• English
  • Login / Register

2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் 4 புதிய எஸ்யூவி -களை அறிமுகம் செய்ய உள்ள டாடா

published on ஆகஸ்ட் 10, 2023 07:00 pm by rohit for டாடா நிக்சன்

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஆண்டு எஸ்யூவிக்கான போட்டி அதிகமாகும் என்பதால் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும்.

Tata SUVs

  • ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட், பன்ச் EV மற்றும் கர்வ் EV ஆகிய மூன்று மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

  •  டாடா இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் EV -யை அறிமுகப்படுத்தலாம்.

  •  ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வரும், மற்ற இரண்டும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வரும்.

  •  2023 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட்டாக காட்சிப்படுத்தப்பட்ட EV -பதிப்பையும் ஹாரியர் பெறும்.

  •  அனைத்தும் மின்மயமாக்கப்பட்ட ஹாரியர் மற்றும் சியரா உட்பட 2025-ம் ஆண்டுக்குள் 10 டாடா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரும்.

சமீபத்தில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில்(AGM), அதன் தலைவர் என்.சந்திரசேகரன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 4 புதிய எஸ்யூவிகளை கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்துm என்பதை உறுதிப்படுத்தினார். இது இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EV) இரண்டையும் உள்ளடக்கியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட், டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட், பன்ச் EV மற்றும் கர்வ் EV ஆகியவை இதில் அடங்கும்.

அவர் என்ன தெரிவித்தார் ?

2023 Tata Nexon

சந்திரசேகரன் கூறுகையில், "நெக்ஸானின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை நாங்கள் எந்த நேரத்திலும் அறிமுகப்படுத்துவோம். பின்னர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஹாரியரையும், பின்னர் பன்ச் EVயையும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் புதிய தயாரிப்பான கர்வ் EV -யையும் அறிமுகப்படுத்துவோம்.” என்றார்.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் எக்ஸ்டரை விட டாடா பன்ச் 5 அம்சங்களை கூடுதலாகப் பெறுகிறது

சாத்தியமான வெளியீட்டு அட்டவணைகள்

Tata Harrier facelift

நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 2023 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலத்திற்கு முன்னதாக விற்பனைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். டாடா விரைவில் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் EVமாடலையும் வெளியிடலாம். கார் தயாரிப்பு நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்  , அதே நேரத்தில் அதன் EV பதிப்பு பின்னர் வரும் (இது 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது). 2024 ஆம் ஆண்டில் இந்திய மார்க் தனது எலெக்ட்ரிக் இன்னிங்ஸை அனைத்தும் மின்மயமாக்கப்பட்ட பன்ச் உடன் தொடங்கும், பின்னர் ஜென்2  பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட புதிய கர்வ் EV -யை வெளியிடும்.

டாடாவின் எலெக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவின் ஒரு மீள்பார்வை

Tata Curvv EV
Tata Sierra

டாடா தற்போது எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விற்பனை இரண்டிலும் EV வெகுஜன சந்தையில் முன்னணியில் உள்ளது; இதன் கார்களில் டாடா டியாகோ EV (என்ட்ரி லெவல் மாடல்) மற்றும் டாடா நெக்ஸான் EV மேக்ஸ் (தற்போதைய ஃபிளாக்ஷிப் EV) ஆகியவை அடங்கும். 2025-ம் ஆண்டுக்குள் 10 புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யப்போவதாக 2021 ஆம் ஆண்டிலேயே  அறிவித்திருந்தது. பன்ச் EV மற்றும் கர்வ் EV தவிர, டாடா சியரா, ஹாரியர் EV மற்றும் அவின்யா EV ஆகியவை அதன் திட்டங்களில் அடுத்து வரவிருக்கும் பிற எலெக்ட்ரிக் கார்கள் ஆகும் .

மேலும் விவரம் அறிய : டாடா சியரா 4-சீட் லவுஞ்ச் லேஅவுட்டை வழங்கி அதன் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata நிக்சன்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience