• English
  • Login / Register

டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி -க்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளன !

published on ஏப்ரல் 20, 2023 02:55 pm by tarun for டாடா ஆல்டரோஸ் 2020-2023

  • 51 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆல்ட்ரோஸின் சிஎன்ஜி-யால் இயங்கும் கார்கள் , மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா சிஎன்ஜி போன்றவற்றுக்கு போட்டியாக  இது உள்ளது.

Tata Altroz CNG

ஆட்டோ எக்ஸ்போ 2023இல் அதன் அறிமுகத்திற்கு பிறகு, ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி க்கான முன்பதிவுகளை ரூ. 21,000 டோக்கன் தொகையில் டாடா தொடங்கியுள்ளது. டெலிவரிகள் 2023 மே மாதம் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, எனவே வரும் வாரங்களில் விலைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். 

வேரியன்ட் ஆப்ஷன்கள்

டாடா ஆனது ஆல்ட்ரோஸ் - XE, XM+, XZ மற்றும் XZ+ ஆகிய நான்கு வேரியன்ட்களில் சிஎன்ஜி பவர்டிரெய்னை வழங்கும். ஓபரா ப்ளூ, டவுன்டவுன் ரெட், ஆர்கேட் கிரே மற்றும் அவென்யூ ஒயிட் உள்ளிட்ட நான்கு வண்ண விருப்பங்களில் இது கிடைக்கும். எதிர்காலத்தில் ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி -யின் டார்க் எடிஷனையும் எதிர்பார்க்கலாம். 

பவர்டிரெயின்

Tata Altroz CNG


விவரக்குறிப்புகள்


ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி


இன்ஜின்


1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி


பவர்

77பிஎஸ்

Torque
டார்க்

97நிமீ


டிரான்ஸ்மிஷன்


5-வேக மேனுவல்

ஆல்ட்ரோஸ், 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜினைப் பயன்படுத்துகிறது, இது டியோகோ மற்றும் டைகோர் சிஎன்ஜி -யை விட 4பிஎஸ் மற்றும் 2நிமீ -ஐ அதிகமாக வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது மற்றும் 25 கிமீ/கிலோ முழுமையான  எரிபொருள் சிக்கனத்தைக் கொடுக்கும். மற்ற டாடா சிஎன்ஜி கார்களைப் போலவே, ஆல்ட்ராஸும் இன்ஜினைத் தொடங்க சிஎன்ஜியை மட்டுமே பயன்படுத்தும். மற்ற அனைத்து சிஎன்ஜி கார்கள் பெட்ரோலைப் பயன்படுத்தி இன்ஜினை ஸ்டார்ட் செய்து, பின்னர் விரைவாக சிஎன்ஜிக்கு மாறுகின்றன. 

இரட்டை சிலிண்டர் அமைப்பு

Tata Altroz CNG

ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி -யின் மிகவும் தனித்துவமான அம்சம், 60-லிட்டர் கொள்ளளவைக் கொண்டிருக்கும் அதே வேளையில், பூட்டின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக இரட்டை சிலிண்டர் அமைப்பு உள்ளதே ஆகும். ஹேட்ச்பேக்கின் பூட் ஸ்பேஸ் தற்போது 345 லிட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, எனவே, சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு சுமார் 200 -லிட்டர் கொள்ளளவுள்ள இடத்தை எதிர்பார்க்கிறோம். பூட் ஸ்பேஸ் என்பது சிஎன்ஜி உரிமையாளரால் எதிர்கொள்ளப்படும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகும், டாடா தனது இரட்டை-சிலிண்டர் தொழில்நுட்பத்தின் மூலம் அதை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அம்சங்கள்

ஆல்ட்ரோஸ்- இன் சிஎன்ஜி கார் வேரியன்ட்களில் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, கனெக்டட் கார் டெக், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், மூட் லைட்டிங், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கிடைக்கும். சிஎன்ஜி போட்டியாளர்கள் கொடுக்காத, தோலினால் ஆன இருக்கைகள் டாப் வேரியன்டில் கிடைக்கின்றன. 

போட்டி

மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸாவின் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு போட்டியாக டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி உள்ளது, அவை ரூ.8.3 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கின்றன.
மேலும் படிக்கவும்: டாடா அல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata ஆல்டரோஸ் 2020-2023

Read Full News

explore மேலும் on டாடா ஆல்டரோஸ் 2020-2023

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • Kia Syros
    Kia Syros
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience