Renault Kwid மற்றும் Dacia Spring EV: படங்களில் ஒரு ஒப்பீடு
published on பிப்ரவரி 23, 2024 05:36 pm by rohit for ரெனால்ட் க்விட்
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
டேசியா ஸ்பிரிங் EV கார் புதிய ஜென் ரெனால்ட் க்விட் மாடலுக்கான முன்னோட்டத்தை காட்டுகிறது. இது 2025 -ல் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில உலகளாவிய சந்தைகளில் டாசியா ஸ்பிரிங் காரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆல் எலக்ட்ரிக் ரெனால்ட் க்விட் அதன் புதிய மற்றும் அப்டேட்டட் வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியா-ஸ்பெக் க்விட் காரின் வடிவமைப்பில் உள்ளேயும் வெளியேயும் சில மாற்றங்கள் உள்ளன. மேலும் புதிய ஸ்பிரிங் இப்போது என்ட்ரில் லெவல் ஹேட்ச்பேக்கின் புதிய தலைமுறைக்கான முன்னோட்டமாக இது உள்ளது.
இங்கே, இந்தப் படங்களில் இரண்டும் எவ்வளவு வித்தியாசமானவை என்பதைப் பார்ப்போம்:
எக்ஸ்ட்டீரியர்
முன்பக்கம்
ரெனால்ட் க்விட் காரில் சிறிய LED DRL-கள் பெரிய கிரில் கொடுக்கப்பட்டுள்ளது . கீழே, பம்பரில் பெரிய ஹெட்லைட் கிளஸ்டர்கள் மற்றும் பல ஸ்லேட்டுகள் கொண்ட ஏர் டேம் உள்ளது. டேசியா ஸ்பிரிங் புதிய டஸ்டர்Y-வடிவ LED DRLகளுடன் கூடிய நேர்த்தியான கிரில் கொண்ட முன்பக்கத்தை பெறுகின்றது. டாசியா லோகோவை உடன் இரண்டு குரோம் ஸ்ட்ரிப்கள் உள்ளன (இது EV -யின் சார்ஜிங் போர்ட்டையும் உள்ளடக்கியது) மையத்திலும் உள்ளது. இப்போது சிறியதாகவும் கூர்மையாகவும் இருக்கும் அதன் ஹெட்லைட் கிளஸ்டர்கள் இன்னும் பம்பரின் இருபுறமும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கோணத்தில், புதிய டேசியா ஸ்பிரிங் உடன் ஒப்பிடும் போது, இந்தியா-ஸ்பெக் க்விட்டின் மிகவும் பழைய தோற்றத்தில் இருப்பது தெரியும்.
பக்கவாட்டு தோற்றம்
இந்தியா-ஸ்பெக் க்விட் மற்றும் ஸ்பிரிங் EV ஆகிய இரண்டும் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது ஒரே போல இருக்கிறது. க்விட் அதன் சக்கரங்களுக்கு டூயல்-டோன் பெரிய கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஸ்பிரிங் பிளாக் கவர்களுடன் 15 இன்ச் சக்கரங்களுடன் வருகிறது. மேலும் சிறப்பான ஏரோடைனமிக் -கிற்காக இந்த காரில் ரூஃப் ரெயில்கள் அகற்றப்பட்டுள்ளன. ஸ்பிரிங் க்விட்டை விட ஸ்கொயர் ஆஃப் வீல் ஆர்ச்சுகளையும் கொண்டுள்ளது.
பின்புறம்
பின்புறத்தில், க்விட் ஒரு எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, ரெனால்ட் லோகோவில் உள்ள பின்புற கேமராவுடன் சில பேட்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு பெரிய பிளாக் பம்பரையும் பெறுகிறது. டேசியா ஸ்பிரிங் இவி -க்கு வரும்போது, முன் LED DRL -கள் டிசைனை போலவே ஒய் வடிவ டெயில்லைட்கள் உள்ளன. அவை ‘டேசியா’ பிராண்டிங்கை கொண்ட பெரிய பிளாக் எலமென்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் அதிக சந்தை தோற்றத்தை உருவாக்குகின்றன.
மேலும் பார்க்க: 2024 Renault Duster அறிமுகமானது: என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்
உட்புறம்
உள்ளே, க்விட் பழையதை போன்ற தோற்றத்தையே கொண்டுள்ளது. இதன் கேபின் முழுக்க முழுக்க பிளாக் தீம் மற்றும் டேஷ்போர்டின் பயணிகள் பக்கத்தில் உள்ள ‘க்விட்’ என்ற எழுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இது பழைய ரெனால்ட் போலவே ஸ்டீயரிங் மற்றும் இப்போது கிளைமேட் கன்ட்ரோலை கொண்டுள்ளது. மறுபுறம் டேசியா ஸ்பிரிங் கேபின் வடிவமைப்பின் அடிப்படையில் ஒரு பெரிய படி மேலே உள்ளது மற்றும் நவீன ஸ்டீயரிங் மற்றும் மத்திய ஏசி வென்ட்களில் Y- வடிவ இன்செர்ட்கள் உட்பட பல விஷயங்கள் டஸ்ட்டருடன் பல ஒற்றுமைகள் உள்ளன. இது கிளைமேட் கன்ட்ரோலுக்கான பிஸிக்கல் பட்டன்கள் மற்றும் ரோட்டரி டயல்களையும் கொண்டுள்ளது.
வசதிகள்
ரெனால்ட் தனது ஹேட்ச்பேக்கை 2024 ஆம் ஆண்டிற்கான 8-இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட் உடன் கொடுக்கின்றது, டேசியா EV பெரிய 10-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. புதிய கார் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டை பெறுவதால் ஒரு படி மேலே உள்ளது.
இரண்டிற்கும் இடையேயான மற்றொரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், க்விட் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வழங்கப்பட்டுள்ளது, அதேசமயம் ஸ்பிரிங் EV ஆனது 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கிறது.
இரண்டும் ஆல் பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி மற்றும் டே/நைட் ஐஆர்விஎம் போன்ற பொதுவான அம்சங்களை பெறுகின்றது.
மேலும் படிக்க: இந்தியாவில் மீண்டும் வரும் மிட்சுபிஷி நிறுவனம்… ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல
பாதுகாப்பு வசதிகள்
ரெனால்ட் க்விட் ஆனது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், அடிப்படை டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ரிவர்சிங் கேமரா போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. எப்படியிருந்தாலும், அதன் ஐரோப்பிய EV உடன்பிறப்பு, சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை பெறுகிறது, இதில் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) மற்றும் டிரைவர் அலெர்ட்டிவ்னெஸ் வார்னிங், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸிங் கேமரா போன்ற அடிப்படை வசதிகளுடன் இருக்கும்.
பவர்டிரெய்ன் விவரங்கள்
ரெனால்ட் இந்தியா-ஸ்பெக் க்விட்டை 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (68 PS/91 Nm), 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் வழங்குகிறது. மறுபுறம், டேசியா ஸ்பிரிங் 26.8 kWh பேட்டரி பேக்குடன் WLTP கிளைம்டு 220 கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது. டேசியா டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் ஆப்ஷனை வழங்குகிறது: 46 PS மற்றும் 66 PS. 30 kW DC சார்ஜரை 45 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை EV -யை ஃபாஸ்ட் சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
ரெனால்ட் க்விட் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரை. ஸ்பிரிங் EV ஆனது புதிய ஜென் க்விட் மாடலை முன்னோட்டமிடுவதால், 2025 ஆம் ஆண்டில் ரெனால்ட் இதை இங்கு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை ரூ. 5 லட்சத்தில் தொடங்கும். க்விட் -ன் போட்டியாளர்கள் மாருதி ஆல்டோ கே10 மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ.
மேலும் படிக்க: ரெனால்ட் KWID AMT