சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ரினால்ட் கிவிட்: இதுவரை சேகரித்த செய்திகளின் தொகுப்பு

published on ஆகஸ்ட் 28, 2015 06:29 pm by raunak for ரெனால்ட் க்விட் 2015-2019

அறிமுகநிலையில் உள்ள சிறிய கார் ரகத்தில், ரினால்ட் நிறுவனம் இதற்கு முன் கேள்விப்படாத ஒரு புதிய காரை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புதிய காரின் பெயர் கிவிட்.

இந்தியாவில் முதல் முறையாக வரும் அறிமுக நிலை சிறிய ரக க்ராஸ் ஓவர் காரான ரினால்ட் கிவிட்டின் முன் பதிவை, ஏற்கனவே ஒரு சில வினியோகிஸ்தர்கள் தொடங்கிவிட்டார்கள் என்பதில் இருந்து, இந்த காரின் சரித்திரம் ஆரம்பமாகிவிட்டதை நாம் தெரிந்து கொள்ளலாம். இது வரை கிவிட் காரைப் பற்றி நாங்கள் அறிந்ததை, இங்கு கொடுத்துள்ளோம்.

3 லட்சம் முதல் 4 லட்சம் விலைக்குள் கிடைக்கும் சிறிய டஸ்டர்

3 லட்சம் முதல் 4 லட்சம் விலைக்குள் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்றால் - டஸ்டரைப் போன்ற கம்பீரத்தில், க்ராஸ் ஓவர் பாணியில், இதற்கு முன்பு போல் இல்லாத, ஒரு புதிய வகை கார் உங்களுக்கு கிடைக்கும். மேலும், இந்த வகை கார்களில் இல்லாத அதிகமான தரை இடைவெளி (கிரவுண்ட் க்ளியரன்ஸ்), கிவிட் காரில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரினால்ட்டின் லாட்ஜி காரைப் போலவே, கிவிட்டுக்கும் ஸ்டேப்வே ரகம் வெளியிடப்படும் என்று தெரிகிறது. லாட்ஜி ஸ்டேப்வே போலவே, சமீபத்தில் கிவிட் காரிலும் குரோமிய வேலைப்பாடுகளைக் கொண்ட கம்பி வலையும் (கிரில்), பெரிய அலாய் சக்கரங்களும் (ரினால்ட் 13 அங்குல எஃகு விளிம்புகளுடன் உள்ள சக்கர மூடியை காட்சிப்படுத்தி உள்ளது) பொருத்தப்பட்டது, வேவு பார்த்து அறிந்து கொள்ளப்பட்டது.

இதன் வர்காத்திலேயே சிறந்த எரிபொருள் திறன் கொண்ட 800 cc இஞ்ஜின்

ரினால்ட் நிறுவனம் கிவிட் காரை அறிமுகப்படுத்தும் போது, அதற்கு 800 cc திறன்கொண்ட பெட்ரோல் மோட்டோரை பொறுத்தப்போவதாக கூறியது. அநேகமாக, இது ஒரு அடிப்படை MPFI (பல்முனை எரிபொருள் செலுத்தும் அமைப்பு) மோட்டாராக இருக்கும். ரினால்ட் நிறுவனம் இஞ்சினைப் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கார் நிச்சயமாக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் என்று உறுதி அளித்துள்ளது. மேலும், இதன் செயல்திறன், 60 bhp குதிரைத் திறனை ஒட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரினால்ட்டின் மீடியா நவ் தொடு திரை அமைப்பு

இந்த வகை கார்களில் இல்லாத தொடு திரை (டச் ஸ்கிரீன்) அமைப்பை, ரினால்ட் நிறுவனம், மீடியா நவ் இன்ஃபோடைன்மெண்ட் மூலம் கிவிட் காரில் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், டஸ்டர் மற்றும் லாட்ஜி போன்ற கார்களில் உள்ளது போல செயற்கைகோள் பயண வழிகாட்டும் அமைப்பும் இதில் உள்ளது. கிவிட் காரில் உள்ள பல அம்சங்கள், இத்தகைய விலையில் வரும் கார்களில் வருவதில்லை. மேலும், இதன் சிறப்பம்ஸங்கள், இந்த ரகத்திலோ அதற்கு மேல் உள்ள உயர்ரக கார்களிலோ பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இலக்கமுறை மயமாக்கல் (டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டேன்)

ரினால்ட் வாகனங்களில் உள்ள பொதுவான அம்சமான இலக்கமுறை மயமாக்கல், கிவிட்டிலும் உண்டு. இது ஒரு அடிப்படையான டாட் மேட்ரிக்ஸ் வகை காட்சி முறையாக இருந்தாலும், இந்த வகை கார்களில் இத்தகைய வசதிகள் பொருத்தப்படுவதில்லை. ஆனால், கிவிட் காரின் மையத்தில் ஒரு பெரிய காட்சித் திரையில் வேகத்தை காட்டும் கருவியும்; அதன் அருகில் எரிபொருள் அளவைக் காட்டும் கருவியுடன் கூடிய எச்சரிக்கை விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், கார் ஓடும் போது இஞ்ஜின் வேலை செய்யும் வேகத்தை கணக்கிடும் டாக்கோமீட்டர் பொருத்தப்படுமா என்பது பற்றி தகவல் இல்லை.

AMT பல்லிணைப்பு பெட்டி தெரிவு மற்றும் 1.0 லி இஞ்ஜின்

இதுவரை ரினால்ட் நிறுவனம் உறுதி செய்யாவிட்டாலும், இந்நிறுவனம் கிவிட் காருக்கு அதிக செயல்திறன் கொண்ட 1.0 லிட்டர் மோட்டாரைப் பொருத்தும் என்று வளர்ந்து வரும் வதந்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சமீபத்தில் கிவிட்டில் லாட்ஜி காரின் ஸ்டேப்வே ரகத்தைப் போல கம்பி வலை (கிரில்) பொருத்தப்பட்டிருந்ததை வேவு பார்த்து அறிந்ததால், அநேகமாக இந்த வகையில் நிச்சயமாக பெரிய மோட்டார் பொருத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரகங்ககளில், AMT (தானியங்கி ஆளியக்க உட்செலுத்தி – ஆட்டோமேட்டிக் மனுவல் ட்ரான்ஸ்மிஷன்) முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதால், ரினால்ட் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை வரவிருக்கும் கிவிட்டில் பொருத்தும் என்று நம்பிக்கை உள்ளது.

r
வெளியிட்டவர்

raunak

  • 11 பார்வைகள்
  • 3 கருத்துகள்

Write your Comment மீது ரெனால்ட் க்விட் 2015-2019

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.5.65 - 8.90 லட்சம்*
Rs.7.04 - 11.21 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை