டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி சன்ரூஃப்-ஐ பெறும்போது, ரெகுலர் கார்களும் அதைப் பெறலாம்
published on ஏப்ரல் 21, 2023 07:30 pm by ansh for டாடா ஆல்டரோஸ் 2020-2023
- 75 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதன் பிரிவில் சன்ரூஃப் -ஐ வழங்கும் ஒரே சிஎன்ஜி மாடலாக இது இருக்கும்
-
ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: XE, XM+, XZ மற்றும் XZ+ S.
-
டாப் -ஸ்பெக் XZ+ S கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுகிறது
-
73.5PS மற்றும் 103Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
-
அவற்றின் தொடர்புடைய பெட்ரோல் கார்களை விட சிஎன்ஜி கார்களின் விலை சுமார் ஒரு லட்சம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
ரூ.6.45 லட்சம் முதல் ரூ.10.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) டாடா ஹேட்ச்பேக்கின் விலை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், டாடாஆல்ட்ரோஸ் சிஎன்ஜி -யை காட்சிப்படுத்தியது மேலும் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று சன்ரூஃப் ஆக இருந்தது, இது சமீபத்திய டீஸர் மூலம் சந்தைக்கு தயாராக உள்ள மாடலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிஎன்ஜி வேரியன்ட்களில் சேர்க்கப்படும் என்பதால்,அதற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளன, ஹேட்ச்பேக்கின் ரெகுர் கார்களும் விரைவில் இந்த அம்சத்தைப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.
View this post on Instagram
எப்போது அதனை எதிர்பார்க்கலாம்?
ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நான்கு டிரிம்களில் கிடைக்கிறது: XE, XM+, XZ மற்றும் XZ+ S, டாப்-ஸ்பெக் XZ+ S டிரிமில் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் அல்லது இரண்டு மாதங்களில் தொடர்புடைய பெட்ரோல் மற்றும் டீசல் கார் வேரியன்ட்களின் அம்சப் பட்டியலில் டாடா சன்ரூஃப்-ஐ சேர்க்க உள்ளது. சன்ரூஃப் சேர்ப்பதன் மூலம், ஆல்ட்ரோஸ் அதன் பிரிவில் இந்த அம்சத்தைக் கொண்ட இரண்டாவது மாடலாக மாறும், மேலும் சிஎன்ஜி வேரியன்ட்களுடன் வழங்கும் பிரிவில் முதல் மாடலாக மாறும்.
இதர வசதிகள்
ரெகுலர் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களில் 7-அங்குல டச் ஸ்கிரீன் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், மூட் லைட்டிங், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, டூயல்-ஃப்ரன்ட் ஏர்பேக்குகள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், ISOFIX ஆங்கர்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற பொதுவான அம்சங்களைப் பெறுகின்றன.
மேலும் படிக்க: அழகான தோற்றம் கொண்ட டார்க் பதிப்பைப் பெறும் டாடா நெக்ஸான் EV மேக்ஸ்
சன்ரூஃபைத் தவிர்த்து , சிஎன்ஜி கார்கள் இரு கூடுதல் அம்சங்களைப் பெறுகின்றன: டியாகோ சிஎன்ஜி -யில் இருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்மற்றும் ஆறு ஏர்பேக்குகள். இந்த அம்சங்கள் விரைவில் ஹேட்ச்பேக்கின் ரெகுலர் கார் வேரியன்ட்களிலும் சேர்க்கப்படலாம்.
பவர்டிரெயின்
ஹேட்ச்பேக் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேடட்டட் -பெட்ரோல் இன்ஜின் (83PS and 110Nm) மற்றும் 1.2-லிட்டர்டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110PS and 140Nm) மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்(90PS மற்றும் 200Nm) உடன் வருகிறது. இந்த இன்ஜின்கள் அனைத்தும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகின்றன. 1.2-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜின் 6-ஸ்பீடு DCTயின் ஆப்ஷனையும் பெறுகிறது.
மேலும் படிக்க: தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட டாடா சஃபாரி மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, புதிய முன்பகுதி மாற்றங்களுடன் வெளிவர உள்ளது
ஆல்ட்ரோஸ் இன் சிஎன்ஜி கார் வேரியன்ட்கள் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன, இது சிஎன்ஜி பயன்முறையில் 73.5பிஎஸ் மற்றும் 103நிமீ இன் குறைக்கப்பட்ட வெளியீட்டை வெளிப்படுத்துகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
விலை & போட்டியாளர்கள்
ரூ.6.45 லட்சம் முதல் ரூ.10.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் டாடா ஹேட்ச்பேக், ஹீண்டாய் i20 , மாருதி பலேனோ, மற்றும் டோயோட்டா கிளான்ஸா ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. ஆல்ட்ரோஸ் இன் சிஎன்ஜி கார் வேரியன்ட்கள், அதனுடன் தொடர்புடைய பெட்ரோல்-பயன்பாடு மட்டும் உள்ள கார் வேரியன்ட்களை விட சுமார் ஒரு லட்ச ரூபாய் பிரீமியத்தை கூடுதலாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா -வின் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக்