சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதுப்பொலிவூட்டப்பட்ட டொயோட்டா எடியோஸ் லிவா அறிமுகம்

published on அக்டோபர் 16, 2015 04:54 pm by raunak for டொயோட்டா இடியோஸ் லீவா

புதுப்பொலிவடைந்த லிவா, இரண்டு வித வண்ணங்கள்; டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள்; புதுவித உட்புற அமைப்பு; மற்றும் கவர்ச்சியான இருக்கை மற்றும் விதான விரிப்புகள் போன்ற சிறப்பம்ஸங்களுடன், களத்தில் இறங்குகிறது. லிவாவின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையானது, பெட்ரோல் ரகத்திற்கு ரூபாய். 5.76 லட்சம் மற்றும் டீசல் ரகத்திற்கு ரூபாய். 6.79 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி பொங்கும் இப்பண்டிகைக் காலத்தில், டொயொட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், தனது மேம்படுத்தப்பட்ட எடியோஸ் லிவா காரை போட்டி களத்தில் இறக்குகிறது. இன்று முதல், இந்தியாவில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களின் ஷோரூமிலும், இந்த புதிய கார் கிடைக்கும்.

புதிய மேம்பாடுகள் யாவை?

புதுப்பிக்கப்பட்ட லிவா இரண்டு வண்ணங்களைத் தன் வடிவத்தில் கொண்டு, காண்பவர்களைக் கவர்கிறது. மேலும் இந்நிறுவனம், இருவேறு நிறத் தெரிவுகளில் புதிய லிவாவை அறிமுகப்படுத்துகிறது, அதாவது, வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனினும், தேர்ந்தெடுத்த நிறத்துடன், அனைத்து கார்களிலும் பளீரென்ற கறுப்பு நிற விதானம் இடம்பெற்றுள்ளது. விளக்கமாக கூற வேண்டுமென்றால், மேற்கூரை; முன்புறத்தில் உள்ள கிரில்; ORVM (வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பின்வரும் வாகனங்களைப் பார்க்க உதவும் கண்ணாடி); மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் போன்ற அனைத்து பகுதிகளும் கருப்பு நிறத்தில் வரும். ஏனைய பகுதிகள், வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் வரும்.

185/60 க்ராஸ்-செக்ஷன் மற்றும் 15 அங்குல ரேடியல்களைக் கொண்ட புதிய டயமண்ட் கட் அலாய் சக்கரங்களின் மேல் கம்பீரமாக புதிய லிவா பவனி வரும். உட்புறத்தில், புதிய செயற்கை மரத்திலான வேலைப்பாடு மற்றும் இரண்டு வித வண்ணங்களில் இருக்கை விரிப்புகளும் பெற்று புதுப் பொலிவுடன் வருகிறது.

மேற்சொன்ன அம்ஸங்களைத் தவிர, இதன் ரகத்திலேயே முதல் முதலாக வரும், முன்புறத்தில் உள்ள இரட்டை பாதுகாப்பு காற்றுப் பைகள், திடீரென்று ப்ரேக் போடும்போது இயங்கும் பிரெ-டென்ஷனர் மற்றும் ஃபோர்ஸ் லிமிடர் முன்புற சீட் பெல்ட், ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வழக்கமான புளுடூத்துடன் இணைந்த ஆடியோ சிஸ்டமும் உள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட்டின் மூத்த துணைத் தலைவரான திரு. ஆகிட்டோஷி டக்கெமுரா, புதுப்பிக்கப்பட்ட லிவாவின் அறிமுக விழாவில் பேசும்போது, “வாடிக்கையாளர்களின் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வியல் முறைக்கு ஏற்றவாறு, தொடர்ந்து எங்களது படைப்புகளை புதிப்பித்துக் கொண்டிருக்கவேண்டியது எங்களின் கடமை. 2015 –ஆம் ஆண்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிராண்ட் என்ற பெருமையை எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை எட்டியோஸ் ரக கார்களுக்கு அளித்திருக்கும் இந்த வேளையில், புதிய எடியோஸ் லிவா வாடிக்கையாளர்களை பண்டிகை காலத்தில் மேலும் மகிழ்ச்சியூட்டும் என்பதில் ஐயமில்லை,” என்று அவர் கூறினார்.

பொதுவாக, லிவாவின் இஞ்ஜின் தரத்திலோ செயல்திறனிலோ எந்த வித மாற்றமும் செய்யவில்லை. இதன் பெட்ரோல் ரகத்தில் 1.2 லிட்டர் இஞ்ஜின் மற்றும் டீசல் ரகத்தில் 1.5 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகின்றன. 1197 cc பெட்ரோல் இஞ்ஜின், 5600 rpm –இல், 80 PS குதிரைத் திறனும், 3100 rpm –இல் 104 Nm டார்க்கும் உற்பத்தி செய்கிறது. 1.4 லிட்டர் D4D டீசல் இஞ்ஜின், 3800 rpm –இல் 68 PS குதிரைத் திறனும், 1800 – 2000 rpm –இல் 170 Nm டார்க்கும் உற்பத்தி செய்கிறது. இருவகை இஞ்ஜின்களும் 5 வேக கையியக்க ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க:

டொயோட்டா காம்ரி ஹைபிரிட் 2015 – நிபுணர்களின் மதிப்பாய்வுரை
டொயோட்டா இந்தியா: Q- சர்வீஸ் பண்டிகைக் கால கொண்டாட்ட முகாம் அறிமுகம்

r
வெளியிட்டவர்

raunak

  • 21 பார்வைகள்
  • 2 கருத்துகள்

Write your Comment மீது டொயோட்டா இடியோஸ் Liva

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.5.65 - 8.90 லட்சம்*
Rs.7.04 - 11.21 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை