ரெனால்ட் க்விட் காரின் வெற்றிப் பயணத்தின் உண்மை பின்னணி வெளியானது!
published on பிப்ரவரி 02, 2016 02:39 pm by manish for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஏற்கனவே 85,000 யூனிட்களுக்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று அதிசயத்தை நிகழ்த்தியுள்ள ரெனால்ட் க்விட் கார், புத்திகூர்மைக்கான அடித்தளத்தை அமைத்து, ஆட்டோமொபைல் சிறப்பின் மறுவடிவமாக உருவாகி, வாகனத் தயாரிப்பு உலகினால் எட்டி சேர கடும் உழைப்பை செலுத்த வேண்டிய இடத்தை அடைந்துள்ளது. இந்த துவக்க நிலை ஹேட்ச்பேக்கிற்கான உற்சாகம் நிரம்பி வழியும் விகிதத்திற்கு வளர்ந்து, இந்த பிரான்ஸ் நாட்டு வாகனத் தயாரிப்பாளர் மூலம் அதன் கிராஸ்ஓவர் ஹேட்ச்களுக்கான முன்பதிவுகளை பல்வேறு கட்டங்களில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இந்த அளவிற்கு க்விட் காரை சிறப்பாக அமைத்தது என்ன? என்பது குறித்த ஒரு கண்ணோட்டத்தை காண்போம்.
ஆற்றலகம்:
இந்த சிறிய 799cc பெட்ரோல் ஆற்றலகம், செயல்திறனை காட்டும் போது, நமது எதிர்பார்ப்புகளையும் கடந்து செயலாற்றுகிறது. பெட்ரோல் யூனிட் மூலம் வல்லமைமிக்க 53bhp ஆற்றலை வெளிப்படுத்தி, நம் எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது. இது, அதன் முக்கிய போட்டியாளரான ஹூண்டாய் இயானின் ஆற்றல் வெளியீட்டை விட சற்று குறைவான bhp-களில் மட்டுமே வேறுபடுகிறது. அதே நேரத்தில் சந்தையின் முன்னணி தயாரிப்பான மாருதி ஆல்டோ 800 உடன் ஒப்பிடும் போது, ஜப்பான் வாகனத் தயாரிப்பாளரின் வெளியீட்டை விட 6bhps அதிக ஆற்றலை வெளியிட்டு க்விட் முன்னணி வகிக்கிறது. இதையெல்லாம் தவிர, விலை மதிப்புள்ள என்ஜினை கொண்டுள்ள சிறிய காரான க்விட், இந்த பிரிவிலேயே சிறப்பான மைலேஜ்ஜான லிட்டருக்கு 25 கி.மீ. என்ற அளவில் எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது.
தோற்றம்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வருங்கால கார் உரிமையாளரின் மனவிருப்பத்தையும் மூலதனமாக எடுத்துக் கொண்ட ரெனால்ட் நிறுவனம், அவர்களுக்கு ஒரு துவக்க நிலை ஹேட்ச்சை அளித்துள்ளது. இதன்மூலம் ஒரு பெரிய காரை வாங்க வேண்டும் என்ற அவர்களின் ஆசையின் மறுவடிவமாக இது நிற்கிறது. SUV ஸ்டைலிங், கிளாடிங்கின் இனிமையான பயன்பாடு அளிப்பு, உயர் கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் கவர்ச்சிகரமான நிறத்திட்டங்கள் ஆகியவை மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் இதயத்திற்குள் இந்த கார் இடம் பிடித்துள்ளது.
சிறப்புத் தன்மைகள்:
இந்த குட்டி ஹேட்ச்பேக் வெளிபுறத்தில் மட்டும் கவர்ச்சிகரமானது அல்ல. நீங்கள் இந்த கார் கேபினிற்குள் காலை எடுத்து வைத்தவுடன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், AC கன்ட்ரோல்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் உள்ளிட்ட வசதிகளை கொண்டு, ஒப்பீட்டில் இந்த காரை கணிசமான அளவில் பிரிமியமாக உணர வைக்கிறது.
கிரெய்ட்டர் நொய்டா பகுதியில் அடுத்து நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், இந்த சிறப்புகளுடன் கூடிய க்விட் காரின் சிறப்பு பதிப்புகளை, பிரான்ஸ் நாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது. இந்த சிறப்பு பதிப்பு வகைகளில், இந்த ஹேட்ச்பேக்கின் மேம்பட்ட 1-லிட்டர் பதிப்பும் உட்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ABS தேர்வும் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கண்காட்சியில் AMT க்விட் வகைகளையும் ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டு, அது பார்வையாளர்கள் இடையே எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அறிய நினைக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful