• English
  • Login / Register

Tata Curvv EV -யை இப்போது முன்பதிவு செய்யலாம், விரைவில் டெலிவரி தொடங்கும்

published on ஆகஸ்ட் 12, 2024 06:47 pm by samarth for டாடா கர்வ் இவி

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா கர்வ் காரை  ரூ.21,000 செலுத்தி ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பில் முன்பதிவு செய்யலாம்.

Tata Curvv EV Bookings Open

  • டாடா கர்வ் EV ரூ. 17.49 லட்சம் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • Arcade.ev சப்போர்ட் உடன் கூடிய 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

  • இது 45 kWh மற்றும் 55 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இந்த காரில் கிடைக்கும். ஒரே ஒரு மோட்டார் செட்டப் மட்டுமே இந்த காரில் உள்ளது.

  • இந்த காரின் கிளைம்டு ரேஞ்ச் 585 கி.மீ (MIDC) ஆகும்.

  • ஆகஸ்ட் 23 முதல் டாடா இந்த காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யத் தொடங்கும்.

டாடா கர்வ் EV இப்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் டாடா இப்போது அதிகாரப்பூர்வமாக இந்த காருக்கான முன்பதிவுகளை திறந்துள்ளது. ரூ.21,000 செலுத்தி ஆன்லைனில் அல்லது உங்கள் அருகிலுள்ள டாடா டீலர்ஷிப் மூலமாக முன்பதிவு செய்யலாம். டெலிவரிகளை ஆகஸ்ட் 23 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்வ் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பின் விலை விவரங்களையும் செப்டம்பர் 2 அன்று  டாடா வெளியிட உள்ளது. இங்கே கர்வ் EV காரில் என்ன கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Tata Curvv EV dual-tone interior

நீங்க தேர்வு செய்யும் வேரியன்ட்டை பொறுத்து  கர்வ் EV வெவ்வேறு கேபின் தீம்களை கொண்டுள்ளது. டாடா ஹாரியர்-சஃபாரி கார்களில் உள்ளதைப் போன்றே டாப்-ஸ்பெக் வேரியன்ட் டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் இன்ட்டீரியர் உடன் மற்றும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.

Tata Curvv EV touchscreen

12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 9-ஸ்பீக்கர் ஜேபிஎல்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் டாடா கர்வ் -வை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கர்வ் EV -யின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் Arcade.ev ஆப்ஸ் தொகுப்பையும் சப்போர்ட் செய்யும். இதன் மூலம் பயனர்கள் OTT ஆப்ஸ் மூலம் கேம்கள் மற்றும் உள்ளடக்கத்தைப் பார்க்கலாம்.

6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் கூடிய 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் நிலை 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

பவர்டிரெய்ன் 

கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது உங்கள் ஆப்ஷனுக்கு ஏற்ப தேர்வு செய்ய அனுமதிக்கிறது. இந்த பேட்டரி பேக்குகளுக்கான விரிவான விவரங்கள் இங்கே: 

வேரியன்ட்

கர்வ்.ev 45 (மீடியம் ரேஞ்ச்)

கர்வ்.ev 55 (லாங் ரேஞ்ச்)

பேட்டரி பேக்

45 kWh

55 kWh

எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

1

1

பவர்

150 PS

167 PS

டார்க்

215 Nm

215 Nm

கிளைம்டு ரேஞ்ச் (MIDC)

502 கி.மீ வரை

585 கி.மீ வரை

MIDC - மாடிஃபைடு இந்தியன் டிரைவ் சைக்கிள்

Tata Curvv EV charging flap

EV ஆனது V2L (வெஹிகிள் டூ லோடு) மற்றும் V2V (வெஹிகிள் டூ வெஹிகிள்) வசதிகளையும் கொண்டுள்ளது. கர்வ் EV ஆனது DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை அதிகபட்சமாக 70 kW அவுட்புட் உடன் வழங்குகிறது. இதன் மூலம் பேட்டரி 40 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இது 7.2 kW AC சார்ஜரை பெறுகிறது. இது 45 kWh பேட்டரி பேக்கை 6.5 மணி நேரத்தில் 10 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யவும். 55 kWh பேட்டரி பேக்கை கிட்டத்தட்ட 8 மணி நேரத்தில் சார்ஜ் செய்யவும் இது பயன்படும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Tata Curvv Ev front

டாடா கர்வ் EV விலை ரூ.17.49 லட்சத்தில் தொடங்கி ரூ.21.99 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருக்கிறது. இது MG ZS EV -க்கு ஸ்டைலான மாற்றாக செயல்படுகிறது, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்

கார்கள் தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: டாடா கர்வ் EV ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata கர்வ் EV

Read Full News

explore மேலும் on டாடா கர்வ் இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience