ரெனால்ட் க்விட்டிலும் AMT: விரைவில் இடம் பெற வாய்ப்பு
published on செப் 01, 2015 04:15 pm by manish for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் குழுவில் ஏற்கனவே பல கார்கள் இணைந்துள்ள நிலையில், புதிய போட்டியாளராக மற்றொரு காரும், இக்குழுவில் சேர தயாராக உள்ளது. AMT (ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) பொருத்தப்பட்ட தனது வாகனங்களை, இனி நடைபெற உள்ள பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்த ரெனால்ட் நிறுவனம் தயாராக உள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் தாங்கி வரும் ரெனால்ட் தயாரிப்புகள் ‘ஈசி-R’ என்று அழைக்கப்படலாம். இந்த தொழில்நுட்பத்திற்கு ரெனால்ட் வாகனங்களில் இடத்தை பிடிக்கவும், பிரபலமடையவும் தக்க வகையில், அதற்கென கால அவகாசம் தேவைப்படலாம். இந்நிலையில் இந்நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்ட்டான ரெனால்ட் டாசியாவில், இந்த AMT தொழில்நுட்பம் முதல் முறையாக பயன்படுத்தப்பட உள்ளது.
ஐரோப்பிய சந்தைகளை பொறுத்த வரை புதிய லோகன், லோகன் MCV, டாசியா சான்டிரோ மற்றும் சான்டிரோ ஸ்டேப்வே ஆகிய மாடல்கள், முதல் முறையாக ஈசி- R கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது. ரெனால்ட் க்விட்டின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பதிப்பிற்கான பணிகள் கூட நடைபெற்று வருகிறது. ஆனால் தரமான MT ரெனால்ட் க்விட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிறகே, மேற்கூறியது அறிமுகமாகும். இந்த காரின் கியர்பாக்ஸுக்கான சென்டர் கான்சோலில் ஒரு புதுமையான ரோட்டரி நாப் அம்சத்தைக் கொண்டுள்ளது. இதிலிருந்து கையால் மாற்றும் தேர்வு முற்றிலும் நீக்கப்பட்டதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது. இதை மாருதி மற்றும் டாடா நிறுவனங்கள் வழங்கும் AMT வாகனங்களில் வழக்கமாக பார்க்க முடிகிறது.
0 out of 0 found this helpful