ரினால்ட் கிவிட் விநியோகம் ஆரம்பம்: முன்பதிவு செய்தவர்களுக்கு களிப்பூட்டும் செய்தி
published on அக்டோபர் 14, 2015 05:32 pm by nabeel for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- 15 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஹாட்ச்பேக் வகை ரினால்ட் கிவிட் காரின் அடிப்படை மாடலின் விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அபரிதமான 25,000 முன்பதிவுகளை பெற்று, கிவிட்டின் வாடிக்கையாளர்கள் பட்டியல் மிகவும் நீண்டு உள்ளதால், இரண்டு மாதங்கள் வரை சிலர் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் இந்த ஹாட்ச் பேக் காரின் விநியோகம், மெட்ரோ நகரங்களில் முழு வீச்சுடன் நடைபெறும். அடுத்து வரும் வாரங்களில், இதை மற்ற நகரங்களில் எதிர்பார்க்க முடியும். இந்த ஹாட்ச் பேக் காரை இப்போது முன்பதிவு செய்தால், வரும் 2016 ஜனவரி மாதத்தில் விநியோகிக்கப்படும் என்ற தகவலை, ஜெய்பூரில் உள்ள ஒரு ரினால்ட் விநியோகிஸ்தர் உறுதி செய்துள்ளார். செப்டெம்பர் மாதம் 24 ஆம் தேதி இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இதன் முன்பதிவு எதிர்பாராத வகையில் மலை போல் குவிய தொடங்கியது. இதற்கு முன்பு, விற்பனையில் மாபெரும் சாதனை படைத்த மாருதியின் அல்டோ 800 காரின் சாதனையை முறியடித்து, ரினால்ட் இந்தியா நிறுவனத்தின் கிவிட் கார் புதிய சாதனையை படைத்துள்ளது.
ரினால்ட் கிவிட்டின் மாபெரும் வெற்றி - மாருதி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களை தள்ளுபடி வழங்கத் தூண்டுகிறது வியக்கத்தக்க முறையில், ரினால்ட் கிவிட் காருக்கு ரூ 2.57 லட்சம் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, 98 சதவிகிதம் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப சீர்செய்யப்பட்டு, கிவிட்டின் விலை ரூபாய். 3.53 லட்சம் (புதுடெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாக) வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கிவிட்டின் செயல்திறன் பற்றி பேசும் போது, இந்த ஆரம்ப நிலை ஹாட்ச் பேக், 54 PS சக்தியையும், 72 Nm டார்க் மற்றும் நிகரற்ற 25.17 kmpl மைலேஜ் தரவல்ல இன்லைன் 3-சிலிண்டர், 800 cc இஞ்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது. இதனுடன் 5-ஸ்பீட் கைமுறை ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டு இருப்பதால், இந்த காரில் தினம்தோறும் பயணம் செய்வது, இனிமையாகவும், இன்பமாகவும் தொடர்ந்து இருக்கும்.
அற்புதமான களிப்பூட்டக்கூடிய உபகரணங்கள் அடங்கிய மிக நீண்ட பட்டியலை ரினால்ட் வழங்கியுள்ளது. இவை, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இந்த காரை மாற்றியமைக்கவும் தனித்தன்மையுடன் வடிவமைக்கவும் உதவுகின்றன. இதன் குறைந்த விலை காரணமாக, மிக அதிகமான வாடிக்கையாளர்கள் கூடுதலாக சில குரோமிய வேலைப்பாடுகளைச் சேர்த்து, இந்த காரை மேலும் அழகுபடுத்துவதற்கு ஆயத்தமாக இருக்க நேர்ந்தால், அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
ரினால்ட் கிவிட் வகைகளின் சிறப்பம்ஸ பட்டியல்
சரியான ஹாட்ச் பேக் காரைத் தேர்ந்தெடுக்க உதவும் குறிப்புகள்
ஒப்பீடு : ரினால்ட் கிவிட் vs. ஆல்டோ 800 vs. ஆல்டோ K 10 vs. GO vs. EON
அதிகம் விவரம் அறிய: கிவிட் காரின் ஆச்சர்யமூட்டும் விலை