• English
  • Login / Register

இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னியை விட அதிக நிறங்களை பெறும் தென்னாப்பிரிக்க ஜிம்னி 5-டோர் !

published on நவ 17, 2023 10:27 pm by ansh for மாருதி ஜிம்னி

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவிற்கு வெளியே 5-டோர் சுஸூகி ஜிம்னியை பெற்ற முதல் சந்தையாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது.

Suzuki Jimny 5-door

  • இந்த யூனிட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அதிக கலர் ஆப்ஷன்களை பெறுகின்றன.

  • சில்க்கி சில்வர் மெட்டாலிக், ஜங்கிள் கிரீன் மற்றும் சிஃப்பான் ஐவரி மெட்டாலிக் டூயல்-டோன் என 3 கூடுதல் வண்ணங்களில் இது இருக்கிறது.

  • இந்தியா-ஸ்பெக் பதிப்பின் அதே 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது, ஆனால் சற்று குறைவான அவுட்புட் உடன் இருக்கும்.

  • 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  மாருதி ஜிம்னி 5-டோர் தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இது அதே இன்ஜின் ஆப்ஷன்கள், ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் விலையுயர்ந்த விலையுடன் வருகிறது. நீளமான ஆஃப்-ரோடரின் பெரும்பாலான விவரங்கள் இந்தியா-ஸ்பெக் பதிப்பைப் போலவே இருந்தாலும், இது தென்னாப்பிரிக்காவில் அதிக கலர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அவை அனைத்தையும் இங்கே பாருங்கள்.

வண்ணங்கள்

இது 6 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் வருகிறது

Suzuki Jimny 5-door Monotone Exterior Colours

  • செலஸ்டியல் ப்ளூ பேர்ல் மெட்டாலிக் (இந்தியா-ஸ்பெக் ஜிம்னியுடன் நெக்ஸா ப்ளூவாக கிடைக்கிறது.)

  • ஆர்க்டிக் வொயிட் பேர்ல் (இந்திய-ஸ்பெக் பதிப்பில் கிடைக்கிறது.)

  • சில்க்கி சில்வர் மெட்டாலிக் (புதியது)

  • புளூயிஷ் பிளாக் பேர்ல் (இந்திய-ஸ்பெக் பதிப்பில் கிடைக்கிறது.)

  • கிரானைட் கிரே மெட்டாலிக் (இந்திய-ஸ்பெக் பதிப்பில் கிடைக்கிறது.)

  • ஜங்கிள் கிரீன் (புதியது)

  • ஜங்கிள் கிரீன் நிறம் இந்தியாவில் இராணுவ வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பச்சை நிறத்திற்கு சற்று நெருக்கமாக இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், எனவே இது இன்னும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

3 டூயல்-டோன் ஷேட்களும் உள்ளன

Suzuki Jimny 5-door Dual-tone Exterior Colours

  • சிஸ்லிங் ரெட் மெட்டாலிக் + ப்ளூஷ் பிளாக் பெர்ல் (இந்திய-ஸ்பெக் பதிப்பில் கிடைக்கிறது.)

  • கைனெடிக் யெல்லோவ் + புளூயிஷ் பிளாக் பேர்ல் (இந்திய-ஸ்பெக் பதிப்பில் கிடைக்கிறது.)

  • சிஃப்பான் ஐவரி மெட்டாலிக் + புளூயிஷ் பிளாக் பேர்ல் (புதியது)

  • ஒரு கிளாஸி மற்றும் மெச்சூர் ஷேடு (சிஃப்பான் ஐவரி மெட்டாலிக்) இன்னும் சில்வர் அல்லது கிரே கலரை விட தனித்து நிற்கிறது, ஐவரி ஷேடு இந்திய வாடிக்கையாளார்களிடையே பிரபலமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுவதால் இங்கு வழங்கப்பட வாய்ப்பில்லை.

  • தென்னாப்பிரிக்காவில் ரெட் மெட்டாலிக் கலர் ஆப்ஷன் டூயல்-டோன் ஷேடில் மட்டுமே கிடைக்கிறது, இந்தியாவில் இது மோனோடோன் ஷேடாகவும் வழங்கப்படுகிறது.

மேலும் பார்க்க: புதிய சுஸுகி ஸ்விஃப்ட் நிறம் விவரம்! இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்டுக்கு எது வேண்டும்?

பவர்டிரெய்ன்

Suzuki Jimny 5-door Low Range Transfer Case

5-டோர் ஜிம்னியின் தென்னாப்பிரிக்க பதிப்பு அதே 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது, ஆனால் 102 PS மற்றும் 130 Nm என்ற சற்றே குறைவான அவுட்புட்டை வெளிப்படுத்துகிறது. இது அதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் பெறுகிறது: 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்.

மேலும் படிக்க: 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஒரு புதிய இன்ஜினை பெறுகிறது, விவரங்கள் வெளியிடப்பட்டன!

மேலும், இந்திய பதிப்பைப் போலவே, தென்னாப்பிரிக்காவில் உள்ள 5-டோர் சுஸுகி ஜிம்னி நான்கு சக்கர டிரைவ் சிஸ்டத்துடன் ஸ்டாண்டர்டாக லோ ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸுடன் வருகிறது மற்றும் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை பெறுகிறது.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

Suzuki Jimny 5-door Dashboard

அதன் அம்சங்கள் பட்டியல் இந்தியா-ஸ்பெக் பதிப்பைப் போலவே உள்ளது. இது 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் (இந்திய பதிப்பில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டானவை), EBD வித் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகிய வசதிகள் இருக்கின்றன.

விலை

Suzuki Jimny 5-door

தென்னாப்பிரிக்காவில் 5-டோர் சுஸூகி ஜிம்னியின் விலை R4,29,900 முதல் R4,79,900 (எக்ஸ்-ஷோரூம்), இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.19.65 லட்சத்தில் இருந்து ரூ.21.93 லட்சமாக கன்வெர்ட் செய்யப்படலாம். இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னி 5-டோரின் விலை ரூ.12.74 லட்சத்தில் இருந்து ரூ.15.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா -வுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: மாருதி ஜிம்னி ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti ஜிம்னி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience