ரெனால்ட் க்விட் கார்களின் வரவு , மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களை தங்களது தயாரிப்புகள் மீது சிறப்பு சலுகைகளை வழங்க நிர்பந்திக்கிறது.
published on அக்டோபர் 13, 2015 10:30 am by manish for ரெனால்ட் க்விட் 2015-2019
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
ரெனால்ட் க்விட் அறிமுகமான போது மற்ற பிரபல இந்திய கார் தயாரிப்பாளர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு காரணம் , அதன் பிரிவில் எந்த ஒரு காருடனும் ஒப்பிடக் கூட முடியாத அளவுக்கு க்விட் ஏராளமான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. .ஆரம்ப விலை ரூ. 2.57 லட்சங்கள் (எக்ஸ் - ஷோரூம் டெல்லி ) என்றும் அதிகபட்சமாக அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய டாப் - எண்ட் மாடல் 3.5 லட்சங்கள் (எக்ஸ் - ஷோரூம் டெல்லி ) என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த குறைவான விலை மற்றும் எதிர் வரும் பண்டிகை காலத்தை மனதில் கொண்டு , போட்டி கார் தயாரிப்பாளர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு ஏராளமான சலுகைகளையும் , விலை தள்ளுபடியையும் செய்யத் தொடங்கி உள்ளனர். இந்த வரிசையில் , இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் தனது ஆல்டோ 800 கார்களின் மேல் ரூ. 35,000 வரை விலை தள்ளுபடி செய்துள்ளது. மாருதி நிறுவனத்தை தொடர்ந்து ஹயுண்டாய் நிறுவனமும் தன்னுடைய இயோன் ஹேட்ச்பேக் பிரிவு கார்களில் ரூ. 37,000 வரை தள்ளுபடி செய்துள்ளது.
இதையும் படியுங்கள் : ஒப்பீடு : ரெனால்ட் க்விட் vs ஆல்டோ 800 vs ஆல்டோ K10 vs கோ vs இயான்
பண்டிகை நேரங்களில் விழாக் கால சிறப்பு தள்ளுபடிகளை கார் தயாரிப்பாளர்கள் அறிவிப்பது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை என்றாலும் , மாருதி தற்போது விற்பனையில் முன்னணியில் இருக்கும் தனது தயாரிப்பின் மீது 14% வரை தள்ளுபடி தருவதற்கு ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார்கள் பெற்றுள்ள அசாத்தியமான வரவேற்பும் வெற்றியும் தான் ஒரே காரணம் என்பதை நாம் நன்கு புரிந்துக் கொள்ள முடிகிறது. அறிமுகமான ஒரு மாத காலத்திற்குள் 25000 க்விட் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி நிச்சயம் மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவன தலைமையை தூங்கவிடாமல் செய்துள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அதிகமாக பழுதுப்படாது என்று தங்கள் தொழில்நுட்பத்தின் மேல் கொண்டுள்ள அசைக்க முடியா நம்பிக்கையை தற்பெருமையுடன் பறைசாற்றும் விதத்தில் குறைந்த அளவே சர்வீஸ் உட்கட்டமைப்பு வசதிகளை ரெனால்ட் நிறுவனம் நிறுவி இருந்தாலும் கணிசமான பங்கை (மார்கெட் ஷேர்) க்விட் கார்கள் பெற்றுவிட்டன என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.
ரெனால்ட் க்விட் பர்ஸ்ட் டிரைவ் இங்கே பாருங்கள்
0 out of 0 found this helpful