ரன்பீர் கபூர் பங்கேற்கும் புதிய ரெனால்ட் க்விட் காரின் தொலைகாட்சி விளம்பரம் வெளியிடப்பட்டது.
published on ஆகஸ்ட் 19, 2015 04:34 pm by raunak for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ரன்பீர் கபூர் பங்கேற்கும் புதிய க்விட் காரின் தொலைகாட்சி விளம்பரத்தை ரெனால்ட் இந்தியா வெளியிட்டது. இதன் மூலம், இந்த கார் விரைவில் சந்தைக்கு வரும் என்று அறிவிக்கிறது. இந்த தொலைகாட்சி விளம்பரத்திற்கு உயர்ந்த கிராமி விருதை வென்ற A .R ரகுமான் அவர்கள் பின்னணி இசை அமைத்துள்ளார். ‘ரீ ரீ ரீ ராப்டர்’ (‘Re Re Re Raftar’) என்ற இந்த விளம்பர படத்தை, ரெனால்ட் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய க்விட் காரை தவிர இந்த விளம்பரத்தில், ரெனால்ட் நிறுவனத்தின் முந்தைய மாடல்களான டஸ்டர், லோட்ஜி ஸ்டெப்வே மற்றும் ஃபுளூஎன்ஸ் ஆகிய கார்களையும் இடம் பெற செய்து, இந்த தொலைகாட்சி விளம்பரத்தை பெரிய அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.
98 சதவிகிதம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள க்விட் கார், ரெனால்ட் – நிஸ்ஸான் கூட்டு தயாரிப்பு CMF - A வரிசையில் (காமன் மாட்யூல் ஃபேமிலி) ஒரு சிறந்த காராக விளங்குகிறது. இந்த காரின் விலை ரூபாய் மூன்றிலிருந்து நான்கு லட்சமாக இருக்கும் என்றும், திருவிழா காலத்திற்கு முன்பாகவே அதிரடியாக விற்பனைக்கு வந்துவிடும் என்றும் அறியப்படுகிறது. டஸ்டர் மாடலின் அதே கம்பீரமான, புடைப்பான தோற்றத்தை க்விட்டிலும் இடம்பெறச் செய்து, அதன் விற்பனையை பல்மடங்காக உயர்த்த இந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல், ரெனால்ட் கார்களில் எப்போதும் பொருத்தப்படும் இலக்க முறை முகப்பு பெட்டி (டிஜிட்டல் டாஷ்போர்டு) மற்றும் டஸ்டரின் பயண வழிமுறை சாதனத்துடன் (நேவிகேஷன் சிஸ்டம்) கூடிய 7 அங்குல மீடியாநேவ் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு ஆகியவற்றை, க்விட் கார் உட்புறத்தில் இடம்பெறச் செய்து பயணத்தை இனிதாக்குகிறது.
க்விட் காரின் அறிமுக நிகழ்ச்சியில், இந்த கார் 0.8 லிட்டர் மோட்டார் திறனுடன் சந்தையில் கிடைக்கும் என ரெனால்ட் நிறுவனம் அறிவித்தது. மேலும் 0.8 லிட்டர் வகை கொண்ட கார் வெளியீட்டுக்கு பிறகு, ஒரு சில மாதங்கள் கழித்து 1.0 லிட்டர் மோட்டார் வகை அறிமுகப்படுத்தபடும் என்றும் அறிவித்துள்ளது. இந்த இரு மோட்டார்களுமே 5 வேக ஆளியக்க செலுத்தியுடன் (ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) இணைந்து வரும். தரமான AMT வசதியும் இவ்விரு வகைகளில் கிடைக்கும் என்றும் தெரிகிறது. குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னையில் உள்ள வசதிகளை கொண்டு இந்தியாவிலேயே இந்த தரமான AMT பல்லிணைப்பு பெட்டியை (கியர் பாக்ஸ்) தயாரிக்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஒரு வதந்தி செய்தியும் பரவியுள்ளது.