சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Nexon Dark மற்றும் Hyundai Venue Knight எடிஷன்: வடிவமைப்பில் உள்ள வேறுபாடுகள் என்ன ?

published on மார்ச் 05, 2024 05:28 pm by rohit for டாடா நிக்சன்

இரண்டும் பிளாக் கலரில் உள்ள சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள். ஆனால் வென்யூ ஸ்பெஷல் எடிஷனில் சில கூடுதல் வசதிகள் உள்ளன.

டாடா நெக்ஸான் செப்டம்பர் 2023 மாதத்தில் அதன் இரண்டாவது பெரிய மிட்லைஃப் அப்டேட்டை பெற்ற பிறகு இப்போது டார்க் பதிப்பையும் பெற்றுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நெக்ஸான் மட்டுமே தொழிற்சாலையில் இருந்து முற்றிலும் ஆல்-பிளாக் காராக வெளியாகும் கார் கிடையாது. ஆகஸ்ட் 2023 -ல் ஹூண்டாய் வென்யூ 'நைட் எடிஷன்' என்ற தோற்றத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவும் ஒரு பிளாக்-அவுட் பதிப்பாகும்.

இரண்டுமே மிகவும் சிறப்பான சாலை தோற்றத்தை கொண்டுள்ளன. ஆனால் இந்த இரண்டு பிளாக்-அவுட் சப்காம்பாக்ட் எஸ்யூவி -களும் தோற்றத்தில் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்கின்றது என்பதைப் பார்ப்போம்:

முன்பக்கம்

ஃபேஸ்லிஃப்ட் ஸ்டைலிங்குடன் நெக்ஸான் டார்க் ஸ்பிளிட்-எல்இடி ஹெட்லைட் செட்டப்பை கொண்டுள்ளது. பம்பரில் உள்ள அதன் அனைத்து குரோம் எம்ப்ளிஷ்மென்ட்களுக்கும் பிளாக் கலர் ட்ரீட்மென்ட் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட் பிளாக் கலரில் உள்ளது. மேலும் முன்பக்கத்தில் கிரில்லையும் டார்க் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள ‘ஹூண்டாய்’ லோகோவையும் நீங்கள் கவனிக்க முடியும். இது ஹெட்லைட்களில் ஸ்மோக்ட் எஃபெக்ட் பம்பரில் பிராஸ் இன்செர்ட்கள் ஸ்கிட் பிளேட்டிற்கான பிளாக் ஃபினிஷ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

பக்கவாட்டு தோற்றம்

டாடா எஸ்யூவி பக்கவாட்டில் 16-இன்ச் பிளாக் அலாய் வீல்கள் பிளாக்-அவுட் ORVM ஹவுஸிங் மற்றும் முன் ஃபெண்டர்களில் '#Dark’ என்ற பேட்ஜ்களுடன் காணப்படுகிறது. மறுபுறம் வென்யூ நைட் எடிஷன் அலாய் வீல்கள் (பிராஸ் இன்செர்ட்களை கொண்டது) மற்றும் ரெட் பிரேக் காலிப்பர்கள் ரூஃப் ரெயில்கள் மற்றும் ORVM -களுக்கு பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புறம்

நெக்ஸான் டார்க்கின் பின்புறம் ‘நெக்ஸான்’ மோனிகர் மற்றும் பம்பர் இரண்டும் பிளாக் கலரில் முடிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் தனது லோகோ மற்றும் எஸ்யூவி -யின் பின்புறத்தில் ‘Knight’ என்ற சின்னத்துடன் 'வென்யூ' பேட்ஜுக்கும் இதேபோன்ற ஃபினிஷை கொடுத்துள்ளது. ஹூண்டாய் எஸ்யூவி பம்பரில் பிராஸ் ஆக்ஸன்ட்களை கொண்டுள்ளது.

தொடர்புடையது: டாடா மீண்டும் ஹூண்டாயை வீழ்த்தி பிப்ரவரி 2024 விற்பனையில் முன்னேறுகிறது

கேபின்

இங்குள்ள இரண்டு எஸ்யூவி -களும் அவற்றின் ஸ்பெஷல் எடிஷன்களும் பதிப்புகளின் ஒட்டுமொத்தத் தன்மையுடன் செல்ல முழு பிளாக் கேபின் தீமுடன் வருகின்றன. நெக்ஸான் கார் டாடாவின் ட்ரை-ஆரோவ் வடிவத்துடன் பிளாக் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் 'டார்க்' பிராண்டிங்கை கொண்டுள்ளது. வென்யூ நைட் எடிஷனில் பிராஸ் ஆக்ஸன்ட்களுடன் கூடிய பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது. கேபினை சுற்றிலும் பிராஸ் கலர் இன்செர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளே ஸ்போர்ட்டியர் மற்றும் பிரீமியம் தோற்றத்திற்கு பெடல்கள் மெட்டல் ஃபினிஷ் மற்றும் 3டி டிசைனர் மேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகள்

டாடா நெக்ஸான் டார்க்கை ஸ்டாண்டர்டான மாடலில் உள்ள அதே வசதிகளுடன் கொடுக்கின்றது. இது டூயல் 10.25-இன்ச் திரைகள் உள்ளன(ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவருக்கான தகவலுக்காகவும்). சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவையும் உள்ளன. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.

வென்யூ நைட் எடிஷனில் 8-இன்ச் டச் ஸ்கிரீன் சன்ரூஃப் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் டூயல்-கேமரா டேஷ்கேம் போன்ற வசதிகள் உள்ளன: பின்னர் வந்த இரண்டு ஸ்பெஷல் எடிஷன்களிலும் புதிதான சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள் ரிவர்சிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் ஹூண்டாய் வழங்குகிறது.

மேலும் படிக்க: இந்தியாவில் குரூஸ் கன்ட்ரோலுடன் கிடைக்கும் விலை குறைவான 10 கார்கள் இவை

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

நெக்ஸான் டார்க்

விவரங்கள்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

120 PS

115 PS

டார்க்

170 Nm

260 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AMT 7-ஸ்பீடு DCT*

6-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AMT

*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

வென்யூ நைட் எடிஷன்

விவரங்கள்

1.2-லிட்டர் N/A பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

83 PS

120 PS

டார்க்

114 Nm

172 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

6-ஸ்பீடு iMT* 7-ஸ்பீடு DCT

* iMT - இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

விலை மற்றும் போட்டியாளர்கள்

டாடா நெக்ஸான் டார்க் விலை ரூ.11.45 லட்சம் முதல் ரூ.13.85 லட்சம் வரையிலும் ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷனின் விலை ரூ.10.13 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரையிலும் உள்ளது. கியா சோனெட் எக்ஸ்-லைன் மற்றும் நிஸான் மேக்னைட் ரெட் எடிஷன் உடன் போட்டியிடும். டாடா-ஹூண்டாய் சப்-4m எஸ்யூவி -கள் மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT

r
வெளியிட்டவர்

rohit

  • 19 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன்

Read Full News

explore similar கார்கள்

டாடா நிக்சன்

Rs.8.15 - 15.80 லட்சம்* get சாலை விலை
டீசல்23.23 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.44 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

ஹூண்டாய் வேணு

Rs.7.94 - 13.48 லட்சம்* get சாலை விலை
டீசல்24.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்20.36 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை