ரெனால்ட் கிவிட் கார்களின் சிறப்பம்சங்கள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட்டது : விரிவான ஆராய்வு
ரெனால்ட் க்விட் 2015-2019 க்காக செப் 11, 2015 09:28 am அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் கிவிட் மற்றும் அதன் வகைகளின் சிறப்பம்ஸங்கள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த கார், அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் வகைகளில் ஒன்றாக உள்ளது. இந்த மாதத்தில், நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களில் இது விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஸ்டாண்டர்ட், RXE, RXL மற்றும் RXT என்று, மொத்தம் 4 விதமான ரகங்கள் வெளிவர உள்ளன. இதற்கு முன் வெளியான செய்திகளின் படி, 54 bhp குதிரை திறனை தரும் 799 cc மூன்று சிலிண்டர் இஞ்ஜின் மூலம், இந்த காருக்கு செயல்திறன் அளிக்கப்படுகிறது என்று தெரிகிறது. மிகவும் இலகு ரக கட்டுமான தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டதால், ரினால்ட் கிவிட்டின் எரிபொருள் சிக்கனதிறன் மிகுதியாக உள்ளது.
கிவிட் 660 கிலோ எடை மட்டுமே உள்ளதால், 25.17 kmpl மைலேஜ் கொடுத்து, மிகவும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தருகிறது. இந்த கார், 13 அங்குல அகலம் கொண்ட ட்யூப்லெஸ் டயர்கள் மீது சவாரி செய்யும். இந்த சிறப்பம்சம், அனைத்து கிவிட் ரகங்களிலும் வரும் என்று தெரிகிறது. 799 cc இஞ்ஜின் 5 வேக ஆளியக்க முறை பல்லிணைப்பு (கியர் பாக்ஸ்) பெட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் வடிவ அளவுகளைப் பார்க்கும் போது, 3,679 mm நீளமும், 1,579 mm உயரமும், 1,471 mm அகலமும் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த கார், தரையிலிருந்து 180 mm என்ற அளவில் கிரவுண்ட் க்ளியரன்ஸும், மிகப் பெரிய 2,422 mm வீல் பேஸும் பெற்றுள்ளதால், கம்பீரமாக வலம் வரும். வாடிக்கையாளர்களின் விருப்ப தெரிவாக கொடுக்கப்படவுள்ள 60 விதமான துணைக் கருவிகளைக் கொண்டு, தங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப இந்த காரை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இந்த காருக்கு, ரினால்ட் நிறுவனம் 50,000 கிலோ மீட்டர் அல்லது 2 வருட வாரண்டி தருகிறது.