ரெனால்ட் நிறுவனம் , க்விட் கார்களின் AMT மற்றும் 1.0 லிட்டர் வெர்ஷன்களை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறது.
published on டிசம்பர் 29, 2015 09:35 am by raunak for ரெனால்ட் க்விட் 2015-2019
- 19 Views
- 6 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
க்விட் கார்களின் 800 cc வெர்ஷன் மாருதி சுசுகி ஆல்டோ 800 மற்றும் ஹயுண்டாய் இயான் கார்களுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்க , மாருதி சுசுகி ஆல்டோ K10 மற்றும் K10 AGS கார்களுடன் இந்த புதிய AMT மற்றும் 1 - லிட்டர் வெர்ஷன் க்விட் கார்கள் போட்டியிடும் என்று தெரிகிறது .
புது டெல்லி: ரெனால்ட் நிறுவனம் , வரும் பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் க்விட் கார்களின் க்ளட்ச் இல்லாத AMT மற்றும் 1000 cc வெர்ஷன்களை காட்சிக்கு வைக்க உள்ளது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அறிமுகமான இந்த க்விட் கார்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த அக்டோபர் மாத இரண்டாவது வாரத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கியது. 90% வரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கார்கள் வியப்பளிக்கக் கூடிய வகையில் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 2.56 - 3.53 லட்சங்கள் வரை (எக்ஸ் - ஷோரூம் டெல்லி ) விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 80,000 கார்கள் புக்கிங் ஆகி உள்ளன. இப்போது புதிதாக அறிமுகமாக உள்ள கூடுதல் சக்தி கொண்ட 1 - லிட்டர் வெர்ஷன் க்விட் கார்கள், இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தி ஒரு புதிய சாதனையையே படைக்கும் என்று ரெனால்ட் உறுதியாக நம்புகிறது.
தற்போது உள்ள 800 cc என்ஜின் பொருத்தப்பட்ட க்விட் கார்கள் 54 பிஎச்பி மற்றும் 72 nm அளவுக்கு டார்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டவை. அதேபோல் இப்போது அறிமுகமாக உள்ள 1 - லிட்டர் மோட்டார் பொருத்தப்பட்ட புதிய க்விட் சுமார் 70 பிஎச்பி சக்தியையும் 90nm அளவுக்கு டார்கையும் வெளியிடும் ஆற்றல் கொண்டிருக்கும் என்றும் எடை குறைந்த சேஸிஸ் பொருத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த கூடுதல் சக்தி கொண்ட மோட்டார் க்விட் கார்களின் செயல்திறனை கணிசமாக உயர்த்தும் என்றும் சொல்லலாம். 800 cc மோட்டார் பொருத்தப்பட்டுள்ள தற்போது புழக்கத்தில் உள்ள மாடலை போலவே 1 – லிட்டர் வெர்ஷன்களிலும் 5 - வேக மேனுவல் ( கைகளால் இயக்கக்கூடிய) ட்ரேன்ஸ்மிஷன் ( கியர் அமைப்பு ) வசதி இணைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த புதிய 1 - லிட்டர் வெர்ஷன்கள் தற்போது உள்ள 800 cc மாடலைப் போலவே நல்ல மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AMT வசதியை பொறுத்தவரை அநேகமாக இரண்டு வகை என்ஜின் ஆப்ஷங்களுக்கும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்த , முழுதும் தங்களால் உருவாக்கப்பட்ட ஈஸி-R AMT பெட்டிகளை இந்த வெளிவர உள்ள புதிய க்விட் கார்களின் AMT வெர்ஷன்களில் பொருத்தும் என்றும் தெரிகிறது. மேலும் , இந்த ஈஸி-R AMT பெட்டிகளை 2016 மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் வாகனங்களின் AMT வேர்ஷங்களும் பெரும் என்றும் யூகிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க