ரெனால்ட் நிறுவனம் க்விட் அக்ஸசரீஸ் பட்டியலை வெளியிட்டது , க்ரேஸிபார்க்விட் போட்டியை துவக்கியது : கேலரி உள்ளே
published on செப் 18, 2015 11:48 am by manish for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- 10 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
க்விட் காரை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறீர்களா ? இதோ ஓர் பொன்னான வாய்ப்பு. ரெனால்ட் நிறுவனம் ஒரு போட்டியை அறிவித்துள்ளது. போட்டியில் வெற்றி பெற்று முதலாவதாக வரும் போட்டியாளருக்கு ஒரு புத்தம் புதிய க்விட் கார் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெறும் ஒரே ஒரு போட்டியாளருக்கு தான் கார் வழங்கப்படும் என்ற போதும் மற்ற இடங்களைப் பிடிக்கும் 20 வாடிக்கையாளர்களுக்கு க்விட் கிப்ட் ஹேம்பர்கள் , பேட்டரி பேங்க், டி - ஷர்ட், கார் ஷேட் மற்றும் தொப்பிகள் என்ற ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.
“க்ரேஸி பார் க்விட் " போட்டிகள் இன்னும் சில தினங்களில் நிறைவு பெற உள்ளன. போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் தங்களது க்விட் மீதான அளவு கடந்த காதலை வெளிப்படுத்தும் விதத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை அப்லோட் செய்ய வேண்டும்.. #KrazyForKwid மற்றும் LiveForMore என்ற கீ சொற்களை (கிவோர்ட்) பயன்படுத்தி நேரிடையாக ட்விட்டரிலும் இதை தொடரலாம்.. இந்த போட்டியில் முகப்புத்தகம் (பேஸ் புக் ) மூலமும் பங்கு பெறலாம்.
இந்த காருக்கான முன்பதிவு தொடங்கி விட்ட நிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் புக் செய்யப்பட்ட கார்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் " Renault Kwid” என்ற ஆப் - ஐ பதிவிறக்கம் (டவ்ன்லோட்) செய்து அதன் மூலமும் க்விட் காரை புக்கிங் செய்யலாம். இந்த ஆப் ஒரு ஷோரூமில் நேரிடையாக சென்று வாகனத்தை புக் செய்வது போன்ற அனுபவத்தை தருவது இங்கே குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும் ஏராளமான அக்ஸசரீஸ் களில் இருந்து வாடிக்கையாளர் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். நாங்கள் எங்களது க்விட் பற்றிய முந்தைய செய்தியில் குறிப்பிட்டது போல இந்த பிரிவு கார்களிலேயே க்விட் கார்களில் முதல் முறையாக நிறைய சிறப்பம்சங்கள் சேர்கப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்க வசதியாக 25 ஸ்டிகர் ஆப்ஷன் மற்றும் 6 அக்ஸசரீஸ் பேக் உள்ளடக்கிய 60 வெவ்வேறு வகையான அக்ஸசரீஸ்கள் வழங்கப்படுகிறது..
வெளிப்புறத்தில் க்ரில் மீதான குரோம் பூச்சு, பனி விளக்குக்கான ப்ரேம், பனிவிளக்கு என்க்லோஸர், கதவு கைப்பிடிகள், ஜன்னல் வைசர்கள் , டெய்ல் விளக்குகள் , பூட் லிட் மற்றும் இன்னும் பல அக்ஸசரீஸ் கிடைக்கின்றன. மேலும் கூடுதலாக அல்லாய் சக்கரங்கள் , கூரை பகுதியில் பொருட்களை அடுக்க ரூப் ரேக் , மற்றும் பந்தய கார் போன்ற மாறுபட்ட தோற்றம் தரும் வகையில் பக்கவாட்டு பகுதி மோல்டிங் போன்ற அம்சங்களையும் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப கேட்டு பெற்று பயன்பெறலாம். இதமான விளக்கு வெளிச்சம் , நேர்த்தியான சீட் கவர், ஸ்டீரிங் வீல் கவர் , பெயர் பொறிக்கப்பட்ட ப்ளோர் மேட் மற்றும் இன்னும் பல அக்ஸசரீஸ் உட்புறத்தை சிறப்பிக்கின்றன.