மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Curvv மற்றும் Curvv EV கார்கள் நாளை அறிமுகமாகவுள்ளன
published on ஜூலை 18, 2024 03:58 pm by dipan for டாடா கர்வ் இவி
- 54 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடாவின் முதல் எஸ்யூவி-கூபே காராக கர்வ்வ் இருக்கும். மேலும் நெக்ஸான் மற்றும் ஹாரியர் ஆகியவற்றுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
-
கர்வ்வ் கார் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் EV பதிப்புகள் இரண்டிலும் கிடைக்கும்.
-
கூபே-ஸ்டைல் ரூஃப்லைன் மற்றும் கனெக்டட் LED DRL -கள் மற்றும் டெயில் லைட்கள் இருக்கும்.
-
டாடா 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS உடன் கர்வ்வ் ஐ கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
கர்வ்வ் EV ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
-
டாடா கர்வ்வ் ICE விலை ரூ. 10.50 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கர்வ்வ் EV -யின் ஆரம்ப விலை ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும்.
டாடா கர்வ்வ் மற்றும் கர்வ்வ் இவி நாளை வெளியிடப்படவுள்ளது. இதன் மூலம் சாமானியர்களுக்கான இடத்தில் எஸ்யூவி-கூபே பாடி பாணி கொண்ட கார் ஒன்று அறிமுகமாகவுள்ளது. இந்த கார்களுக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே சில பான்-இந்திய டாடா டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளன. நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
டாடா கர்வ்வ் மற்றும் கர்வ்வ் EV: இதுவரை நமக்கு தெரிந்த விஷயங்கள்
டாடா மோட்டார்ஸ் சில முறை கர்வ்வ் காரின் டீஸரை வெளியிட்டுள்ளது. இது புரடெக்ஷன்-ஸ்பெக் மாடல் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. எனவே அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் காணப்படுவது போன்ற ஸ்டைலிங் இடம்பெற வாய்ப்புள்ளது. முன்பக்கமாக இது ஒரு ஸ்பிளிட்டட் ஹெட்லைட் டிஸைனை பெறும். அதன் கீழே ஒரு டாடா லோகோ இருக்கும். EV கார் ஒரு குளோஸ்டு -ஆஃப் கிரில்லை கொண்டிருக்கும். அதே நேரத்தில் அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) ஆனது வழக்கமான மெஷ்-பேட்டர்ன் கிரில்லை கொண்டிருக்கும்.
பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது இதன் சாய்வான கூரை தெரியும். டாடா நிறுவனம் முதன்முதலாக கர்வ்வ் காரில் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களை அறிமுகப்படுத்தவுள்ளது என்பதையும் டீஸர்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பின்புறம் ஒரு உயரமான பம்பர் மற்றும் டெயில் லைட்ஸ் ஆகியவற்றுக்கு ஒரு LED பார் கொடுக்கப்பட்டுள்ளது.
டாடா கர்வ்வ் காரின் டேஷ்போர்டானது டாடா நெக்ஸான் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். நேர்த்தியான சென்ட்ரல் ஏசி வென்ட்களுக்கு மேல் ஃபிரீ-புளோட்டிங் டச் ஸ்கிரீனை கொண்டிருக்கும். இருப்பினும் கர்வ்வ் ஆனது புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற ஃபிளாக்ஷிப் மாடல்களில் இருந்து பெறப்பட்ட ஒளிரும் டாடா லோகோவுடன் வேறுபட்ட கேபின் தீம் மற்றும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இது நெக்ஸானில் உள்ள அதே டிரைவ் மோட் செலக்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்டரையும் பெறும்.
டாடா 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கும் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இந்த கார்கள் கிடைக்கும் என தெரிகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஃபிரன்ட் கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்
டாடா கர்வ்வ் ICE புதிய 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜின் மற்றும் நெக்ஸான் காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீடு MT |
மறுபுறம் கர்வ்வ் EV ஆனது டாடாவின் Acti.ev தளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆலவே சுமார் 500 கிமீ தூரம் ரேஞ்ச் கொடுக்கக்கூடிய வகையில் கொண்ட இரண்டு பேட்டரி பேக்குகளுக்கான ஆப்ஷன் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் EV ஆனது கர்வ்வ் ICE -க்கு முன்னதாகவே விற்பனைக்கு கொண்டு வரப்படும். கர்வ்வ் EV விலை ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மறுபுறம் டாடா கர்வ்வ் ICE காரின் விலை ரூ.10.50 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோன் பசால்ட் காருக்கு நேரடியாக போட்டியாக இருக்கும். இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட், மற்றும் ஃபோக்ஸ்க்ஸ்வேகன் டைகுன் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.
வாகன உலகில் இருந்து உடனடி அப்டேட்கள் வேண்டுமா? கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
0 out of 0 found this helpful