ரெனால்ட் க்விட் விலை - எங்கே தொடங்கப் பட வேண்டும்?
published on செப் 23, 2015 04:40 pm by raunak for ரெனால்ட் க்விட் 2015-2019
- 11 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஆல்டோ 800 கார்களை வேட்டையாடி A பிரிவு அரியணையை கைப்பற்றும் முனைப்பில் க்விட் கார்கள் களம் காணுகின்றன. க்விட் கார்களின் அறிமுக நாள் நெருங்கி வரும் இவ்வேளையில் வேட்டையாடப்போவது யார் , வேட்டையாடப்படபோவது யார் என்பது நமக்கு வெகு விரைவில் தெரியவரும்.
ஜெய்பூர்: ரெனால்ட் நிறுவன தயாரிப்புகளில் புத்தம் புதிய வரவாக க்விட் கார்கள் இந்திய வாகன சந்தையில் அறிமுகமாகிறது. SUV போன்ற கம்பீரமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார்கள் A பிரிவில் மிகவும் தேவைப்பட்ட அடிப்படை மற்றும் நடைமுறைக்குகந்த வடிவமைப்பு கோட்பாட்திற்கு ஒரு அற்புதமான மேம்பாட்டை வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்திற்கு அளித்து ஆல்டோ 800 கார்களுக்கு சவால் விடுகிறது. இந்திய வாகன சந்தையில் ஆரம்ப நிலை ( என்ட்ரி லெவல்) கார்கள் பிரிவில் அழுத்தமாக தடம் பதிக்கும் முயற்சியாக ரெனால்ட் நிறுவனத்தின் இந்த முயற்சி வர்ணிக்கப்படுகிறது. ஆல்டோ 800 கார்களுடன் மோதி வெற்றிகொள்வது அதனை சுலபமான காரியம் இல்லை என்றாலும் இந்த பிரிவு கார்களிலேயே முதல் முதலாக க்விட் கார்களில் தான் தொடுதிரை இந்போடைன்மென்ட் சிஸ்டம் , ஸ்போர்டியான முழுதும் டிஜிடல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் , மற்றும் பலதரப்பட்ட தேவைகேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய ஏட் - ஆன் அக்ஸசரீஸ்கள் போன்ற சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டு " வெற்றி எனக்கே " என்று மார் தட்டுகிறது க்விட். மேலும் எது க்விட் கார்களின் சரியான விலையாக இருக்கமுடியும் என்று நிர்ணயிக்க தற்போது இந்த எ பிரிவில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கார்களுடன் க்விட் கார்களை ஒப்பிட்டு நாங்கள் தயாரித்துள்ள ஒப்பீட்டை கீழே பாருங்கள்
0 out of 0 found this helpful