சீட்டர்


ரூ. 19.99 லட்சம்


VX 7 சீட்டர் (புதியது)


ரூ. 23.79 லட்சம்


VX 8 சீட்டர் (புதியது)


ரூ. 23.84 லட்சம்


ZX 7 சீட்டர் (புதியது)


ரூ. 25.43 லட்சம்

GX வேரியன்ட்டை விட VX வேரியன்ட்டின் விலை ரூ.3.79 லட்சம் அதிகம். VX வேரியன்ட்டை விட ZX வேரியன்ட் ரூ.1.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிரிஸ்டா இப்போது ரூ 19.13 லட்சம் முதல் ரூ 25.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது, இது 2022 ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டது . கிரிஸ்டாவின் VX கார் இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் மாடலை விட சுமார் ஒரு லட்சம் விலை குறைவாக உள்ளது. இருப்பினும், ஹைக்ராஸ் VX ஹைப்ரிட் மாடலை விட கிரிஸ்டா ZX கார் சுமார் ரூ.60,000 விலை அதிகம்.

மேலும் படிக்கவும்: ஜூலை மாதத்திற்குள் ‘மாருதி’ இன்னோவா ஹைகிராஸ் வெளியிடப்படும்

Toyota Innova Crysta

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் ஆட்டோமேட்டிக் ஏசி, 8 வே எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள்  டிரைவர் இருக்கை, லெதர் இருக்கைகள், ஒன் டச் டம்பிள் இரண்டாம் வரிசை இருக்கைகள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இதில் ஏழு ஏர்பேக்குகள், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை  பாதுகாப்பு அம்சத்தில் அடங்கும்.

MPV மாடலில்  150PS/343Nm  2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது, சமீபத்திய மாசு கட்டுப்பாடுகளுக்காக புதுப்பிக்கப்பட்டு 5- வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைகிராஸ், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வந்தாலும், பழைய இன்னோவாவில் இந்த வசதி இல்லை.

2023 Toyota Innova Crysta Rear

மேலும் படிக்கவும்: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல்  vs ஹைபிரிட்:மின்மயமாக்கப்பட்ட MPV எவ்வளவு சிக்கனமானது?

டீசலில் இயங்கும் இன்னோவா கிரிஸ்டா இன்னோவா ஹைகிராஸுக்கு மாற்றாக செயல்படுகிறது, இது முற்றிலும் புதிய தயாரிப்பாகும். 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த காரில் ஹைபிரிட் முறையில் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் கிடைக்கும். ரேடார் அடிப்படையிலான ADAS ஸின் கூடுதல் பாதுகாப்புடன், இது கிரிஸ்டாவை விட அதிக பிரீமியம் மற்றும் நவீன காராகும். ஹைகிராஸுக்கு இப்போது  ரூ. 18.55 லட்சம் முதல் ரூ. 29.72 லட்சம் வரை(எக்ஸ் ஷோரூம்)  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்: இன்னோவா கிரிஸ்டா டீசல்

was this article helpful ?

Write your Comment on Toyota இனோவா Crysta

explore மேலும் on டொயோட்டா இனோவா கிரிஸ்டா

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • எம்ஜி m9
    எம்ஜி m9
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டிரிபர் 2025
    ரெனால்ட் டிரிபர் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf9
    vinfast vf9
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience