க்விட் காரின் வெற்றியில் ரெனால்ட் மகிழ்ச்சி (இதோடு க்விட்டின் விர்ச்சூவல் ஷோரூம் இணைக்கப்பட்டுள்ளது)
published on அக்டோபர் 31, 2015 01:06 pm by manish for ரெனால்ட் க்விட் 2015-2019
- 11 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ரெனால்ட்-நிசான் கூட்டணியின் CEO கார்லஸ் கோஸ்ன் கூறுகையில், ரெனால்ட் க்விட் காருக்கு இந்தியாவில் கிடைத்துள்ள வரவேற்பை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும், இந்திய பங்கு சந்தையிலும் இந்த வரவேற்பு பிரதிபலிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும், இந்த விருப்பம் ரெனால்ட் இந்தியா அணிக்கும் உள்ளதாக கூறினார். 2015 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வாகன சந்தை என்ற வகையில், உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது, எடுத்துக்காட்டாக 7-8%. இதிலிருந்து இந்தியாவில் ரெனால்ட் இந்தியாவின் எதிர்கால வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.
திரு.கோஸ்ன் மேலும் கூறுகையில், இந்தியா சந்தை மிகவும் சிக்கலானது என்பதால், அதை புரிந்துக் கொள்ள அதிகபடியான கவனமும், உன்னிப்பும் தேவை. இந்த புரிந்து கொள்ளும் தன்மையை பெறுவதற்கு, நம் நாட்டில் அந்நிறுவனம் இன்னும் ஆழ்ந்து இறங்கி சென்று, இதோடு இணைந்து கொண்டு, இதன் மூலம் கிடைக்கும் சோதனைகளையும், பிழையான அணுகுமுறைகளை வைத்து பணியாற்ற வேண்டும். இதன் விளைவாகவே, ரெனால்ட் க்விட்டிற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் கருதுகிறார்.
நிசான் மற்றும் ரெனால்ட் போன்ற சிறிய நிறுவனங்கள் அளிக்கும் வளர்ச்சியின் விளைவாக, சந்தை பங்குகளில் நான்கில்-மூன்று பங்கை இரண்டு வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமே கட்டுப்படுத்தி வருகிறார்கள் என்ற நம்பிக்கையை இந்தியன் இடியோஸின்கிரேஸி ஏற்படுத்துகிறது என்று அவர் கருதுகிறார். கோஸ்ன் மேலும் கூறுகையில், சந்தையின் சூழ்நிலை எப்படி இருந்தாலும், வளர்ச்சியை எட்ட வேண்டுமானால், கிராஸ்ஓவர் பிரிவினால் அளிக்கப்படும் சாத்திய கூறுகளை குறித்து ஒருவர் ஆராய்ந்தாலே போதுமானது என்றார்.
ரெனால்ட் நிறுவனத்தின் சமீபகால தயாரிப்பான க்விட், கடந்த மாதம் சர்வதேச அளவில் ரூ.2.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) என்ற துவக்க விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, அதன் முன்பதிவில் எதிரொலித்து, RXE(O), RXT(O) ஆகிய வகைகளுக்கு 50,000 முன்பதிவுகளை கடந்ததால், தரமான வகைகளுக்கு முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
நம் நாட்டின் சில பகுதிகளில், இந்த காருக்கான காத்திருப்பு காலத்தை 6 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த க்விட் காரின் அறிமுகத்திற்கு முன்பாக, ரெனால்ட் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மிகவும் வெற்றிகரமான மாடலாக இருந்தது. தற்போது இந்த ஹேட்ச்பேக்கின் அறிமுகம் மூலம், இந்த வாகன தயாரிப்பாளருக்கு நம் நாட்டில் ஒரு வளமான எதிர்காலம் இருப்பதாக தெரிகிறது.
க்விட் விர்ச்சூவல் ஷோரூமை பார்வையிடுவதன் மூலம், இந்த காரை பார்வையிடவும், மற்ற அனைத்து டீலர்ஷிப் தகவல்களையும் பெறவும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகிறது. இது போன்ற ஒரு வசதியை வாடிக்கையாளர்களுக்கு, இந்தியாவில் அளிக்கும் முதல் வாகன தயாரிப்பாளர் இதுவே ஆகும்.
பார்வையிடுங்கள்: ரெனால்ட் க்விட் விர்ச்சூவல் ஷோரூம்
மேலும் படிக்க:
0 out of 0 found this helpful