• English
  • Login / Register

Tata Curvv EV: உற்பத்திக்கு தயாராக உள்ள காரின் இன்ட்டீரியர் விவரங்களுடன் டீஸர் முதன் முறையாக வெளியாகியுள்ளது

published on ஜூலை 25, 2024 06:13 pm by shreyash for டாடா கர்வ் இவி

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கர்வ்வ் EV ஆனது டாடா ஹாரியரில் இருந்து நெக்ஸான் EV -யால் ஈர்க்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை பெறுகிறது.

  • ஏசி வென்ட்கள், சென்டர் கன்சோல் கியர் ஷிஃப்டர் மற்றும் டிரைவ் மோட் செலக்டர் போன்ற விஷயங்கள் நெக்ஸான் இவி -யில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளன.

  • கனெக்டட் LED லைட்ஸ் செட்டப், கூபே ரூஃப்லைன் மற்றும் ஃப்ளஷ் வகை டோர் ஹேண்டில்ஸ் ஆகியவை இருக்கும். 

  • 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய  வசதிகள் இந்த காரில் கிடைக்கும்.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்படும்.

  • இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் இது விற்பனைக்கு வரும். சுமார் 500 கி.மீ ரேஞ்சை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • இதன் விலை ரூ.20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 7, 2024 அன்று டாடா கர்வ்வ் EV காரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது இது பன்ச் EV -யில் பயன்படுத்தப்பட்டுள்ள Acti.ev தளத்தை அடிப்படையாகக் கொண்டது. கர்வ்வ் EV ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் மார்கெட் ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபே கார் ஆகும். டாடா சமீபத்தில் கர்வ்வ் EV -யின் வெளிப்புற வடிவமைப்பை வெளியிட்டது. இப்போது டாடா நிறுவனம் உற்பத்திக்கு தயாராக உள்ள மாடலின் இன்ட்டீரியர் விவரங்களுடன் டீசரை வெளியிட்டுள்ளது.

நெக்ஸான் காரில் இருப்பதை டாஷ்போர்டு அமைப்பை பெறுகிறது

வீடியோ டீஸர் டாடா கர்வ்வ் EV -யின் டாஷ்போர்டு ஆனது டாடா நெக்ஸான் EV -யின் டாஷ்போர்டுக்கு நெருக்கமாக இருப்பதைக் காட்டுகிறது. ஏசி வென்ட்கள், சென்டர் கன்சோல், கியர் ஷிஃப்டர் மற்றும் டிரைவ் மோட் செலக்டர் ஆகியவற்றின் வடிவமைப்பு நெக்ஸான் EV -யை பிரதிபலிக்கிறது. இருப்பினும் நெக்ஸான் EV போலல்லாமல் கர்வ்வ் EV ஆனது டாடா ஹாரியர்/சஃபாரி கார்களில் இருப்பதை போன்ற 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை கொண்டுள்ளது. புதிய டாடா மாடல்களை போலவே கர்வ்வ் EV -யின் ஸ்டீயரிங் வீலும் ஒளிரும் டாடா லோகோவை கொண்டுள்ளது. 

டீஸர் டச் ஸ்கிரீன் (ஒருவேளை 12.3-இன்ச் யூனிட்) மற்றும் ஆல் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே (ஒருவேளை 10.25-இன்ச் யூனிட் ஆக இருக்கலாம்) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இவை இரண்டும் நெக்ஸான் EV -யிலிருந்து பெறப்பட்டவை ஆகும். மேலும் டாஷ்போர்டில் சிவப்பு நிற ஆம்பியன்ட் லைட்களும் உள்ளன.

மேலும் பார்க்க: வெளிப்புறம் மறைக்கப்படாத Tata Curvv முதன் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

வெளிப்புற வடிவமைப்பு

வெளியில் இருந்து பார்த்தால் கர்வ்வ் EV டாடா நெக்ஸான் EV போன்றே தெரிகிறது. இணைக்கப்பட்ட LED DRL -கள் மற்றும் முன்பக்க பம்பர் ஆகியவை நெக்ஸான் இவி -யை போலவே இருக்கும். பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது கர்வ்வ் EV ஆனது கூபே ரூஃப்லைன் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. பின்புறத்தில் கர்வ்வ் EV கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் ஒரு பிளாக் அவுட் பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு 

கர்வ்வ் EV காரில் வென்டிலேட்டட் முன் சீட்கள், ஒரு பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் ஏசி மற்றும் பிராண்டட் ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பாதுகாப்பைப் பொறுத்தவரை கர்வ்வ் EV ஆனது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவற்றை கொண்டிருக்கலாம். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் கர்வ்வ் EV பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச்

கர்வ்வ் EV -க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இது 500 கி.மீ வரம்பிற்கு இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். டாடா நெக்ஸான் EV -யில் காணப்படுவது போல், டாடா நெக்ஸான் EV ஆனது V2L (ஹெஹிகிள் டூ லோடு) மற்றும் V2V (ஹெஹிகிள் டூ  ஹெஹிகிள்) ஃபங்ஷன்களுடன் வரும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

டாடா கர்வ்வ் EV -யின் விலை ரூ. 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV -க்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகிய கார்களுடனும் போட்டியிடும்.

டாடா கர்வ்வ் பற்றிய கூடுதல் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

was this article helpful ?

Write your Comment on Tata கர்வ் EV

explore மேலும் on டாடா கர்வ் இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience