சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டாப்-ஸ்பெக் Toyota Innova Hycross காரின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மீண்டும் தொடக்கம்

modified on ஏப்ரல் 02, 2024 05:15 pm by rohit for டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் காரின் VX மற்றும் ZX டிரிம்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது.

  • டொயோட்டா டாப்-ஸ்பெக் ZX மற்றும் ZX(O) ஹைப்ரிட்க்கான முன்பதிவுகளை 2023 முதல் பாதியில் நிறுத்தி வைத்திருந்தது.

  • VX ஹைபிரிட் டிரிம்களின் விலை ரூ.25,000 உயர்த்தப்பட்டுள்ளது.

  • இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX(O) விலை இப்போது ரூ.30,000 உயர்ந்துள்ளது.

  • ZX மற்றும் ZX(O) வேரியன்ட்களில் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை உள்ளன.

  • இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் விலை இப்போது ரூ.25.97 லட்சம் முதல் ரூ.30.98 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ஃபுல்லி லோடட் வேரியன்ட்களான ZX மற்றும் ZX(O) ஹைபிரிட் வேரியன்ட்களுக்கான புதிய ஆர்டர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சில மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் முன்பதிவு தொடங்கியுள்ளது. டொயோட்டா இப்போது இந்த வேரியன்ட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது, அவற்றின் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

VX 7-சீட்டர்/ VX 8-சீட்டர்

ரூ 25.72 லட்சம்/ ரூ 25.77 லட்சம்

ரூ 25.97 லட்சம்/ ரூ 26.02 லட்சம்

+ரூ 25,000

VX (O) 7-சீட்டர்/ VX (O) 8-சீட்டர்

ரூ 27.69 லட்சம்/ ரூ 27.74 லட்சம்

ரூ 27.94 லட்சம்/ ரூ 27.99 லட்சம்

+ரூ 25,000

ZX

ரூ.30.04 லட்சம்

ரூ.30.34 லட்சம்

+ரூ 30,000

ZX (O)

ரூ.30.68 லட்சம்

ரூ.30.98 லட்சம்

+ரூ 30,000

MPV -யின் VX மற்றும் ZX ஹைப்ரிட் டிரிம்கள் இரண்டின் விலையும் அதிகபட்சமாக ரூ. 30,000 வரை உயர்ந்துள்ளது. MPV -யின் ஹைப்ரிட் வரிசையில் உள்ள VX வேரியன்ட்கள் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் MPV அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. இந்தக் கட்டுரையை வெளியிடும் போது வழக்கமான பெட்ரோல்-மட்டும் வேரியன்ட்களின் விலை மாறாமல் இருக்கும். இப்போது அவற்றின் விலை ரூ.19.77 லட்சம் முதல் ரூ. 19.82 லட்சம் வரை உள்ளது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை இரண்டு பவர் ட்ரெய்ன்களுடன் வழங்குகிறது:

விவரங்கள்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (பெட்ரோல்)

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (ஹைப்ரிட்)

இன்ஜின்

2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்

2-லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல்

பவர்

174 PS

186 PS (இன்டெகிரேட்டட்)

டார்க்

209 Nm

187 Nm (இன்டெகிரேட்டட்)

டிரான்ஸ்மிஷன்

CVT

e-CVT

ஸ்ட்ராங்-ஹைபிரிட் செட்டப் உடன் கூடிய MPV, 21.1 கிமீ/லி மைலேஜ் தரும் என்று கூறப்பட்டுள்ளது. டொயோட்டா புதிய இன்னோவா ஹைகிராஸை ஃப்ரண்ட் வீல் டிரைவ் (FWD) உடன் வழங்குகிறது. டீசலில் இயங்கும் ரியர் வீல் டிரைவ் டொயோட்டா எம்பிவியில் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்னோவா கிரிஸ்டா இப்போது விற்பனையில் உள்ளது.

மேலும் பார்க்க: பார்க்க: ஹூண்டாய் ஸ்டார்கேசர் இந்தியாவில் மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக இருக்கலாம்

இதில் உள்ள வசதிகள்

ஆக்ஸசரீஸ்களை பொறுத்தவரை இன்னோவா ஹைகிராஸ் MPV-யின் ஃபுல்லி லோடட் ஹைப்ரிட் வேரியன்ட்கள் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், ஒரு பனோரமிக் சன் ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் வருகின்றன. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ZX (O) வேரியன்ட்டில், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவையும் உள்ளன.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் போட்டியாளர்கள்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் காருக்கு அதன் சக உடன்பிறப்பான மாருதி இன்விக்டோ -வை தவிர இதுவரை நேரடி போட்டியாளர்களை யாரும் இல்லை. அதே வேளையில் கியா கேரன்ஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகியவற்றுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

மேலும் படிக்க: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆட்டோமேட்டிக்

Share via

Write your Comment on Toyota இனோவா Hycross

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.26.90 - 29.90 லட்சம்*
Rs.63.90 லட்சம்*
புதிய வகைகள்
புதிய வகைகள்
Rs.6 - 8.97 லட்சம்*
புதிய வகைகள்
Rs.10.60 - 19.70 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை