சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டாடா அல்ட்ரோஸூக்கு போட்டியாக மாருதி பாலினோ: எந்த ஹேட்ச்பேக்கை வாங்குவது?

published on ஜனவரி 31, 2020 03:06 pm by dinesh for டாடா ஆல்டரோஸ் 2020-2023

அல்ட்ரோஸ் ஆனது பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வரும், பாலினோ விரைவில் பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்க இருக்கின்றது

டாடா இறுதியில் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் அல்ட்ரோஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ரூபாய் 5.29 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வெளிவரும் ஆல்ட்ரோஸ் ஆனது மாருதி பாலினோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் வோக்ஸ்வேகன் போலோ போன்றவற்றிற்குப் போட்டியாக அமையும். ஆனால் இந்திய பிரீமியம் ஹேட்ச்பேக் இடத்தை வெல்லக்கூடிய போதுமான திறன் இதில் இருக்கின்றதா? மாருதி பாலினோவுடன் ஒப்பிடுகையில் அல்ட்ரோஸ் முன்னணியில் இருப்பதை கீழே உள்ள ஒப்பீட்டில் காணலாம்.

அளவுகள்:

டாடா அல்ட்ரோஸ்

மாருதி சுசுகி பாலினோ

நீளம்

3990மிமீ

3995மிமீ

அகலம்

1755மிமீ

1745மிமீ

உயரம்

1523மிமீ

1510மிமீ

சக்கரத்திற்கு இடையேயான இடைவெளி

2501மிமீ

2520மிமீ

பொருட்கள் வைப்பதற்கான இடம்

345எல்

339எல்

  • பாலினோவானது அல்ட்ரோஸை காட்டிலும் நீளமானது. இது நீளமான சக்கர இடைவெளியையும் கொண்டுள்ளது.

  • உயரம் மற்றும் அகலம் என்று வருகிற போது, அல்ட்ரோஸ் முன்னிலையில் இருக்கின்றது.

  • பொருட்களை வைப்பதற்கான இடம் என்று வருகிற போது பாலினோவைக் காட்டிலும் அல்ட்ரோஸ் சிறந்ததாக இருக்கின்றது.

இயந்திரங்கள்:

பெட்ரோல்:

டாடா அல்ட்ரோஸ்

மாருதி சுசுகி பாலினோ

இயந்திரம்

1.2-லிட்டர்

1.2-லிட்டர்/ கலப்பு இயந்திரங்களுடன் 1.2-லிட்டர்

மாசு உமிழ்வு

பி‌எஸ்6

பி‌எஸ்6/பி‌எஸ்6

ஆற்றல்

86பி‌எஸ்

83பி‌எஸ்/90பி‌எஸ்

முறுக்கு திறன்

113என்‌எம்

113என்‌எம்/113என்‌எம்

செலுத்துதல்

5-வேக எம்‌டி

5-வேக எம்‌டி,சி‌வி‌டி/5-வேக எம்‌டி

  • அல்ட்ரோஸ் ஒற்றை பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் கிடைக்கிறது, பாலினோ வெவ்வேறு பிஎஸ்6 பெட்ரோல் அலகுகளுடன் கிடைக்கிறது. அதில் ஒன்று லேசான-கலப்பின அமைப்பைக் கொண்டிருக்கின்றது, இது எரிபொருளை சேமிக்க உதவும் தானியங்கு தொடக்கம் / நிறுத்த அம்சத்தைப் பெறுகிறது.

  • அதே திறன் இதில் காணப்பட்டாலும், அல்ட்ரோஸூடன் ஒப்பிடுகையில் மாருதியின் லேசான-கலப்பின பெட்ரோல் அலகு அதிக சக்திவாய்ந்ததாகும்.

  • முறுக்குதிறனைப் பொருத்தவரையில், மூன்று இயந்திரங்களும் ஒரே மாதிரியான வெளியீட்டைக் கொண்டுள்ளன.

  • செலுத்துதலைப் பொருத்தவரையில், அல்ட்ரோஸ் மற்றும் பாலினோவின் லேசான-கலப்பு ஆகியவை 5-வேகக் கைமுறை செலுத்துதலுடன் வருகின்றன. எனினும், நிலையான பாலினோ ஒரு சிவிடியையும் கொண்டிருக்கலாம்.

  • டாடா அல்ட்ரோஸிற்கான இரட்டை உரசிணைப்பி தானியங்கி பற்சக்கர பெட்டியில் இயங்குகின்றது. இது வருங்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

டீசல்:

டாடா அல்ட்ரோஸ்

மாருதி சுசுகி பாலினோ

இயந்திரம்

1.5-லிட்டர்

1.3-லிட்டர்

மாசு உமிழ்வு

பி‌எஸ்6

பி‌எஸ்4

ஆற்றல்

90பி‌எஸ்

75பி‌எஸ்

முறுக்கு திறன்

200என்‌எம்

190என்‌எம்

செலுத்துதல்

5-வேக எம்‌டி

5-வேக எம்‌டி

  • அல்ட்ரோஸ் அதனுடைய வகையில் பிஎஸ்6 டீசல் இயந்திரத்தைப் பெற்ற முதல் கார் ஆகும். பாலினோ பிஎஸ்4 டீசல் இயந்திரத்துடன் வருகிறது.

  • அதனுடைய பெரிய இயந்திரத்திற்கு நன்றி, அல்ட்ரோஸ் பாலினோவைக் காட்டிலும் அதிக ஆற்றல் மற்றும் முறுக்குதிறனைக் கொண்டுள்ளது.

  • இரண்டு இயந்திரங்களும் 5-வேக கைமுறை பற்சக்கரபெட்டி அமைப்புடன் கிடைக்கின்றன.

  • பிஎஸ்6 வரலாற்றில் எந்த டீசல் கார்களையும் அளிக்க வேண்டாம் என்று கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதால், மாருதி டிசைர் டீசல் 2020 மார்ச் 31 வரை மட்டுமே விற்பனைக்கு வரும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த கார்களின் டீசல் வகைகளை நாங்கள் ஒப்பிட மாட்டோம்.

பெட்ரோல் இயந்திரத்தின் விரிவான விலைகள்:

டாடா அல்ட்ரோஸ்

மாருதி சுசுகி பாலினோ

எக்ஸ்‌இ ரூபாய் 5.29 லட்சம்

எக்ஸ்‌இ ரைட்ம் - ரூபாய் 5.54 லட்சம்

சிக்மா-ரூபாய் 5.58 லட்சம்

எக்ஸ்‌எம்- ரூபாய் 6.15 லட்சம்

எக்ஸ்‌எம் ஸ்டைல்- ரூபாய் 6.49 லட்சம்

டெல்டா-ரூபாய் 6.36 லட்சம்

எக்ஸ்‌எம் ரிதம் - ரூபாய் 6.54 லட்சம்

எக்ஸ்‌எம் ரிதம் +ஸ்டைல்- ரூபாய் 6.79 லட்சம்

எக்ஸ்‌டி- ரூபாய் 6.84 லட்சம்

ஸீட்டா-ரூபாய் 6.97 லட்சம்

எக்ஸ்‌டி லூக்ஸ்-ரூபாய் 7.23 லட்சம்

டெல்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்-ரூபாய் 7.25 லட்சம்

எக்ஸ்‌இசட்- ரூபாய் 7.44 லட்சம்

ஆல்பா-ரூபாய் 7.58 லட்சம்

எக்ஸ்‌இசட்(ஓ)-ரூபாய் 7.69 லட்சம்

எக்ஸ்‌இசட் அர்பன்-ரூபாய் 7.74 லட்சம்

ஸீட்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்-ரூபாய் 7.86 லட்சம்

குறிப்பு: ரிதம், ஸ்டைல் லூக்ஸ் மற்றும் அர்பன் போன்றவை தொழிற்சாலை-பொருத்தப்பட்ட சிறப்பு ஒழுங்கமைவுகளுடன், அவை நிர்ணயிக்கப்பட்ட பிரீமியத்தில் அந்தந்த நிலையான வகைகளை காட்டிலும் முன்பே பொருத்தப்பட்ட கூடுதலான தனிவிதமான அம்சங்களுடன் வருகின்றன.

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இ ரிதத்திற்கு போட்டியாக மாருதி பாலினோ சிக்மா:

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இ ரிதம்

ரூபாய் 5.54 லட்சம்

மாருதி பாலினோ சிக்மா:

ரூபாய் 5.58 லட்சம்

மாறுபாடு

ரூபாய் 4,000 (பாலினோவின் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள்: முன்புற இரட்டை காற்றுப்பைகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், பின்புறமாகக் காரை நிறுத்தும் உணர்விகள், முன் இருக்கை பட்டிக்கான நினைவூட்டி, ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான மரையாணிகள், காரின் மையப்பகுதியின் வண்ணத்திலேயே இருக்கும் மோதுகைத் தாங்கிகள் மற்றும் கதவு கைப்பிடிகள், மையப் பூட்டு அமைப்பு, முன் ஆற்றல் மிக்க ஜன்னல்கள், முன் புறம் சரிசெய்யக்கூடிய தலை சாய்ப்பான்கள், கைமுறை குளிர்சாதன வசதி, கையால் சரிசெய்யக்கூடிய முகப்புவிளக்கு மற்றும் சாய்வான-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி

மாருதி பாலினோ சிக்மாவை காட்டிலும் அதிகமாக அல்ட்ரோஸ் எக்ஸ்இ ரிதம் எதை வழங்குகிறது: பலவிதமாக ஓட்டக்கூடிய அமைப்பு முறைகள், தடைக்கருவி கட்டுப்பாடு அமைப்பு, சாவியில்லா நுழைவு மற்றும் புளூடூத் இணைப்புடன் 2-டின் இசை அமைப்பு.

டாடா அல்ட்ரோஸ் ரிதமைக் காட்டிலும் அதிகமாகப் பாலினோ சிக்மா எதை வழங்குகிறது: காரின் மையப் பகுதியின்-வண்ணத்தில் ஓ‌ஆர்‌வி‌எம்‌கள்.

முடிவு: இங்கே எங்களுடைய தேர்வாக அல்ட்ரோஸ் இருக்கிறது. விலை மிகவும் குறைவு என்றாலும், இது பாலினோவைக் காட்டிலும் கூடுதலான அம்சங்களை வழங்குகிறது.

  • டாடா அல்ட்ரோஸ் வகைகள் விளக்கப்பட்டுள்ளன: எதை வாங்குவது?

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்எம் ஸ்டைலுக்கு போட்டியாக மாருதி பாலினோ டெல்டா:

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்எம் ஸ்டைல்

ரூபாய் 6.49 லட்சம்

மாருதி பாலினோ டெல்டா

ரூபாய் 6.36 லட்சம்

மாறுபாடு

ரூபாய் 13,000 (அல்ட்ரோஸின் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளைக் காட்டிலும்): புளூடூத் இணைப்புடன் கூடிய இசை அமைப்பு, மின்சாரத்தை-சரிசெய்யக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய ஓ‌ஆர்‌வி‌எம் கள், டிஆர்எல்கள், சக்கர பாதுகாப்பு, பின்புற ஆற்றல்மிக்க ஜன்னல்கள் மற்றும் சாவியில்லாத நுழைவு.

பாலினோ டெல்டாவை காட்டிலும் அதிகமாக அல்ட்ரோஸ் எக்ஸ்எம் ஸ்டைல் எதை வழங்குகிறது: பலவிதமாக ஓட்டக்கூடிய அமைப்பு முறைகள், மாறுபட்ட மேற்கூரை அமைப்பு, 16-அங்குல உலோக சக்கரங்கள் மற்றும் முன் மற்றும் பின்புற மூடுபனி விளக்குகள்.

அல்ட்ரோஸ் எக்ஸ்இசட் ஸ்டைலை காட்டிலும் அதிகமாகப் பாலினோ டெல்டா எதை வழங்குகிறது: பின்புற வாஷர் வைப்பர் மற்றும் மூடுபனி விலக்கி, ஓ‌ஆர்‌வி‌எம்களில் திருப்பத்திற்கான குறிகாட்டிகள், திசைதிருப்பியில்-பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், தானியங்கி குளிர்சாதன அமைப்பு, எல்இடி பிரகாசமுடைய முகப்புவிளக்குகள், பின்புற இருக்கையை சரிசெய்யக்கூடிய தலைசாய்பான் மற்றும் 60:40 சாயக்கூடிய பின்புற இருக்கைகள்.

முடிவு: விலை குறைவாக இருந்தாலும், பாலினோ அல்ட்ரோஸை காட்டிலும் மிகவும் பயனுள்ள அம்சங்களை அளிக்கிறது, இது வாங்குவதற்கான ஒன்றாகும். பாலினோவில் ஓட்டுவதற்கான முறைகள் மற்றும் மூடுபனி விளக்குகள் இல்லையென்றாலும், தானியங்கி குளிர்சாதன வசதி இருக்கின்றது, இது வாங்குவதற்கு மலிவாக இருக்கின்றது.

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டிக்கு போட்டியாக மாருதி பாலினோ ஸீட்டா:

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி

ரூபாய் 6.84 லட்சம்

மாருதி பாலினோ ஸீட்டா

ரூபாய் 6.97 லட்சம்

மாறுபாடு

ரூபாய் 13,000 (பாலினோவின் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளைக் காட்டிலும்): ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியில் செயல்படக்கூடிய தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, டிஆர்எல், கட்டுப்பாடு பொருத்தப்பட்ட திசைதிருப்பி, அழுத்த-பொத்தான் மூலம் வாகன இயக்கம்.

பாலினோ ஸீட்டாவைக்காட்டிலும் அதிகமாக ஆல்ட்ரோஸ் எக்ஸ்டி எதை வழங்குகிறது: பலவிதனமான ஓடக்கூடிய அமைப்பு முறைகள், வாகனத்தை நிறுத்துவதற்கு உதவக்கூடிய கேமரா, வேகக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த இயக்கம் / நிறுத்தம்.

அல்ட்ரோஸ் எக்ஸ்டியைக் காட்டிலும் பாலினோ ஸீட்டா எதை வழங்குகிறது: 16-அங்குல உலோக சக்கரங்கள், தானியங்கி-சரிசெய்யக்கூடிய ஐஆர்விஎம், தொலைநோக்கி திசைதிருப்பி, தானியங்கி குளிர்சாதன வசதி, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, பின்புற வாஷர் வைப்பர் மற்றும் மூடுபனி விலக்கி, எல்இடி கொண்ட பிரகாசமான முகப்பு விளக்குகள், முன்புற மூடுபனி விளக்குகள், பின்புற இருக்கையை சரிசெய்யக்கூடிய தலைசாய்பான்கள் மற்றும் 60:40 சாயக்கூடிய இருக்கைகள்.

முடிவு: இந்த இரண்டு கார்களுமே தனிவிதமான அம்சங்கள் அடங்கிய தொகுப்பைப் பெறுகின்றன. எனினும், பாலினோவில் இருக்கக் கூடிய அம்சங்கள் எங்களுக்கு ஏற்றது போல இருக்கும் என்பது எங்களுடைய கருத்து, மேலும் இது அல்ட்ரோஸை காட்டிலும் அதிகமாக ஈர்க்கும் பிரீமியமும் நியாயமானதாகத் தெரிகிறது. எனவே, இங்கே பாலினோ தான் எங்களுடைய தேர்வு ஆகும்.

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி லூக்ஸ் போட்டியாக மாருதி பாலினோ டெல்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்:

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி லூக்ஸ்

ரூபாய் 7.23 லட்சம்

மாருதி பாலினோ டெல்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்

ரூபாய் 7.25 லட்சம்

மாறுபாடு

ரூபாய் 2,000 (பாலினோவின் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள்: முன்புற இரட்டை காற்றுப்பைகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், பின்புறமாக காரை நிறுத்தும் உணர்விகள், முன் இருக்கை பட்டிக்கான நினைவூட்டி, ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான மரையாணிகள், காரின் மையப்பகுதியின் வண்ணத்திலேயே இருக்கும் மோதுகைத் தாங்கிகள் மற்றும் கதவு கைப்பிடிகள் மற்றும் ஓ‌ஆர்‌வி‌எம்கள், மையப் பூட்டு அமைப்பு, முன் மற்றும் பின்புற ஆற்றல் மிக்க ஜன்னல்கள், புளுடூத் இணைக்கப்பட இசை அமைப்பு, சிறந்த இயக்கம்-நிறுத்தம் முன்புறம் சரிசெய்யக்கூடிய தலை சாய்ப்பான்கள், கைமுறை குளிர்சாதன வசதி, கைமுறையால் சரிசெய்யக்கூடிய முகப்புவிளக்கு மற்றும் பின்புறம்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி, கட்டுப்பாடு பொருத்தப்பட்ட திசைதிருப்பி, சாவியில்லா நுழைவு மற்றும் டி‌ஆர்‌எல்‌எஸ்கள்

பாலினோ டெல்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்டைக் காட்டிலும் அதிகமாக ஆல்ட்ரோஸ் எக்ஸ்டி லூக்ஸ் எதை வழங்குகிறது: பலவிதமான ஓட்டக்கூடிய அமைப்பு முறைகள், வேகக் கட்டுப்பாடு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியில் செயல்படும் 7-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, அழுத்த-பொத்தான் இயக்கம், பின்புற மூடுபனி விளக்குகள், வாகனத்தை நிறுத்துவதற்கான கேமரா, உயரத்தைச் சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, தோலினால்-உறையிடப்பட்ட திசைதிருப்பி, 16-அங்குல உலோக மற்றும் மாறுபட்ட கூரை அமைப்பு.

அல்ட்ரோஸ் எக்ஸ்டி லூக்ஸை காட்டிலும் அதிகமாக பாலினோ டெல்டா ஸ்மார்ட் ஹைப்ரிட் எதை வழங்குகிறது: பின்புற வாஷர் வைப்பர் மற்றும் மூடுபனி விலக்கி, எல்இடி கொண்ட பிரகாசமான முகப்பு விளக்குகள், ஓ‌ஆர்‌வி‌எம்களில் திருப்பத்திற்கான குறிகாட்டிகள், தானியங்கி குளிர்சாதன வசதி, பின்புற இருக்கையை சரிசெய்யக்கூடிய தலை சாய்ப்பான்கள் மற்றும் 60:40 சாயக்கூடிய பின்புற இருக்கைகள்.

முடிவு: இங்கே அல்ட்ரோஸ் பார்ப்பதற்கு மிகவும் சிறந்த தேர்வாக உள்ளது. இது பணத்தை பொறுத்தவரையில் சிறந்த விலையாக இருக்கின்றது. பாலினோ பெறும் சில அம்சங்கள் இதில் இல்லையென்றாலும், எங்களுடைய கருத்துப்படி, இதில் சிறந்த அம்சம் இல்லை.

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இசட்டுக்கு போட்டியாக மாருதி பாலினோ ஆல்பா:

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இசட்

ரூபாய் 7.44 லட்சம்

மாருதி பாலினோ ஆல்பா

ரூபாய் 7.58 லட்சம்

மாறுபாடு

ரூபாய் 14,000 (பாலினோவின் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளை காட்டிலும்): ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியில் செயல்படும் தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, அழுத்த-பொத்தான் மூலம் வாகன இயக்கம், 16-அங்குல உலோகங்கள், வாகனத்தை நிறுத்துவதற்கான கேமரா, உயரத்தை-சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, பிரகாசமான முகப்பு விளக்குகள், தோலினால்-உறையிடப்பட்ட திசைதிருப்பி சக்கரம், தானியங்கி முகப்பு விளக்குகள், பின்புற வாஷர் வைபர் மற்றும் மூடுபனி விளக்குகள், தானியங்கி குளிர்சாதன வசதி, பின்புற இருக்கையை சரிசெய்யக்கூடிய தலைசாய்ப்பான்கள்.

மாருதி பபாலினோ ஆல்பாவைக் காட்டிலும் அதிகமாக ஆல்ட்ரோஸ் எக்ஸ்இசட் எதை வழங்குகிறது: பலவிதமாக ஓட்டக்கூடிய அமைப்பு முறைகள், மழைநீரை-சுத்தம் செய்யக்கூடிய துடைப்பான்கள், அரை டிஜிட்டல் கருவித் தொகுப்பு, பின்புற மூடுபனி விளக்குகள், அணியக்கூடிய சாவி, பின்புற ஏசி காற்றோட்டங்கள் மற்றும் சிறந்த இயக்கம் நிறுத்தம் மற்றும் வேகக் கட்டுப்பாடு.

அல்ட்ரோஸ் எக்ஸ்இசட்டைக் காட்டிலும் மாருதி பாலினோ ஆல்பா எதை வழங்குகிறது: எல்இடி முகப்புவிளக்குகள், தானியங்கி-சரிசெய்யக்கூடிய ஐஆர்விஎம், காரின் மையப் பகுதியின் வண்ணத்தில் இருக்கும் ஓ‌ஆர்‌வி‌எம்கள், 60:40 சாயக்கூடிய பின்புற இருக்கைகள் மற்றும் தொலைநோக்கி திசைதிருப்பி.

முடிவு: அல்ட்ரோஸ் இங்கே மிகவும் எளிமையான நல்ல தேர்வாகும், ஏனெனில் இது பாலினோவைக் காட்டிலும் சிறந்த தொகை மதிப்பை வழங்குகிறது.

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இசட் அர்பனுக்கு போட்டியாக மாருதி பாலினோ ஸீட்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்:

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இசட் அர்பன்

ரூபாய் 7.74 லட்சம்

மாருதி பாலினோ ஸீட்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்

ரூபாய் 7.86 லட்சம்

மாறுபாடு

ரூபாய் 22,000 (பாலினோ விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள்: முன்புற இரட்டை காற்றுப்பைகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், பின்புறமாகக் காரை நிறுத்தும் உணர்விகள், முன் இருக்கை பட்டிக்கான நினைவூட்டி, ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான மரையாணிகள், காரின் மையப் பகுதியின் வண்ணத்திலேயே இருக்கும் மோதுகைத் தாங்கிகள் மற்றும் கதவு கைப்பிடிகள் மற்றும் ஓ‌ஆர்‌வி‌எம்கள், மையப் பூட்டு அமைப்பு, முன் மற்றும் பின்புற ஆற்றல் மிக்க ஜன்னல்கள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியில் செயல்படும் தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, முன்புற மூடுபனி விளக்குகள், சிறந்த இயக்கம்-நிறுத்தம் முன்புறம் சரிசெய்யக்கூடிய தலை சாய்ப்பான்கள், கையால் சரிசெய்யக்கூடிய முகப்புவிளக்கு மற்றும் பின்புறம்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி சக்கரம், கட்டுப்பாடு பொருத்தப்பட்ட திசைதிருப்பி, சாவியில்லா நுழைவு, பிரகாசமான முகப்புவிளக்குகள், டி‌ஆர்‌எல்கள், 16-அங்குல உலோக சக்கரம், தானியங்கி குளிர்சாதன வசதி, உயரம்-சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, அழுத்த-பொத்தான் வாகன இயக்க அமைப்பு மற்றும் பின்புற வாஷர் வைபர் மற்றும் மூடுபனி விலக்கி.

பாலினோ ஸீட்டா ஸ்மார்ட் ஹைப்ரிட்டைக் காட்டிலும் அதிகமாக அல்ட்ரோஸ் எக்ஸ்இசட் அர்பன் எதை வழங்குகிறது: வேகக் கட்டுப்பாடு, பின்புற மூடுபனி விளக்குகள், பலவிதமாக ஓட்டக்கூடிய அமைப்பு முறைகள், பின்புற குளிர்சாதன பெட்டிக்கான துளைகள், அரை-டிஜிட்டல் கருவித் தொகுப்புகள், அணியக்கூடிய சாவி, வாகனத்தை நிறுத்துவதற்கான கேமரா மற்றும் மழைநீரைச் சுத்தம் செய்யக்கூடிய துடைப்பான்கள்.

அல்ட்ரோஸ் எக்ஸ்இசட் அர்பன்னைக் காட்டிலும் அதிகமாக பாலினோ ஜீட்டா ஸ்மார்ட் ஹைப்ரிட் என்ன வழங்குகிறது: எல்இடி முகப்புவிளக்குகள், தானியங்கி-சரிசெய்யக்கூடிய ஐஆர்விஎம், தொலைநோக்கி திசைதிருப்பி மற்றும் 60:40 சாயக்கூடிய இருக்கைகள்.

முடிவு: இங்கே எங்களுடைய தேர்வு அல்ட்ரோஸ் ஆகும். பாலினோவுடன் ஒப்பிடும்போது சில அம்சங்கள் இதில் இல்லை, ஆனால் அதன் குறைவான விலை மற்றும் பாலினோவை விட கூடுதலாக இதிலுள்ள அம்சங்களைக் கருத்தில் கொள்ளும் போது இது ஒரு நியாயமான வர்த்தகமாகும்.

மேலும் படிக்க: டாடா அல்ட்ரோஸ்: முதல் சோதனை ஓட்ட ஆய்வுகள்

மேலும் படிக்க: இறுதி விலையில் அல்ட்ரோஸ்

d
வெளியிட்டவர்

dinesh

  • 33 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா ஆல்டரோஸ் 2020-2023

கம்மெண்ட்டை இட
4 கருத்துகள்
S
shashank kumar
Aug 4, 2021, 11:32:53 AM

I am 3 months old owner of ALtroz XZ petrol model. I am happy with cars performance and would recommend it to anyone who is looking for a Premium hatchback car.

D
deepak
Oct 24, 2020, 10:03:01 PM

I feel the ground clearance should have been more , push button fades , issues with fuel pump rattling sound , defogger and AC issue .. engine noise insulation needs to be better and the Automatic

B
biju
Jan 30, 2020, 9:15:25 PM

More safest

Read Full News

explore மேலும் on டாடா ஆல்டரோஸ் 2020-2023

மாருதி பாலினோ

Rs.6.66 - 9.88 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி30.61 கிமீ / கிலோ
பெட்ரோல்22.35 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.5.65 - 8.90 லட்சம்*
Rs.7.04 - 11.21 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை