ரினால்ட் கெவ்டு vs மாருதி ஆல்டோ vs ஹூண்டாய் இயான் vs டாட்சன் கோ

published on ஆகஸ்ட் 24, 2015 10:11 am by manish for ரெனால்ட் க்விட் 2015-2019

ஜெய்ப்பூர்:

இந்தியாவின் கச்சிதமான SUV சந்தையில் டஸ்டரின் மூலம் ரினால்ட் நிறுவனம் சில காலம் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய ஆட்டோமோட்டிவ் சந்தையில் ரினால்ட் நிறுவனத்தை, இந்த கார் நிலைநிறுத்தியது. மேலும் ரூ.5.2 லட்சம் விலை நிர்ணயத்தில், சந்தையில் மிகவும் விலை குறைந்த காராக வெளியான பல்ஸ் மற்றும் மற்ற கார்களான ரினால்ட் ஸ்க்லா, ஃபுளுவன்ஸ் சேடன்கள், லாட்ஜி MPV மற்றும் கோலியோஸ் ஆகியவை மூலம் கடந்த சில ஆண்டுகளில் ரினால்ட் நிறுவனத்திற்கு ஈர்க்க கூடிய தனித்தன்மையை பெற்றுள்ளது. பிரான்ஸ் வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், ரசனை மிகுந்த மற்றும் வேகமான வாகனங்களை தயாரித்து வழங்கும் நிறுவனம் என்று சர்வதேச அளவில் பெயரை பெற்றுள்ளது. ஆனால் கவர்ச்சி மிகுந்த, ஓட்டும் போது மகிழ்விக்கும், விலை குறைவான, சிறிய வகை கார் தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரவில்லை. ஆனால் இப்போது சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரினால்ட் கெவ்டு மூலம் அந்த முயற்சியிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளதாக தோன்றுகிறது. இந்த காருக்கு ஏறக்குறைய ரூ.3.5 லட்சம் என்று விலை நிர்ணயிக்கப்படும் நிலையில், தற்போது சந்தையில் முன்னணியில் உள்ள மாருதி ஆல்டோ 800 மற்றும் அதே பிரிவில் காணப்படும் ஹூண்டாய் இயான், டாட்சன் கோ ஆகியவற்றுடன் நேருக்கு நேர் போட்டியிடும் என தெரிகிறது. இதனால் சிறிய கார்களின் பிரிவில் உள்ள மேற்கண்ட பிரபலமான கார்களுடன் போட்டியிட்டால், எந்த மாதிரியான பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதை அளவீடு செய்துள்ளோம்.

த க்ரண்ட்

800cc பெட்ரோல் என்ஜினை கொண்டுள்ள கெவ்ட்டின், எரிபொருள் சிக்கனம், ஆற்றல் போன்ற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல்கள் எதையும் ரினால்ட் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதே 800cc பெட்ரோல் என்ஜினுடன் வரும் ஆல்டோ 48ps-யும், இயான் 1­L காப்பா என்ஜினை கொண்டு இப்பிரிவில் அதிகபட்சமாக 69ps-யை அளிக்கிறது. இதனோடு நெருங்கி போட்டியிடும் டாட்சன் கோ 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு 68ps-யை அளிக்கிறது. இதிலிருந்து பிரான்ஸ் தயாரிப்பாளரின் தயாரிப்பு, கொரியன் வாகன தயாரிப்பு நிறுவனத்துடனான போட்டியை எதிர்கொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

காட்சியமைப்பு

கெவ்டு காரில் காணப்படும் தடித்த முன்புறம் மற்றும் பக்க பகுதியின் அமைப்பு ஆகியவை மூலம் அது ஒரு SUV யை போல காட்சி அளிப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆல்டோ, இயான் போல இல்லாமல் வடிவமைப்பு துறையில் தனித்தன்மை காட்டுகிறது. ரினால்ட்டை பொறுத்த வரை, கெவ்டு 180 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் அளிக்கும். இது மற்ற மூன்று கார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் அதிகம் என்பதால் கெவ்டு ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இயான் மற்றும் டாட்சன் கோ ஆகியவை 170 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் அளிப்பதை ஒப்பிட்டால், ஆல்டோ 160 mm-யை அளிக்கிறது. ‘பெரியதே சிறந்தது’ என்பதை ரெனால்ட் உறுதியாக நம்புகிறது என்று தோன்றும் வகையில், கெவ்ட்டை 3,680 mm நீளம் கொண்டதாக வடிவமைத்துள்ளது. இதன் மூலம் மற்ற மூன்று கார்களுடன் ஒப்பிடும் போது, இதில் கேபின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்துக் கொள்ளலாம். உயர்ந்த கட்டுமான தரத்தை கொண்டுள்ள இயான் மட்டும் இந்த ஒப்பிடுதலில் இருந்து தன்னை விடுத்துக் கொண்டு, கெவ்டு உடன் மதிப்பாய்வு செய்யப்படலாம்.

பெல்கள் மற்றும் விசில்கள்

தனது போட்டியாளர்களைப் போல இல்லாமல் ரெனால்ட் கெவ்டு, 7-இன்ச் டச்ஸ்கிரீன் மூலம் இயக்கப்படும் மீடியாநவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த காரில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கான ப்ளூடூத் இணைப்பு, ரேடியோவிடம் இருந்து மீடியா பிளேபேக், CD மற்றும் USB போன்ற மற்ற அம்சங்களையும் பெற்றுள்ளது. மீடியாநவ் சிஸ்டத்தில் வாய்ஸ் கமெண்ட்டை ஏற்கும் வகையில் உள்ள GPS நெவிகேஷன் சிஸ்டமும் உள்ளது. மேற்கூறிய சிறப்பம்சங்களை கெவ்ட்டின் உயர் வகையில் மட்டுமே காணப்படலாம் என்பதால், அவை சுமார் ரூ.4 லட்சம் விலை நிர்ணயிக்கப்படலாம். அதே நேரத்தில் ஆல்டோ, இயான் மற்றும் டாட்சன் கோ போன்ற கார்களில் இருக்கும் சலிப்பான பொழுதுபோக்கு அமைப்புகளை ஒப்பிட்டால், மேற்கூறிய அம்சங்களை கொண்ட கெவ்டு தனித்தன்மையுடன் காணப்படுகிறது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரையும் கெவ்டு கொண்டுள்ளதால், மற்ற போட்டியாளர்களுக்கு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் மேம்பாடு காட்ட வேண்டியது அவசியம் என்ற அழுத்தம் ஏற்படலாம்.

வரும் தீபாவளி சீசனில் இந்தியாவில் கெய்டு அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. ரெனால்ட் கெய்டு கொண்டுள்ள பரவலான அம்சங்களில், சர்வீஸ் அளிப்பது மட்டுமே ஒரு பெரிய தடையாக அதற்கு இருக்கும். தற்போது இந்தியாவின் 120 நகரங்களில் இருக்கும் சர்வீஸ் சென்டர்களின் மூலம் ரெனால்ட், சர்வீஸ் அளித்து வருகிறது. ஆனால் மாருதி மற்றும் ஹூண்டாய் சர்வீஸ் சென்டர்களுடன் ஒப்பிட்டால், ரினால்ட்டின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். ஆனால் சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையில் டாட்சனின் உடன் ஒப்பிடும் போது ரெனால்ட் முன்னே நிற்கிறது. எனவே மாருதி அல்லது ஹூண்டாய் நிறுவனத்தை சேர்ந்த யாராவது இதை படிக்கிறீர்களானால், இதுவே உங்களுக்கான சிறந்த வாய்ப்பு! தீபாவளிக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் இருப்பதை பயன்படுத்தி, உங்கள் கார்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை வழங்கலாம். அது தள்ளுபடி விலையிலோ அல்லது மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை வழங்க கூடிய ஒரு கிராஸ்ஓவராக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் டாட்சனை பொறுத்த வரை, சர்வீஸ் சென்டர்களை அதிகரிக்க தேவையான கால அவகாசம் இனி கிடைக்கும் என்று தோன்றவில்லை. மன்னிக்கவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ரெனால்ட் க்விட் 2015-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience