WPL 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக Tata Curvv EV அறிவிக்கப்பட்டுள்ளது
டாடா கர்வ் இவி க்காக பிப்ரவரி 14, 2025 11:49 pm அன்று yashika ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
இன்று தொடங்கி மார்ச் 15, 2025 வரை நடைபெறவுள்ள WPL 2025 போட்டிகளின் போது அதிகாரப்பூர்வ காராக கர்வ் EV காட்சிப்படுத்தப்படும்.
-
கடந்த ஆண்டு பன்ச் EV -யை தொடர்ந்து இந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL) -க்கான அதிகாரப்பூர்வ காராக டாடா கர்வ் EV அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல்-2 ADAS ஆகிய வசதிகள் கொடுக்கப்படலாம்.
-
கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 45 kWh மற்றும் 55 kWh
-
இதன் விலை ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரை இருக்கும்.
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 -க்கான அதிகாரப்பூர்வ காராக டாடா கர்வ்வ் EV அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இன்று முதல் மார்ச் 15, 2025 வரை நடைபெறவுள்ள WPL -ன் டைட்டில் ஸ்பான்சராக டாடா தனது பங்கை தொடர்கிறது. மேலும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) -ன் டைட்டில் ஸ்பான்சர் ஆகவும் டாடா உள்ளது.
கிரிக்கெட் லீக்கில் டாடா கார்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருந்து வருகிறது. டாடா 2018 -ல் நெக்ஸானுடன் ஒத்துழைப்பைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஹாரியர் மற்றும் ஆல்ட்ரோஸ், சஃபாரி மற்றும் பன்ச் ஆகியவை முந்தைய ஐபிஎல் சீசனில் இருந்தன. இருப்பினும் 2023 ஆண்டில் டாடா அதன் அணுகுமுறை மாற்றியது. அந்த ஆண்டு முதல் முறையாக EV கார்களை முன்னணியில் வைக்க முடிவு செய்தது. சஃபாரியின் ரெட் டார்க் பதிப்பு மகளிர் பிரீமியர் லீக் அதிகாரப்பூர்வ காராக இருந்தது, அந்த ஆண்டில் ஐபிஎல் -ன் அதிகாரப்பூர்வ காராக டாடா டியாகோ EV ஆனது. கடந்த ஆண்டு, பன்ச் EV இருந்தது இப்போது இப்போது டாடா கர்வ் EV இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் மூன்றாவது EV ஆக உள்ளது.
Tata Curvv EV பற்றி மேலும்
கர்வ் EV ஆனது அதன் எஸ்யூவி-கூபே வடிவமைப்புடன் தனித்து தெரிகிறது. இதில் ஒரு குளோஸ்டு கிரில், LED DRL, சாய்வான கூரை, ஏரோடைனமிக் 18-இன்ச் அலாய்கள் மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் உள்ளன. அதன் பின்புறம் கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்திற்காக கூரையில் பொருத்தப்பட்ட டூயல் ஸ்பாய்லர் ஆகியவற்றைக் காட்டுகிறது.
Tata Curvv EV காரிலுள்ள வசதிகள் ?
வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஜெஸ்டர் பவர்டு டெயில்கேட் போன்ற நவீன வசதிகளுடன் கர்வ் EV நிரம்பியுள்ளது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட் போன்ற லெவல்-2 ADAS ஆகியவையும் உள்ளன
Tata Curvv EV: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
இது இரண்டு பேட்டரி பேக்குகளில் கிடைக்கும். விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
45 kWh |
55 kWh |
பவர் |
150 PS |
167 PS |
டார்க் |
215 Nm |
215 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
502 கி.மீ |
585 கி.மீ |
சார்ஜிங் நேரம் (DC 70 kW) |
40 நிமிடங்கள் (10% முதல் 80% வரை) |
40 நிமிடங்கள் (10% முதல் 80% வரை) |
சார்ஜிங் நேரம் (AC 7.2 kW) |
6.5 மணிநேரம் (10% முதல் 100%) |
8 மணிநேரம் (10% முதல் 100%) |
Tata Curvv EV: போட்டியாளர்கள்
கர்வ் EV ஆனது MG ZS EV உடன் நேரடியாக போட்டியிடுகிறது.மேலும் இது ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி சுஸூகி eVX போன்ற வரவிருக்கும் மாடல்களுக்கும் போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.