அடுத்த ஆண்டில் வெளியாகின்றதா Tata Punch Facelift ?. சோதனை செய்யப்படும் போது கார் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
modified on மார்ச் 15, 2024 05:57 pm by shreyash for டாடா பன்ச் 2025
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா பன்ச் -ன் சோதனை கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஃபேஸ்லிஃப்ட் 2025 ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்டேட்டட் பன்ச் EV -யின் வசதிகளுடன் வரும்.
-
புதிய கிரில் மற்றும் LED DRL -கள் புதிய ஹெட்லைட் ஹவுஸிங் மற்றும் புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ஆகியற்றை வெளியில் உள்ள மாற்றங்களாக இருக்கலாம்.
-
இது ஒரு பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஒரு பெரிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறலாம்.
-
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றைப் பெறலாம்.
இந்தியாவில் 2021 -ம் ஆண்டு டாடா பன்ச் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2024 இல் புதுப்பிக்கப்பட்ட தோற்றம் மற்றும் புதிய அம்சங்களுடன் ஆல் எலக்ட்ரிக் வெர்ஷனையும் பெற்றது. இருப்பினும் பன்ச் -காரின் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வெர்ஷன் இன்னும் மிட்லைஃப் அப்டேட்டுக்காக காத்திருப்பில் உள்ளது. இது 2025 -ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது படம் பிடிக்கப்பட்டுள்ள பன்ச் சோதனை கார் வெளிப்புற தோற்றம் மறைக்கப்பட்டிருந்தது. இது பெரும்பாலும் ஃபேஸ்லிப்ட் பதிப்பாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.
ஸ்பை ஷாட்களில் நாம் என்ன பார்த்தோம்?
காரின் வெளிப்புறம் முற்றிலும் மறைக்கப்பட்டிருந்தாலும் பன்ச் EV -யை போலவே இதன் முன்பக்கமும் இருக்கும் என்பது தெரிய வருகின்றது. பன்ச் ஃபேஸ்லிஃப்ட் புதிய கிரில் LED DRL-கள் மற்றும் புதிய ஹெட்லைட் ஹவுசிங் ஆகியவை டாடா பன்ச் -ன் ஆல் எலக்ட்ரிக் வெர்ஷனில் இருப்பதைப் போன்றே இதிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றபடி ஒட்டுமொத்த மைக்ரோ எஸ்யூவி -யின் தோற்றத்தில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை இருப்பினும் இது அப்டேட்டட் அலாய் வீல்களை பெறலாம். பின்புறத்தில் அதன் டெயில்லைட்கள் பன்ச் -ன் தற்போதைய பதிப்பை போலவே இருக்கின்றது. ஆனால் பின்புற பம்பரில் சிறிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: Tata Nexon EV ஃபேஸ்லிஃப்ட் லாங் ரேஞ்ச் Vs Tata Nexon EV (பழையது): ரியல் வேர்ல்டு செயல்திறன் ஒப்பீடு
கேபின் அப்டேட்கள்
பன்ச் ஃபேஸ்லிஃப்ட் உட்புறம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவான கண்ணோட்டம் இப்போதைக்கு கிடைக்கவில்லை. என்றாலும் கூட இது பன்ச் EV -யில் இருப்பதை போலவே அப்டேட்டை பெறும். பன்ச் -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பானது பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற கூடுதல் வசதிகளைக் கொண்டிருக்கும். சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் தக்க வைக்கப்படும்.
பாதுகாப்பை பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் கூடிய 360 டிகிரி கேமரா ஆகியவை கூடுதலாக கொடுக்கப்படலாம். தற்போது பன்ச் ஆனது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமராவுடன் மட்டுமே வருகிறது.
மேலும் பார்க்க: Tata Punch EV Empowered Plus S Long Range மற்றும் Mahindra XUV400 EC Pro: எந்த EV -யை வாங்குவது சரியானதாக இருக்கும்?
பவர்டிரெய்ன் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் தற்போதுள்ள பன்ச் காரில் உள்ள அதே 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை (88 PS மற்றும் 115 Nm) தொடர்ந்து பயன்படுத்தும். இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக்) டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதே இன்ஜின் CNG உடன் வழங்கப்படுகிறது. ஆனால் 73.5 PS மற்றும் 103 Nm (CNG மோடில்) குறைக்கப்பட்ட அவுட்புட்டில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டாடா டியாகோ CNG மற்றும் டாடா டிகோர் CNG உடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் பன்ச் CNG ஃபேஸ்லிஃப்டை வழங்கலாம். பன்ச் CNG டாடாவின் டூயல் சிலிண்டர் டெக்னாலஜியுடன் வருகிறது. இது பூட் இடத்தை கூடுதலாக பயன்படுத்த உதவுகின்றது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் அதன் போட்டியை தொடரும். மேலும் மாருதி ஃப்ரான்க்ஸ், சிட்ரோன் C3, மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுக்கு ஒரு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: பன்ச் AMT
0 out of 0 found this helpful